இங்கே வேறொரு காரியம்:
காயீன் தன்னுடைய மனைவியை தெரிந்து கொள்ள முதலாம் சிருஷ்டிப்பாகிய ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா?
104. இப்பொழுது, இது ஒரு சிக்கலான கேள்வி, ஆகையால் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, ஓ, நான்... “காயீன் எங்கிருந்து தன் மனைவியைப் பெற்றுக் கொண்டான்?” இதை மக்கள் தாள்களில் எழுதுவதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். ஓ நான் அதைக் கூறுவது உண்டு.
105. நான் மனந்திரும்பி நான்கு வருடங்கள் ஆன பிறகும் எரிகின்ற நரகம் ஒன்றுண்டு என்று நான் போதித்ததில்லை. நான் வேதத்திலிருந்து அதைக் காண வேண்டியதாய் இருந்தது. எனக்கு எதுவும் தெரியவில்லை என்றால், அதைக் குறித்து எதையும் நான் கூறமாட்டேன். பாருங்கள்?
106. ஆனால், இப்பொழுது, “காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான்? “இப்பொழுது இக்கேள்விக்கான ஆராய்ச்சி அதுதான், “காயீன் தன் மனைவிக்காக சிருஷ்டிப்பான ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா?” பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, இது முதலாவதான...
107. இந்த திருமதி. டீ ஆர்க், இவர்கள் சுகமானதைப் பற்றியும், எவ்விதம் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் என்றும், மற்றும் எல்லா வற்றையும் நீங்கள் கடந்த இரவு கேட்டீர்கள். அந்த பெண்மணி மரித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சுமார் காலை இரண்டு மணி அளவில் வந்தனர்.
108. ஆகையால், இப்பொழுது, அப்படித்தான் நான் வருவதுண்டு. அவனுடைய மகன் ஜார்ஜ், எட்-ம் கூட மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்கிறவர்களாயிருந்தனர் (அவர்கள் திரும்பக் கொண்டுவர பட்டனர்.) நான் அங்கே ஒரு விவாதத்தை கேட்டேன், அங்கு முதல்... காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான். நல்லது, அங்கு பங்கேற்ற விவாதத்தில் மிகவும் சிறப்பாகக் காணப்படும்படியான விதத்தில் பேசினவன், “காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான் என்று நான் கூறுகிறேன். காயீன் சென்று ஒரு பெரிய பெண் குரங்கை விவாகம் செய்தான், அந்த குரங்கினின்று கறுப்பர் இனம் வெளிவந்தது, நீங்கள் கவனிப்பீர்களானால் கறுப்பர் இனமக்களில் தலை அதைப் போன்று ஒரு குரங்கின் தலையைப் போன்று கூர்மையாக உள்ளது.” என்று கூறினான்.
109. நல்லது, நான் அங்கு நின்று கொண்டிருந்தேன், நான் சுவிசேஷத்தில் இரண்டு மாத வயது கொண்டவனாய் இருந்தேன். நான் “மனிதனே, நான் உன்னுடன் வேறுபாடு கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் நான் ஒரு மாணவன் அல்ல, நான் இப்பொழுதுதான் இரட்சிக்கப்பட்டேன், ஆனால் அது அப்படித்தான் என்றால், கறுப்பர் இனமக்கள், நோவாவின் காலத்து பெருவெள்ளத்தின் அழிவில் (Antediluvian Destruction) அழிந்து போயிருப்பார்கள், உலகமானது தண்ணீரினால் அழிக்கப்பட்டபோது, நோவாவும் அவனுடைய குடும்பம் மாத்திரமே பேழையில் இருந்தது. இக்குடும்பம் ஒன்றுதான் பேழைக்குள் இருந்தது. கறுப்பர் இனமே அழிந்து போயிருக்கும்” என்று நான் கூறினேன். 'அப்படித்தான் இருக்குமென்றால், இல்லை ஐயா! கறுப்பர் இனம் அங்கிருந்து ஒருபோதும் வந்ததே அல்ல. இல்லை ஐயா. நாம் எல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள், கறுப்பர் இனமும், ஒவ்வொரு மனித பிறவியும் ஒன்றே” என்றேன். வித்தியாசம் என்பதே கிடையாது. சரியாக. நாம் எல்லாரும்... ஒருவர் மஞ்சள் நிறம் கொண்டவராயும், மற்றொருவர் பழுப்பு நிறம் கொண்டவராயும், ஒருவர் கறுப்பு நிறம் கொண்டவராகவும், வெள்ளை நிறம் கொண்டவராயும், வேறொருவர் மங்கின நிறம் கொண்டவராயும், இன்னொருவர் சிகப்பு நிறம் கொண்டவராயும் இருக்கலாம், ஆனால் நீங்கள் எல்லாருமே அதே மரத்திலிருந்து வந்தவர்கள். அது இங்குள்ள சரீரபாகம் மட்டுமே ஆகும். அது சரி. அவர்கள் எல்லாரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனித பிறவிகள்தான்.
110. இப்பொழுது, கவனியுங்கள், சில நாட்களுக்கு முன்பு, நான் இங்கே நின்று கொண்டிருந்தேன். லூயிவில்லிருந்து சில மருத்துவர்கள் வந்திருந்தனர். ஆப்பிரிக்காவிலுள்ள அந்த ஏழை ஜனங்கள் எப்படி என்பதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். மனித இனத்தை தின்னுகிற வகையினர் எப்படி அங்கிருந்த ஒரு ஸ்திரீ ஒரு சிறிய குழந்தையை எடுத்து - அதை அடித்து... வேலியில் தொங்க விட்டு சில நாட்களுக்கு அதை அழுக விடுவார்கள், அது சிறிதாக அழுக ஆரம்பிக்கும் போது அதைத் தின்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைப்போன்ற ஏதாவதொன்றை அவர்கள் சிறிது அழுகிப்போக விடுவார்கள். அது மிருதுவாகும்.
111. மனித இனத்தை தின்னும் வகையினரைப் (Cannibals) பற்றியே அதிகம் நினைக்காதீர்கள். இங்கிலாந்திலும் அதே போன்றுதான் செய்கின்றனர், அவர்கள் நெடுவால் பகட்டு வண்ணக் கோழிவகைகளைக் (Pheasants) கொன்று அதை மரத்தில் தொங்கவிடுகின்றனர், அதன் இறகுகள் கீழே விழ ஆரம்பிக்கும்போது அவைகளை சாப்பிடுகின்றனர். அது ஆங்கிலோ-சாக்ஸன் இனத்து மக்களின் தாய் இனமாகும், அது இங்கிலாந்தின் பழங்குடியினர் - நீங்கள் எண்ணவேண்டாம். நீங்கள் இங்கிலாந்திற்கு செல்லவேண்டாம், நீங்கள் தென் மாநிலங்களுக்கு சென்று அதே காரியத்தை நீங்கள் காணலாம். நிச்சயமாக. எந்த ஒரு மனிதனும் ஒரு நத்தையையோ, அல்லது ஒரு பாம்பையோ, அல்லது ஏதாவதொன்றையோ உண்ணமுடியும். ஆம்...
112. இப்பொழுது கவனியுங்கள், இதை நான் உங்களுக்கு கூறட்டும். இங்கே நடந்தது இதுதான். கறுப்பர்... கறுப்பர் இனம் இதனுடன் செய் வதற்கு ஒன்றுமில்லை. காயீன்...
113. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்கள் “அவன் நோத் என்னும் தேசத்திற்கு சென்றான்” என்றனர். இப்பொழுது, காயீன் ஏதேனில் இருந்தான். ஏதேன் தோட்டம், ஏதேனிற்கு கிழக்கில் இருந்தது. ஏதேனிற்கு கிழக்கு, அது சரியா? கேருபீன்கள் அங்கு வைக்கப்பட்டது, ஜீவ விருட்சம் தோட்டத்தின் கிழக்கு வாசலில் இருந்தது, அங்கேதான் காயீனும் ஆபேலும் தங்கள் பலிகளைச் செலுத்தினர் என்று நான் எண்ணுகிறேன். அங்கேதான் சுடரொளிப் பட்டயத்தை வைத்திருந்த கேரூபின் வாசலின் கிழக்கே இனிமேலுமாய் அவர்களை உள்ளே விடாமல்தடுத்தது!
114. நீங்கள் கவனித்தீர்களா, இயேசு கிழக்கிலிருந்து வருவார். வெளிச்சம் கிழக்கிலிருந்து உதிக்கின்றது. எல்லாம் வருகின்றது... நாகரீகம் கிழக்கில் துவங்கி மேற்கு பிரயாணித்து சுற்றிச் சென்று அதே இடத்தை அடைகின்றது. நாம் நிலவுலக மேற்கு அரைக் கோளத்தில் இருக்கின்றோம். அது கிழக்கு, கிழக்கு பழமையான நாகரீகம் ஆகும். வரலாற்று அறிஞர்களுக்கு தெரிந்தவரை சீன நாகரீகம்தான், இன்றைக்கு உலகத்திலேயே மிகவும் பழமையானது. கிழக்கு!
115. ஓ, இக்கேள்விகளின் பேரில் மணிக்கணக்கில் நாம் தங்கியிருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களின் கேள்விகளைப் பார்க்க முடியாது. இங்கே கவனியுங்கள்... நாம் காயீனைக் குறித்தும் காயீனுடைய மனைவி யார் என்றும், எங்கிருந்தவள் என்றும் நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை எத்தனைப் பேர் அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? நாம் இப்பொழுது பார்க்கலாம். அது சரி. காயீன் என்ன செய்தான் என்பதை நான் கூறுகிறேன், அது தான் சரியான பதிலாக நீங்கள் காணக்கூடும்: காயீன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணந்தான். அவன் அப்படி செய்ய வேண்டியதாயிற்று, ஏனென்றால் அப்பொழுது பூமியில் ஒரு பெண் மாத்திரமே இருந்தாள்; மூன்று பேர் பிறந்தனர் என்று வேதம் கூறு கின்றது. காம் சேம்... இல்லை... என்னை மன்னிக்கவும், அது காயீன், ஆபேல், சேத் ஆகும். ஆனால் அங்கு யாருமே... ஒரு பெண்ணின் பிறப்பைக் குறித்து வேதம் எப்போதுமே குறித்துக் காட்டுவதில்லை. நீங்கள் அதை அறிவீர்கள்.
116. இப்பொழுது, இன்றிரவு நான் ஸ்திரீகளைக் குறித்து பேச நிச்சயப்படுகிறேன். ஆனால் பாருங்கள், உலகமானது ஸ்திரீயை வழிபடுகிறது, ஆனால் ஆதியிலிருந்தே ஸ்திரீயானவள் சாத்தானுடைய கருவியாக இருக்கின்றாள். இன்றைக்கு நல் ஒழுக்கம் குன்றிய ஒன்றைத்தான் அவன் சிறந்த கருவியாகப் பெற்றிருக்கிறான். அங்கே உலகத்தில் உள்ள எல்லா திருட்டு வியாபாரக் குழுக்களைக் காட்டிலும் இன்னும் அதிகமான பிரசங்கிகளை அவள்தான் நரகத்திற்கு அனுப்பிவிடுவாள். ஒரு துடுக்கான பெண் தன் வாயின் முனையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, அதைப் போன்று மயிரை வெட்டிக் கொண்டு, நீண்ட பெரிய கண் மையிட்டுக் கொண்டு மேலும் கீழுமாக கண்ணடித்துக் கொண்டு, சகோதரனே, ஒரு சிறிய... அழகாகக் காணப்படுகின்ற உடலமைப்பைப் பெற்றிருப்பாளானால், அவள் என்ன செய்வாள் என்பதைக் கவனியுங்கள்.
117. பிரசங்கியே, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மூடிக்கொள்வாயானால் நலமாயிருக்கும். அது சரி. நான் ஒரு மனிதன் என்று, இப்பொழுது நீ எனக்கு ஒன்றும் கூறாதே, நான் அதைக் குறித்து நிறையவே பார்த்து விட்டேன். இப்பொழுது, இங்கே கவனியுங்கள்; உங்கள் சிந்தையை இயேசு கிறிஸ்துவின் மேல் மையம் கொள்ளச்செய்து, உங்கள் சிந்தனையை தூய்மையாக வைத்திருப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம் ஆகும்.
118. பவுல் அங்கே கூறினது போல... பவுல், “அது... ஒரு சகோதரியை கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கு அதிகாரம் உண்டென்று நீங்கள் அறிவீர்கள். அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால், நான் அதைச் செய்யமாட்டேன்” என்றான். பாருங்கள், அவன் அதைச் செய்யவில்லை. அவன், “ஊழியமானது அவர்களுடைய... சுவிசேஷம் பிழைக்க வேண்டுமென்பதை நான் அறிவேன், போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக,” என்றான்.
119. நாம் பிரசங்கியாயிருப்பதால் நாம் சில சமயங்களில் இவ்வாறு நினைப்பதுண்டு என்று நீங்கள் அறிவீர்கள் (சகோதரனே, அது உங்களையும் என்னையும் குறித்தல்ல) ஆனால் பிரசங்கிமார்கள், தாங்கள் பிரசங்கிகள் என்றும் அவர்கள் சபை அங்கத்தினர்களைக் காட்டிலும் பெரியவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் பெரியவர்கள் அல்ல, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மனம் மாறின குடிகாரனைக் காட்டிலும் தேவனுடைய பார்வையில் நீங்கள் பெரியவர்களும் அல்ல.
120. இதுபோன்ற காரியங்களைத்தான் சீர்திருத்தங்கள் களைந்தெடுக்க வில்லை. “மறைதிரு” என்று நான் என் பெயரை கையொப்பமிடுகிறேன் என்று எனக்குத் தெரியும். அது முற்றிலுமாக இன்றைக்கு ஒரு வழக்கமாக இருக்கின்றது, ஆனால் அவ்விதமாக செய்தல் கூடாது. “மறை திரு”, “பிஷப்”, “டாக்டர்' ஆகிய இவை எல்லாம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பட்டப் பெயர்கள், அவை முட்டாள்தனம்! வேதாகமத்தில் அவைகள் “பேதுரு” “யாக்கோபு”, “பவுல்”, “யோவான்” என்றே இருக்கின்றன. இன்னும் மற்ற எல்லாமும் அவ்வாறே இருக்கின்றன.
121. பவுல், “இப்பொழுது, இங்கே, அது எனக்குத் தெரியும். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன். அது - அது - அது என்னுடைய கடமை” என்றான். நான் ஒரு பிரசங்கி, அவனும் ஒரு பிரசங்கி, சகோதரன் நெவில் ஒரு பிரசங்கி, ஆனால் அது. பிரசங்கியாய் இருப்பது, அது நமது கடமை. நல்லது, நாம் செய்யவேண்டியது... அது மாத்திரமே. “ஆனால் நான் வேறெதாவதைச் செய்யவிடுங்கள்” என்று பவுல் 'அது அதற்கும் மேலானது. இப்பொழுது பணத்தை எடுக்க எனக்கு உரிமை உண்டு, நான் தியாகம் செய்ய முடியும் என்று உங்களுக்குக் காண்பிக்க நான் கூடாரத் தொழில் செய்கிறேன். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயும் இருப்பதாக. ஒரு மனிதன் விவாகம் செய்வது நலமாயிருக்கும். விவாகம் செய்து கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது நான் - நான் விவாகம் செய்து கொள்ள முடியும், விவாகம் செய்துகொள்ள சட்டபூர்வமாக எனக்கு உரிமையுண்டு. ஆனால் நான் விவாகம் செய்துகொள்ளமாட்டேன். கர்த்தருக்கு என்று வேறொரு தியாகத்தை செய்ய நான் விரும்புகிறேன்” என்றான். பாருங்கள்? பிறகு அவன், “ஒவ்வொருவனும் தன்னுடைய அழைப்பை அறிந்திருக்கிறான். அவன் செய்ய... சிலர் தேவனுடைய வார்த்தைக்காக அண்ணகர்களாக உள்ளனர், இன்னுமாக...” என்றான்.
122. நமது கடமைக்கு அப்பாலும் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறோம். நீங்கள் உண்மையாக தேவனுடைய ஆவியினால் மறுபிறப்பு அடைந்தவராயின், “சபைக்கு செல்வது என் கடமை. அதை நான் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்” என்று கூறுவீர்களானால், ஓ, என்னே! நல்லது, நான் அதை விட அதிகமாகச் செய்ய விரும்புகிறேன், நான் கிறிஸ்துவிற்கு சில ஆத்துமாக்களை சம்பாதிக்க விரும்புகிறேன். நான் ஏதாவதொன்றைச் செய்யவேண்டும்! நான் பிணியாளிகளைச் சந்தித்து அவருக்கு ஏதாவதொன்றைச் செய்யவேண்டும். அடக்க ஆராதனையில் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது என்னுடைய கடமை. ஏதாவதொன்றை நான் செய்யட்டும், நான் ஏதாவதொன்றைச் செய்யட்டும், அதன் மூலமாக தேவன் என்னைக் கனப்படுத்தட்டும்.
123. இப்பொழுது காயீனுக்கு திரும்புவோம் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே ஸ்திரீ ஏவாள் ஆகும், ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இல்லாதிருக்கும் பட்சத்தில், அந்த கடைசி பெண், (ஒரே பெண்) மரித்திருப்பாளானால் மானிட இனமே அழிந்து போயிருக்கும். அது சரிதானே? அங்கே இன்னுமாய் பெண்கள் இருந்திருக்கமாட்டார்களே. ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இருந்திருக்கவேண்டும். காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்தான், அவன் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறெந்த வழியிலும் பெண்கள் வந்திருக்க முடியாது.
124. அந்நாட்களில் அது சட்டப்பூர்வமாகவும் நியாயப்பூர்வமாகவும் இருந்தது, ஆபிரகாமுக்கும் சரி, ஈசாக்கிற்கும் சரி. ஈசாக்கு தன்னுடைய சொந்த ரத்தமாகிய மாமன் மகளை மணந்தான். ஆபிரகாம் தன்னுடைய சொந்த இரத்த சம்பந்தப்பட்ட சகோதரியையே மணந்தான். அவன் தகப்பனார்... வித்தியாசப்பட்ட தாய்மார்கள், ஆனால் ஒரு தகப்பன். அணு ஆண்பாலிடத்திலிருந்து தான் வருகிறது. சாராள், அற்புதமான ஈசாக்கை பெற்றெடுத்தாள். அது சரியா? அங்கே அப்போது பூமியில் யாரும் இல்லை.
125. அது எல்லாம் நிழலாயிருக்கின்றன, காண்பித்து... இங்கேயிருக்கிறது சகோதரனே! ஈசாக்கு... ரெபெக்காள், சபைக்கு அடையாளமாய் இருக்கின்றாள், ஈசாக்கு மணவாட்டி, கிறிஸ்துவிற்கு நிழலாயிருக்கின்றான். அது சரிதானே? அவர்கள் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்! அல்லேலுயா! ஆமென்! இரத்த சம்பந்தமான உறவு!
126. ஆகையால் காயீன் தன் சகோதரியை விவாகம் செய்தான், அது... பிறகு அவர்கள் நோத் தேசத்திற்குச் சென்றார்கள். இப்பொழுது, தொடர்ந்து செல்வோமானால், நாம் ஒரு ஆழமான பொருளிற்குச் செல்வோம், நீங்கள் இன்னும் அதற்குமேல் கேட்காததற்கு நான் மகிழ்ச் சியுறுகிறேன். (அந்த தேசத்தில் இருந்த ராட்சதர்கள் எங்கேயிருந்தனர்? போன்றவைகள். ஜோசபஸும் மற்றவரும் அதைக் குறித்து நிறைய விவாதித்தனர்) ஆமென்! சகோதரனே, அதை நான் சரியாக எடுக்க வில்லை யெனில், ஞாயிறு காலையில் மறுபடியுமாக அதை என் கையில் கொடுங்கள். அது சரி.