144. அது சரி. நான்... இங்கே... என் சகோதரனே அல்லது சகோதரியே, இந்த கேள்வியை வைத்த யாராயிருந்தாலும் சரி, நான் உங்கள் மதத்தைக் குறித்து பேசமாட்டான். கிறிஸ்தவ விஞ்ஞானம் என்பது உளவியல் ஆகும். (தெய்வீக சுகமளித்தல் தேவனுடைய வல்லமையாகும்!) கிறிஸ்தவ விஞ்ஞானம் காரியத்திற்கு மேலாக சிந்தையை வைக்கின்றதாகும். கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ விஞ்ஞானம்... இல்லை, திருமதி எட்டி அவர்களின் புத்தகங்களை அங்கே வைத்திருக்கிறேன், நான் அவையெல்லாவற்றையும் படித்தேன். பாருங்கள்? அது சரி, கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலித்து, அவரை ஒரு “தீர்க்கதரிசி” என்று கருதுகிறது. இயேசு கிறிஸ்து ஒரு மனிதன் அல்ல; அவர் தேவனாக இருந்தார்! அவர் தெய்வீகமானவராக இருந்தார்! ஆகவே அவர்கள் அதை காரியத்திற்கு மேலாக சிந்தைவைப்பது என்றே நினைக்கின்றனர்.
145. என்னுடைய புயத்திலோ அல்லது என்னுடைய வயிற்றிலோ, சுளுக்கு இருக்குமானால்... அல்லது என் தலையில் வலி இருக்குமானால், அது வலியுண்டாக்குகிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு போதுமான உணர்வு இருக்கின்றது, அது எனக்கு வலியுண்டாக்குகிறது என்று நான் நினைக்கின்றேன் என்பதாக அல்ல, ஆனால் தேவனுடைய வல்லமை அதை எடுத்து போடும் என்று எனக்குத் தெரியும், என்னுடைய... நான் அதைக் குறித்து சிந்திப்பதல்ல. பாருங்கள்? ஆதலால், கிறிஸ்தவ விஞ்ஞானம், என்னிடம் கேட்கப்பட்ட மற்றொன்றுடன் நான் இதையும் கூறுவேன், அது நவீன நாட்களின் கொள்கைகளில் ஒன்றாகும், ஒரு ஆழமான, இருண்ட தவறாகும். அது சரி. நண்பனே, அல்லது இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, உன்னுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்காக அல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதை எழுதின நீயும் நானும் ஒன்றாக, ஒரு நாளில் இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் கணக்கொப்புவிக் கும்படியாக நிற்போம், நான் என்ன கூறுகிறேனோ அதற்கு நான் பதில் கூற வேண்டியவனாக இருக்கிறேன். இப்பொழுது, எனக்குத் தெரியாதவரையில், நான் அதற்கு பதில் அளிக்க மாட்டேன். அது சரி.