160. நல்லது. இப்பொழுது, சகோதரனே அல்லது சகோதரியே (அவர்கள் தங்கள் பெயரை கையொப்பமிடவில்லை), நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் சொத்தை நீங்கள் விற்க முயன்று, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தால்... வேறொரு சொத்தை வாங்குவதற்காகவோ அல்லது வேறெதாவதைச் செய் வதற்காகவோ நீங்கள் அதை விற்க எண்ணுகிறீர்கள். என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. உங்கள் நோக்கம் சரியாயிருந்தால், நீங்கள் வேறொரு வீட்டை வாங்க முயன்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பிள்ளைகள் இருந்து, அவர்களுக்கு இதைக் காட்டிலும் நல்ல வேறொரு வீட்டை வாங்க விரும்புகிறீர்கள்... என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இதைக் கூற விரும்புகிறேன்; நீங்கள் அதை விற்க முயன்று, அது விற்றுப் போக வேண்டும் என்பதற்காக உபவாசத்தில் இருந்தீர்கள், அப்படியானால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, அதைக் குறித்து மறந்து விடுங்கள். பாருங்கள்? ஏனெனில் ஒருக்கால் தேவன்... நீங்கள் ஒருக்கால் வேறொரு வீட்டுக்குச் செல்லலாம். அது சரியானதாக இல்லாமல் இருக்கக் கூடும். பாருங்கள்?
161. நீங்கள் கிறிஸ்தவராயிருந்து கர்த்தரை நம்புவீர்களானால்; நீங்கள் நிச்சயமாக கிறிஸ்தவராயிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உபவாசித்து ஜெபித்திருக்க மாட்டீர்கள். பாருங்கள்? நானாயிருந்தால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, “கர்த்தாவே, அதை நாங்கள் விற்க வேண்டிய உமது நேரம் வரும்போது, வாங்குபவரை அனுப்பும்" என்பேன். அப்பொழுது அது கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறது. உங்கள் கரங்களை அதிலிருந்து விலக்கி விட்டு சென்று கொண்டேயிருங்கள். அது கிரியை செய்யும் என்று நம்புகிறேன். நான் வேகமாக பதில் கூறுகிறேன், ஏனெனில் நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது.