162. அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். நிச்சயமாக, எனக்குக் கவலையில்லை, அதை நீளமாக வைத்திருங்கள். பாருங்கள்? நான்... எனக்குத் தெரியும் நீங்கள்... பெண்களாகிய உங்களிடம் இதை நான் கேலியாக கூறவில்லை. பாருங்கள்? நான் உண்மையாகவே கூறுகிறேன். நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள், நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். உங்களுக்கு என்மேல் நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் நீங்கள் என்னைக் கேட்க மாட்டீர்கள். சகோதரியே, நான் உன்னிடம் என்ன கூறுகிறோனோ அதை செய்வாய் என்று எனக்கும் உன் பேரில் நம்பிக்கை உண்டு.
163. இதை நான் வேத வசனத்தைக் கொண்டு ஆதார படுத்த இயலாது. உனக்கு வேண்டுமானால்... உனக்கு அழகான சுருண்ட தலைமயிர் இல்லை என்றால், நீ ஒரு பெண்ணாயிருந்து, உன் கணவன், அல்லது நீ திருமணம் செய்து கொள்ளப்போகிற பையனின் பார்வையில் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்பினால், நீ தலைமயிரைச் சுருள வைத்துக் கொள்வதைக் குறித்தோ, அல்லது - அவர்கள் அதை எப்படி அழைக்கிறார்கள் - தலைமயிருக்கு சாயமிடுவதைக் குறித்தோ என்னால் கூற இயலாது. அதைக் குறித்து கூற எனக்கு ஒன்றுமில்லை; அது உன்னைப் பொறுத்தது. பார்? நான் - நான்..... நீ, இடையே... என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேள், அவர் உன்னிடம் கூறுவார். நான் வேத வாக்கியங்களின் அடிப்படையில் காரியங்களை விளக்க முயல்கிறேன். பார்?