164. சற்று முன்பு தான் அதைக் குறித்து பார்த்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா? "நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்" பவுல், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷை களையும் பேசினாலும், இவை எல்லாவற்றையும் நான் செய்தாலும்... ஆனால் நிறைவானது வரும்போது..." என்கிறான். தேவனைத் தவிர வேறெதாகிலும் நிறைவானதாய் இருக்க முடியுமா? இல்லை, ஐயா! தேவன் நிறைவானவரா? ஆதியிலே (சபையோர் “வார்த்தை இருந்தது' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி.) அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது". வார்த்தை இன்னும் தேவனாயிருக்கிறது. பாருங்கள்? சரி, நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.