165. இதைக் கேட்டது ஒரு ஆண் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்று நினைக்கிறேன். நல்லது, சில ஸ்திரீகளும் அவ்விதம் செய்து கொள்கின்றனர். நிச்சயமாக. நான் இங்கு வேட்டை அதிகாரியாக இருந்த சமயத்தில் ஒரு முறை பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். நான் போய்க்கொண்டிருந்தபோது, நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், ஒரு மனிதன் என்னுடன் பேசிக் கொண்டு வந்தான். அவன் வெல்டர்களின் தொப்பியை அணிந்து கொண்டிருந்தான். நான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தான். அவன் வெல்டர்களின் மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டு, அதை இப்படி மேலே தூக்கி விட்டிருந்தான். அது இங்கு செல்லர்ஸ்பர்க் என்னுமிடத்தில் நடந்தது. நான் உட்கார்ந்து கொண்டு அந்த ஆளிடம் பேசிக் கொண்டு வந்தேன். அவன் ஏதோ ஒன்றைச் சொன்னான். நாங்கள் இருவரும் சிரித்தோம். நான் அவனை காலில் அடித்தேன். நான், "பையனே, அது உண்மையில் சிரிப்பாக இருக்கிறது இல்லையா? என்றேன்.
நான் அவ்விதம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது, எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருத்தி "ரூத், நீ என்ன செய்யப் போகிறாய்..." என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நபரைப் பார்த்துக் கேட்டாள்.
166. இவள் மேல் கோட்டை போட்டுக் கொண்டிருந்தாள், ஒரு ஆணைப்போல் பெரிய உருவமைப்பு கொண்டவளாய் இருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டு, மூக்கின் வழியாய் புகையை வெளியே விட்டுக் கொண்டிருந்தாள். அது ஒரு ஆண் என்று எண்ணினேன். அவள் வெல்டர்கள் உபயோகிக்கும் டார்ச்சை யாரோ ஒருவர் கைத் தவறிப்போட்டு அது வேறொருவர் தலையில் விழுந்து அவர் மயங்கி விழுந்ததைப் பற்றி ஹாஸ்ய பாணியில் கூறி சிரிக்கத் தொடங்கினாள். நானும் சிரித்து, அவள் மனிதன் என்று நினைத்து அவள் காலை என் கையினால் அடித்தேன். எனக்கு வித்தியாசம் தெரியவேயில்லை. உங்களால் அதை கண்டு பிடிக்க முடியாது. "புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரித்தால், அது அருவருப்பானது" என்று வேதம் உரைக்கிறது (உபா.22:5). பார்த்தீர்களா?
167. இல்லை, சகோதரனே, உங்களுக்கு மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்பு விருப்பமானால், நீங்கள் ஏறக்குறைய என் வயதை அடையும் வரைக்கும் காத்திருங்கள், அப்பொழுது உங்களுக்கு அது கிடைக்கும். (சகோ. பிரன்ஹாம் வழுக்கைத் தலையைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). எனவே... அது பரவாயில்லை. நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை, நண்பனே, சகோ. பிரன்ஹாம் உங்களுக்கு உண்மையை உரைக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்ததால், உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. தேவன், ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர, அவன் தலைமயிரால் மூடிக் கொள்வது பற்றி வேறெதையும் கூறவில்லை என்று எண்ணுகிறேன். அவன் ஸ்திரீயைப் போல் தலைமயிரை நீளமாக வளர விட்டால், அப்படி செய்வது ஒரு மனிதனுக்கு அவமானம் என்று வேதம் கூறுகிறது.
168. இப்பொழுது, நீங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, ஒரு சிறு பையனாக இருந்தால்... அதைக் குறித்து நான் அதிகம் கூறியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். “மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்பு செய்து கொள்ளும் சிக்கிகளே" என்பது போன்றவைகளை, அதை நான் கூறியிருக்கிறேன். பாருங்கள்?
169. ஒரு மனிதன் தன் தலைமயிரை எவ்விதம் கத்தரித்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்து தேவன் கவலைப்படுவதில்லை என்று எண்ணுகிறேன், அவன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் சரி. ஏனெனில் அவனுக்கு தலை தேவன், ஆனால் ஸ்திரீக்கு தலை மனிதன், எனவே அவள். அவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அப்படியானால் கனவீனமான ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்யப்பட்டு தள்ளப்பட வேண்டும். அது சரியா? எனவே ஒரு ஸ்திரீ தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தவறான வாழ்க்கை வாழ்ந்தது போல் அவளைத் தள்ளிவிட அவளுடைய கணவனுக்கு வேதப் பிரகாரமான உரிமையுண்டு. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? வேதம் அவ்விதம்தான் உரைக்கிறது, ஏனெனில் அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான எந்த. பெண்ணுடனும் வாழலாகாது.