171. மறுபடியும், நீங்கள் விரும்பும் எந்தவிதத்திலும், 1 தீமோ. 2:9. பாருங்கள்? "ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்". தேவனுக்கு பிரீதியாயுள்ள விதத்தில் என் தலைமயிரை அணிந்து கொள்ள விரும்புகிறேன். (அருமை சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக). நன்றி. தேவன் உங்களை ஆசீவர்திப்பாராக. எங்களுக்காக ஜெபியுங்கள். அவள் தன் பெயரை கையொப்பமிட்டிருக்கிறாள்.
172. ஷாரோன், நிச்சயமாக, சகோதரியே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதை எவ்வளவு நீளமாக வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்விதம் வைத்துக் கொள், சகோதரியே. அது ஒரு சிறு பெண். தேவன் உன்னை ஆசீர்வதிப்பராக, இனியவளே, அது சரியாயுள்ளது. அவ்விதமே செய்.