173. இல்லை! பாருங்கள், மணவாட்டி பூமியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, புறஜாதி சபைக்கு எல்லாமே முடிவடைந்திருக்கும். தேவ ஆவியானவர் பூமியை விட்டுப்போய் விடுகிறார். "அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்." (வெளி.22:11). வேறு சொற்களில்கூறுவோமானால், பரிசுத்த ஸ்தலம் புகையினால் நிறைகிறது. அங்கு தான் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காட வழக்கறிஞர் நின்று கொண்டிருக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுகிறார்; அவர் மத்தியஸ்தம் செய்த காலம் முடிவடைகிறது. எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. அவர் பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்று, மீட்பின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, அவர் மீட்டுக் கொண்ட எல்லாவற்றையும் உரிமை கோரிப் பெற்றுக் கொள்கிறார். மத்தியஸ்த ஊழியம் அதன்பிறகு கிடையாது. எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? அது முத்திரைகளில் ஒன்றில் உள்ளது, அல்லது... ஆம், முத்திரைகளில், அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்து தமது மத்தியஸ்த ஊழியத்தினால் கிடைக்கப் பெற்றவர்களை உரிமை கோருவதற்கென புறப்பட்டு வருகிறார்.
174. இப்பொழுது, ஒரு நிமிடம், "புத்தியில்லாத கன்னிகை இரட்சிக்கப்படுவாளா?" இல்லை! நடப்பது என்னவானாலும், இப்பொழுதே நடக்கிறது. அந்த காலத்துக்குப் பிறகு அவள்... இப்பொழுது, அவள் உபத்திரவ காலத்தின் வழியாய் கடந்து செல்ல வேண்டும். அதற்கு காரணம் என்னவென்றால், அவள் பிராயச்சித்தத்தை அதன் முழுமையில் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டாள். அவள் ஒரு விசுவாசி, விசுவாசியைப்போல் நடந்து கொண்டவள், ஆனால் அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். "வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப் போயிற்று' என்று வேதம் உரைக்கிறது (வெளி. 12:15-17). அது எத்தகைய ஒரு நேரமாயிருக்கும்!
175. பெயர் கிறிஸ்தவ சபைகள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வேண்டுமென்று இப்பொழுது பசி கொண்டிருப்பதைப் போல் வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இருந்ததில்லை. நான் கிறிஸ்தவ வர்த்தகர், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கத்தோலிக்கர், நூற்றுக்கணக்கான பாப்டிஸ்டுகள், கிறிஸ்து சபை, நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தார் ஆகியோரைக் குறிப்பிடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் அதைக் கண்டுக் கொள்ள முயல திரளாக உங்களிடம் வருகின்றனர். பாருங்கள்?
176. இப்பொழுது. இது ஒரு குறிப்பிடத்தக்க காரியம். தயவு செய்து இதை ஒரு உபதேசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்விதம் சம்பவிக்கும் போது, என்ன நடக்குமென்று வேதம் உரைத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? காலமானது முடிவடைந்து விட்டது. கவனியுங்கள், ஏழு கன்னிகைகள் - இல்லை, பத்து கன்னிகைகள் மணவாளனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் பாதி பேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. பாதி பேருக்கு எண்ணெய் இல்லை. அது தான் மரித்துப் போன சரீரத்தின் பாகமும் உயிரோடிருக்கிறவர்களின் பாகமும். ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள். “இதோ, மணவாளன் வருகிறார்" என்னும் சத்தம் புறப்பட்டுச் சென்ற போது அவர்கள் எல்லோரும் தீவட்டிகளைச் சுத்தம் செய்து, கலியாண விருந்துக்குச் செல்ல ஆயத்த மானார்கள். ஆனால் புத்தியில்லாத கன்னிகையோ, “உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து விட்டன (பாருங்கள்?), உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள்" என்றனர். அவர்கள் எண்ணெய் வாங்க சென்றிருந்த போது, மணவாளன் வந்து விட்டார்.
177. "மணவாளன் வந்து கொண்டிருக்கிறார்" என்னும் அறிக்கை, பிரகடனம் புறப்பட்டுச் சென்ற போது, எல்லோருமே தங்களை வேகமாக சரிப்படுத்திக் கொள்ள விரும்பினர். கையுறுப்பு சுவற்றில் காணப்படுகின்ற நேரம் அதுவல்லவா?
178. "ஓ, எங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை." "எங்களுக்கு இது; அது, மற்றது தேவை. அவர்கள் அதை வாங்கச் சென்றிருந்த போது, மணவாளன் வந்து விட்டார். புத்தியுள்ள கன்னிகைகள் உள்ளே பிரவேசித்தனர், அவர்களோ புறம்பே விடப்பட்டனர், அங்கு அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
179. அதனுடன் சம்பந்தப்பட்ட அழகான கேள்விகள் என்னிடம் உள்ளன. "கலியாண வஸ்திரத்துடன் உள்ளே பிரவேசித்த மனிதன் யார்? அதனுடன் இணைந்துள்ள கேள்விகள்.