180. நிச்சயமாக, அவன் வேலை செய்ய வேண்டும். கிறிஸ்தவன் வேலை செய்யும் ஒரு மனிதனாயிருப்பான்.
181. "தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா?" அந்த தனிப்பட்ட நபர் யாரென்பதை அது பொறுத்தது. அது உண்மை. எபிரெயர் 7ம் அதிகாரத்தில், தசம பாகத்தைக் குறித்து முதன் முதலாக பேசப்படுகிறது. நாம் எந்த நிலையில்... ஒரு நிமிடம் பொறுங்கள், இரண்டாம் கேள்வி, இல்லை! உ, ஊ. இல்லை! ஏனெனில் சகோதரன், “சகோ. பிரன்ஹாமுக்கு இரண்டு கேள்விகள்" என்று கூறியுள்ளார்.
182. அப்பொழுது... எபிரெயர் 7ம் அதிகாரத்தில், ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து விட்டு திரும்பி வருகையில், மெல்கிசேதேக்கை சந்தித்து, அவனுக்கு தசமபாகம் செலுத்தினான். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா, நீதியின் ராஜா, அது தேவனைத் தவிர வேறு யாருமில்லை. பாருங்கள்?
183. ஆனால் நீங்கள் தசமபாகம் செலுத்தும் போது... உண்மையில் நீங்கள் எங்கு ஆகாரத்தைப் பெறுகிறீர்களோ, அங்குதான் நீங்கள் தசமபாகம் செலுத்த கடன்பட்டிருக்கிறீர்கள். “உங்கள் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கெண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (மல்.3:10). தசம்பாகம் செலுத்தாத எந்த ஒரு மனிதனும் அல்லது ஸ்திரீயும் இதை ஏற்றுக் கொள்ளும்படி நான் சவால் விடுகிறேன்.
184. அதை நான் கண்ட போது, என்ன நடந்ததென்றும், நான் என்ன நிலையில் இருந்தேன் என்றும், காலை வரையில் இங்கு நின்று கொண்டு என்னால் உங்களிடம் கூற முடியும். ஆனால் என்னால் கூடுமான வரையில் நான் விசுவாசமுள்ளவனாய் தசம பாகங்களை செலுத்தி வந்திருக்கிறேன். இந்த சபையிலிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை நான் எடுத்துக் கொள்ளும் போதும், அல்லது கூட்டங்களில் எனக்கு கூடுதல் கிடைக்கும் போதும் - நான் தசமபாகம் கொடுக்கிறேன். நான் அதை ஊழியக்காரர்களுக்கு கொடுத்து விட்டு, கூட்டங்களில் கிடைக்கும் மற்றதை ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறேன். அப்படி என்னால் செய்ய முடியாமல் போனால், நான் என்ன செய்கிறேன் என்றால், நான் பத்து சத விகிதம் வைத்துக் கொண்டு தேவனுக்கு தொண்ணூறு சதவிகிதம் செலுத்தி வந்தேன். பிறகு, அவ்விதம் நான் செய்யக்கூடாதென்று பிரமாணம் எனக்கு எடுத்துரைத்த போது... அவ்விதம் நான் செய்தால், அது அதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்பொழுது நான் அதை எடுத்து வெளிநாடுகளில் நடக்கும் மிஷன் ஊழியங்களுக்கு அனுப்பி விட்டு, ஒரு வாரத்துக்கு நூறு டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டு, அதிலிருந்து என் தசமபாகத்தை செலுத்துகிறேன்.
185. ஆம், ஐயா! தசமபாகம் கொடுப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அது தேவனுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று, அது ஆசீர்வாதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள், “அது பழைய ஏற்பாட்டில் உள்ள ஒன்று" 'எனலாம். அது புதிய ஏற்பாட்டில் உள்ள ஒன்றும் கூட! ஆம், ஐயா!