186. இரட்சிக்கப்படக் கூடுமா? ஏன் நிச்சயமாக, நான் விசுவாசிக்கிறேன் அந்த குழந்தை... நடந்த ஒரு காரியத்துக்கு அந்த குழந்தை பொறுப்பல்ல. அது உண்மை. ஆனால் நான்... எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் விஷயத்தில்... இரட்சிக்கப்படக் கூடுமா என்னும் விஷயத்தில் நான் "ஆம்" என்பேன். ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் விஷயத்தில், தெரிந்து கொள்ளப்பட்ட வித்து தான் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்கின்றது. விபச்சாரத்தினால் உண்டாகும் குழந்தை தெரிந்து கொள்ளப்பட்ட வித்து என்பதை என்னால் நம்ப முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அந்த குழந்தை இரட்சிக்கப்படக் கூடுமென்று நான் நம்புகிறேன்; அந்த குழந்தை இதற்கு பொறுப்பல்ல. அது பயங்கரமான ஒரு செயல்.
187. இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், முறை தவறிப் பிறந்த குழந்தை கர்த்தரின் சபைக்குள் பத்து தலைமுறைக்கு பிரவேசிக்கக் கூடாது - அதாவது நானூறு சொச்சம் ஆண்டுகளுக்கு. அந்த சாபம் அவ்வளவு கொடியது. அதை யோசித்துப் பாருங்கள். ஒன்றும் அறியாத குழந்தை, அதன் பத்து தலைமுறை பேரப் பிள்ளைகள் கர்த்தருடைய சபையில் பிரவேசிக்க முடியாது. அது உண்மை .
188. ஆனால் பாருங்கள், அந்த பாவத்தை மன்னிப்பதற்கு வலிமையான எதுவும் இருக்கவில்லை. பழைய ஏற்பாட்டின் இரத்தம் (பழைய உடன்படிக்கை இரத்தம்) பாவங்களை மன்னிக்கவில்லை; அது பாவங்களை மூடினது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ அதை புறம்பாக்குகிறது. இப்பொழுது அது வித்தியாசமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரும் போது, அது வித்தியாசமடைகிறது.