146. என்னுடைய அருமை சகோதரன் அல்லது சகோதரி, இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, எந்த சபைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், இதை, என் சகோதரனே, சகோதரியே, நான் .....நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்தால், பாருங்கள், நல்லது நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டு பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுள்ள மக்கள் இருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு செல்லுங்கள் . நீங்கள் . . . அந்த விதமான ஜனங்களுடன் நீங்கள் ஒன்று கூட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.
147. இங்கே சமீபமாக ஒரு மனிதனை நான் கண்டேன், அவர் பிறந்து பத்து வருடங்களாக ... அல்லது பிறக்கவில்லை, என்னை மன்னியுங்கள், அவர் கடந்த பத்து வருடங்களாக பார்வை யில்லாமல் இருந்தார். அவர் ஒரு பெரிய சபையை சார்ந்தவராக இருந்தார், அவர் மிசெளரியிலுள்ள கென்னட்டில் வாழ்ந்து வந்தார். அவருக்கு .... அவர் ஒரு - அவர் அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு காலணி தைப்பவராக இருந்தார், அவர் கண் பார்வையிழந்தார். அந்த மனிதன் மேடையின் மீது வந்தார், அவர் யார் என்றும் அவரிடம் என்ன தவறு இருந்ததென்றும், அவர் எவ்வளவு காலமாக குருடாக இருந்தார் என்றும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு கூறினார், அவர் செய்த ஏதோ ஒரு சிறிய அசுத்த மான கிரியையையும் கூறினார். அவர் " நான் அங்கே செல்ல தேவன் என்னை வாழ விடுவாரென்றால், நான் அதை சரி செய்வேன்,'' என்றார். ஆகவே, அவர் அதைச் சொன்ன மாத்திரத்தில், அவருடைய கண்கள் திறக்கப்பட்டது; இதே வேதாகமத்திலிருந்து, அதிகாரத்திற்கு பிறகு அதிகாரம் வாசித்து காண்பித்தார்.
148. அவர் தன்னுடைய சபைக்கு சென்று துதி செலுத்திக் கொண்டிருந்தார். ஆகவே அந்த போதகர் அவரிடம், " இது எப்படியோ நடந்துவிட்டிருக்கும். என்ன, நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள், அவ்வளவு தான். இதில் ஒன்றுமே கிடையாது. இந்த காரியத்தில் ஒன்றும் கிடையாது, இது பிசாசினால் உண்டானது!'' என்று கூறினார்.
149. பிசாசினால் சுகப்படுத்த முடியும் என்று கூறும் ஒரு வேதவசனத்தையாவது எனக்கு காண்பியுங்கள் என்று நான் அனைவருக்கும் சவாலிடுகிறேன். பிசாசினால் சுகமாக்க முடியும் என்று நீங்கள் எனக்கு காண்பிப்பீர்களானால், நீங்கள் அதைச் செய்வீர்களானால், பிசாசு உங்களுடைய பிதா என்று நான் நிரூபிக் கிறேன்; அது சரி, அது தேவனுடைய வார்த்தைகளில் இல்லை. அது நிரூபிக்கப்பட முடியாது. ஆகவே நீங்கள்..... வேண்டுமானால் . நீங்கள் அதை முயற்சித்துப் பார்க்கலாம், நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். அது சகோதரனே, பிஷப்புகளாலும் மற்ற எல்லாவற்றாலும் செய்யப்பட்டுவிட்டது, ஆதலால் அதைச் சொல்லாதே.
150. கவனியுங்கள்! அந்த அதே மனிதன் தன்னுடைய இருதயத்தில் அதை விசுவாசித்தான். மூன்று மாதங்கள் கழித்து முன்பு இருந்த விதமாகவே பார்வை இழந்தவராக, அவர் என்னுடைய ஆராதனைகளில் இருந்தார், அது தான் காரியம்.
151. ஆகவே அந்த விதமான கொள்கைகளிலிருந்து விலகி யிருங்கள்! விசுவாசிக்கிறவர்களுடன் உங்களை ஒன்று கூட்டிக் கொண்டு, ஐக்கியப்படுங்கள். வேதாகமம் கூறுகிறது, " அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. '' ''வேறு பிரித்துக் கொள்ளுங்கள்,'' என்று தேவன் கூறுகிறார். வெளியே வாருங்கள்! “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவி லிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய்... அசுத்தமானதைத் தொடா திருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். சபையின் நடுவில் நிற்கின்ற கர்த்தர் நானே,” அது சரி. வெளியே வாருங்கள்! அவர்களுடன் ஐக்கியப்படாதீர்கள்.