191. நீங்கள் என்ன அர்த்தத்தில் இதை கூறியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியே உள்ள பாவிகளை குறிப்பிடுகிறீர்கள் என்றால்... நீங்கள் தேவனை எங்கும் தொழுது கொள்கின்றீர்கள். அவ்விதம் நாம் செய்வோமென்றால், நாம் எப்படி சபைக்குச் செல்ல முடியும்? ஏனெனில் சபைக்குள் பாவிகள் வந்து கிறிஸ்தவனின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கின்றனரே! நீங்கள் பாவத்தைத் தவிர வேறெதிலிருந்தும் உங்களைப் பிரித்துக் கொள்ளாதீர்கள், பாவிகளிலிருந்து உங்களை பிரித்துக் கொள்ளாதீர்கள். கூடுமானால் பாவியை கெண்டு வாருங்கள். ஆனால் அவனுடைய பாவத்தில் பங்கு கொள்ளாதீர்கள்.