200. நல்லது, உங்களுக்கு எப்படி... அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் விசுவாசிக்க, நான் ஒன்றையும் கூறவில்லை என்று நம்புகிறேன். நான் அவ்விதம் ஏதாகிலும் கூறினதுண்டா? அவ்விதம் கூறியிருந்தால், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அந்த அர்த்தத்தில் கூறியிருக்க மாட்டேன். பாருங்கள்? இவைகளை நீங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் தொடர்ந்து சென்று, பிரசங்கித்து, சிறை ஆராதனை நடத்தி, எல்லோருக்கும் சாட்சி சொல்லுங்கள்.
201. இங்கு பாருங்கள். ஏழாம் நாள் ஆசரிப்பு சபையினர் அண்மையில், ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு - அதை நான் 'குரியர் ஜர்னல்' செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன் (அது என் பெட்டியில் எங்கோ உள்ளது), 'குரியர் ஜர்னல்' செய்தித்தாளில் ஒரு பெரிய பாகம் . அவர்கள் தங்கள் பழைய பெயரைக் களைந்து விட்டு, அவர்கள் 'மில்லரைட்ஸ்' என்று அழைக்கப்படுவதை தவிர்த்து, ஏழாம் நாள் ஆசரிப்பு சபை என்று அழைக்கப்படலாயினர்: "குரியர் ஜர்னல்' என்னும் செய்தித் தாளின் ஒரு பெரிய தாளில் - அது ப்ராக்ளின், கென்னடி என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களை விற்றுவிட... அவர்கள் ஒரு தேதியை குறித்து, அதை வேத வசனங்களின் மூலம் நிரூபித்து - இயேசு அந்த குறிப்பிட்ட தேதியில் வருவாரென்று அறிவித்து, தங்கள் கின்னரங்களுடனும் மற்றவைகளுடனும் மலைக்கு மேலே சென்று அங்கு உட்கார்ந்து காத்துக் கொண்ருந்தனர். அடுத்த நாள் காலையில் பனி பெய்து அவர்களுடைய சிறகுகளையெல்லாம் நனைத்து விட்டது. காற்றெல்லாம் போய் விட்டவர்களாக அவர்கள் கீழே இறங்கி வந்தனர். பாருங்கள்? அது கொள்கைகளும் (cults) மற்றவைகளும்.
202. அதை நம்பாதீர்கள். இயேசு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வராமலிருக்கக் கூடும். அவர் எப்பொழுது வருகிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் எப்பொழுது வருகிறார் என்று எந்த மனிதனுக்கும் தெரியாது. ஆனால் அவர் வரும் வரைக்கும் நான் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டும், என்னாலான எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கப் போகிறேன். அவர் இன்று இங்கு இல்லாமல் போனால், நாளை அவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் இந்த வாரம் இங்கு இல்லாமல் போனால், அவருக்காக அடுத்த வாரம் காத்திருப்பேன். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் வராமலிருந்து, நான் உயிர் வாழ்வேனானால், அடுத்த முப்பது ஆண்டுகள் அவருக்காக காத்திருப்பேன். பாருங்கள்? நான் அப்பொழுதும் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய மக்களுக்கும் நான் உண்மையாய் ஜீவித்து, ஒரு கிறிஸ்தவனைப் போல் வாழ்ந்து, அவருடைய வருகைக்காக காத்திருக்க விரும்புகிறேன். பாருங்கள்?
203. சிறை ஆராதனைகளில் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு உங்களாலான மட்டும் எல்லோரையும் இரட்சிப்புக்குள் கொண்டு வாருங்கள். அவர் எப்பொழுது வருகிறாரென்று எனக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த ஒரு காரியத்தை நான் கூற விரும்புகிறேன். இதற்காகத் தான் இதை நான் உங்களுக்கு கூற முயல்கிறேன், உங்கள் சொந்த வியாக்கியானத்தை இதற்கு தரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்... அந்த நபரைப் பார்த்து நான் கூச்சலிடவில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், இது இந்நகரிலிருந்து வெளியே உள்ள ஒருவர் போல் தோன்றுகிறது, ஏனெனில் அது அஞ்சல் கார்டில் எழுதப்பட்டுள்ளது. அது கொலராடோவிலுள்ள டென்வர் என்று நினைக்கிறேன். ஆம், பைக் பீக், கொலராடோ. யாரோ ஒருவர் அதை அஞ்சலி வழியாக அனுப்பியிருக்கக் கூடும். அதனால் பரவாயில்லை. அவர்கள் ஒலிநாடாவை ஒருக்கால் பெற்றுக்கொள்வார்கள்.
204. ஆனால் நாம் ஞாபகம் கொள்வோம், நீங்கள் ஒன்றையும் மாற்றி விடாதீர்கள், பாவத்திலிருந்து நீதிக்கு மாத்திரம் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பணியில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்து, அதை அப்படியே செய்து கொண்டிருங்கள். இதை புரிந்து கொண்டவர்கள் "ஆமென்" என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). பாருங்கள்? அதை இப்பொழுது செய்யுங்கள்.