205. நீங்கள் கவனிப்பீர்களானால் "போல" (பாருங்கள்?) என்று கூறப்பட்டுள்ளது. "யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல... அது மூன்று பகல்கள் மூன்று இரவுகளுக்குள்ளாக இருக்க வேண்டும், ஏனெனில் வேத வசனத்தை பொய்யுரைக்க வைக்க உங்களால் முடியாது."அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன்; என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்" என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறான் (சங்.16:10). மனித உடலில் அழிவு எழுபத்திரண்டு மணி நேரத்தில் உண்டாகிறது. எனவே இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள் எப்பொழுதாவது அவர் கல்லறையை விட்டு வெளி வர வேண்டும்.
206. எனவே இரவும் பகலும் மூன்று நாட்கள் என்றால் சரியாக அப்படியே என்று அர்த்தமல்ல; அது இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள்ளாக எப்பொழுதாவது, அதற்குள் அவர் உயிரொடெழுந்து வெளி வர வேண்டும், ஏனெனில் தீர்க்கதரிசனம் பொய்யாயிருக்க முடியாது. அவர் அழிவைக் காண முடியாது. அவர் சரியாக அந்த நேரம் வரைக்கும் தங்கியிருந்தால், அது அழிவைக் கண்டிருக்கும்.