207. எப்படி? எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது. கேள்வி என்னவெனில்: “அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா?”என்பதே. விவாகரத்து செய்வதர்கள். இருவருமே விவாகரத்து செய்தவர்கள், இவர்கள் இருவருக்குமே உயிரோடிருக்கும் துணையார் உள்ளனர். அதன்பிறகு இருவமே மறுபடியும் விவாகம் செய்து கொண்டனர். இப்பொழுது... இந்த ஸ்திரீக்கு உயிரோடிருக்கும் கணவர் இருக்கிறார்; இந்த மனிதனுக்கு உயிரோடிருக்கும் மனைவி இருக்கிறாள். இப்பொழுது, அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர்; அவர்கள் தேவனிடம் வர விரும்புகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லமுடியுமா? அது. பரலோக பிதாவைப் பொறுத்தது. என்னால் அதற்கு பதிலுரைக்க இயலாது. பாருங்கள்?
208. நான் ஒரு காரியத்தைக் காண்கிறேன். அவர்கள் விபச்சாரக்காரர் என்று அழைக்கப்படுவார்கள் என்று வேதம் உரைக்கிறது. மேலும் “விபச்சாரக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை” என்றும் வேதம் உரைக்கிறது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். அதைக் கூறுவது என்னைக் கொன்று விடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் வார்த்தை உரைப்பதைத் தவிர வேறெதையும் என்னால் கூற இயலாது. நான் அதில் நிலைத்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவையெல்லாம் தவறாயிருக்கக்கூடாதா என்று எண்ணுகிறேன். வேதத்தில் சில இடங்களில்...
209. நான் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை. தயவு செய்து, ஒரு சிறு வேத வசனத்தை உங்களுக்கு நான் தர விரும்புகிறேன். தயவு செய்து, தயவு செய்து செய்யாதீர்கள் - செய்யாதீர்கள். நீங்கள் சந்தோஷமாக உங்கள் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தால், சந்தோஷமாக உங்கள் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தால், அப்படியே வாழ்ந்து கொண்டிருங்கள். அதற்காக நீங்கள்... நான் கூறினேன் என்பதற்காக அந்த சிறு பிள்ளைகளை விட்டு விலகி, அவர்களுக்கு வீடு இல்லாமல் செய்து விடாதீர்கள். தவறு செய்த ஜனங்களுக்கு தேவன் பரிகாரம் செய்ததாக வேதத்தில் சில இடங்கள் உண்டு. இயேசு தாவீதைக் குறித்து கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அவன் பசியாயிருந்த போது, தேவாலயத்துக்குள் பிரவேசித்து, ஆசாரியர்கள் மட்டும் புசிக்கத் தகுந்த சமூகத்தப்பத்தை புசித்து, குற்றமற்றவனாக காணப்பட்டான். ஆசாரியனும் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்து குற்றமற்றவனாக காணப்பட்டான், ஓய்வு நாளிலும் பெரியவர் இங்கிருக்கிறார். பாருங்கள்? அங்கே... நான்... இதை நாம் தேவனிடம் சமர்ப்பித்து விட்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து... இப்பொழுது கிறிஸ்துவுக்காக நாம் வாழ்வோம்.
210. நாம் பார்க்கலாம், நீங்கள் உட்பிரவேசிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கக்கூடும். மற்றொரு தவறைச் செய்து விடாதீர்கள். இரண்டு தவறுகள் ஒரு தவறை நேராக்கி விடாது. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தால், ஒருக்கால் உங்களுக்கு ஒரு தவறான துணை இருக்கக் கூடும். இந்த வாழ்க்கையில் உங்களுக்கு தவறான துணை இருக்குமானால், மற்ற வாழ்க்கையில் உங்களுக்கு அப்படி இருக்காது. எல்லா தவறுகளும் சரியாக் கப்படும்.