212. யோவான் 14:26: அவர்... "பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது (பாருங்கள்?), வரப் போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:13). பாருங்கள்? அவர் ஒரு... அவர் அதை பரிபூரணப்படுத்துவார். “மனிதனால் உண்டாக்கப்பட்டவை" அதை செய்ய முடியாது- அவர் வார்த்தையாயிருக்கிறார், பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, அவர் வேத வாக்கியங்களுடன் தம்மை உங்களில் அடையாளம் கண்டு கொள்வார். அதுவே பரிசுத்த ஆவி உங்களில் உள்ளதென்பதற்கு உண்மையான அடையாளம், ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது.
213. இப்பொழுது பாருங்கள்! நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதனால் என்ன? அதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் என்ன செய்வாரென்று இயேசு கூறியுள்ளார். 'நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, மற்ற அனைத்தும் செய்து, அதன் பிறகு வார்த்தைக்கு வருகின்றீர்கள்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுப்பதென்பது வேத வாக்கியங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு என்பதை நான் வேத வாக்கியங்களின் மூலம் உங்களுக்கு நிரூபிக்க முடியும். எவருமே அவ்விதம் ஞானஸ்நானம் பண்ணப் படவில்லை, இருப்பினும் நீங்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட ஒன்றைச் செய்வாரென்று என்னிடம் நீங்கள் கூற முடியுமா? அவர் எவ்விதம் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியும்?
214. இந்நாளில் என்ன நடக்கவிருக்கிறது என்றும், எவ்வாறு மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார் என்றும், அவர் என்ன செய்வாரென்றும், இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிற வேத வாக்கியங்களை நான் உங்களுக்கு காண்பித்து விட்டு, அவர் இறங்கி வந்து அதை நிரூபிப்பதை கண்ட பிறகும், நீங்கள் ஸ்தாபனத்திலேயே தங்கியிருந்து நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று எப்படி உங்களை அழைத்துக் கொள்ள முடியும்? அதில் ஏதாகிலும் அர்த்தம் உள்ளதா?
215. என் மனைவியிடம் அவளை நான் நேசிப்பதாக கூறி விட்டு, வேறொருத்தியுடன் நான் சல்லாபம் செய்து, அவளுடன் சுற்றித் திரிந்து, என் இருதயத்திலிருந்து என் மனைவியை நான் நேசிப்பதாக கூற முடியுமா? அது உண்மையான அன்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் என்னை நேசிப்பதாக கூறிக் கொண்டு, நான் வெளியே சென்ற பிறகு வேறொரு மனிதனுடன் திரிய முடியுமா?
216. அதை தான் இஸ்ரவேல் ஜங்கள் செய்தனர். வேதத்தில் அவர் இஸ்ரவேலரை நோக்கி, "நீ உன் கரங்களை விரித்து, வருகின்ற ஒவ்வொரு மனிதனையும் ஏற்றுக் கொண்டு. அவர்களோடு வேசித்தனம் பண்ணினாய். நான் உன்னைப் புறம்பாக்குவேன்" என்றார். முற்றிலுமாக! அது என்ன? நீங்கள் உங்கள் சரீரத்துக்கு விரோதமாக வேசித்தனம் பண்ணுகிறீர்கள். ஒரு ஸ்திரீ வெளியே சென்று வேறொரு மனிதனுடன் வாழும்போது, அல்லது ஒரு மனிதன் வேறொரு ஸ்திரீயுடன் வாழும் போது, அவர்களை அவர்கள் விவாகம் செய்து கொள்ளும் போது, தங்கள் சொந்த மாம்சத்தை அசுசிப்படுத்துகின்றனர். ஒரு நபர் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொண்டு, வேத வாக்கியங்கள் உண்மை என்பதை மறுத்தால், தான் இருப்பதாக உரிமை கோரும் சரீரத்துக்கு விரோதமாக அவன் விபச்சாரம் செய்கிறவனாயிருப்பான். பாருங்கள். அது அந்திக் கிறிஸ்துவின் முத்திரை, அது கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும்.