217. எவ்வளவு வாலிபம்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், நீங்களே அதை தீர்மானிக்கும்படி விட்டு விடுகிறேன். ஒரு சிறு பெண் அல்லது மிகவும் சிறிய பெண், நான் நினைக்கிறேன், எனக்குத் தெரியாது, நான்... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று. “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் உரைக்கிறது" (உபா.22:5). பாருங்கள்? அது “ஸ்திரீ" என்று சொல்லுகிறது. "பிள்ளை" என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது நான்... அதைக் குறித்து உங்களுக்கு தோன்றுகிறதை செய்யுங்கள். நான்... என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறு பெண், ஐந்து அல்லது ஆறு வயதுடையவள் அவ்விதம் உடுப்பது தவறென்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போது அவர்கள் முற்றத்தில் ஓடி விளையாடுகின்றனர். ஒரு சிறுமி நீங்கள் 'ஸ்லாக்'குகள் என்றழைப்பதை உடுத்தினால் அதில் தவறொன்றும் எனக்குக் காணவில்லை.
218. பாருங்கள், நான் வார்த்தை உரைப்பதையே உங்களிடம் கூறுகிறேன். புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது அருவருப்பானது.