ஆம், நீங்கள் என்னை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர்கள்தான் மணவாட்டி.
153. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், சரியாக வெளிப்படுத்தல் 7ல், அவன் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைக் கண்டான். இப்பொழுது என் சகோதரனே, இதன் பேரில் உங்களை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அந்த நூற்று ... வழக்கமாக ஒரு யெகோவா சாட்சிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர் தான் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் தான் மணவாட்டியாக இருக்கும் என்று விசுவாசிப்பார். அது பிழையான ஒன்றாகும்! அவர்கள் ஒவ்வொருவரையும் யோவான் அறிந்திருந்து அவர்களை பெயர் சொல்லி அழைத்தான். அவர்கள் ஒவ்வொருவரும் யூதர்களாக இருந்தனர். அவர் ''காத்திலிருந்து பன்னீராயிரம், செபுலோனிலிருந்து பன்னீராயிரம், பென்யமீனிலிருந்து பன்னீராயிரம், யூதாவிலிருந்து பன்னீராயிரம்,'' என்றான், அது சரியா? இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்கள் இருக்கின்றது, பன்னி ரண்டும் பன்னிரண்டும் பெருக்கினால் ... இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் ஆகும். அது சரியா? அவர் "எல்லா இஸ்ரவேல் புத்திரரும்'' என்றார். யோவான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டான்.
154. பிறகு அவன் இந்த பக்கமாக திரும்பிப் பார்த்து, "சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்ட மாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து அசைத்துக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, ஓசன்னா... ராஜாவுக்கு என்று பாடிக் கொண்டு இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறார்கள்" என்றான். அவன் " யார் இவர்கள்?'' என்று கேட்டான்.
155. அவன் ''மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்து தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த் தவர்கள் இவர்கள்தான். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் ஆட்டுக் குட்டியானவரை அவருடைய ஆலயத்தில் சேவிப்பார்கள், இவர்கள் அவரை விட்டு செல்ல மாட்டார்கள்'' என்றான். அது தான் மணவாட்டி, பாருங்கள் மனைவி, புறஜாதி மணவாட்டி.
156. நினைவில் கொள்ளுங்கள், மணவாட்டியானவள் புறஜாதி யாக இருக்கிறாள். அவர் “அவர் வந்து, புறஜாதிகளிலிருந்து தமது (எதற்காக?) நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்துகொள்ளுவார்,” என்றார்.
157. இப்பொழுது, உலகத்திலே அநேக வாலிபப் பெண்கள் உள்ளனர். ஆனால் நான் ஒரு பெண்னை எடுத்திருக்கிறேன், அது தான் மேடா பிராய், அவள் தான் இப்பொழுது திருமதி. வில்லியம் பிரன்ஹாம். அவள் ...... அவள் இன்னுமாக பிராய் அல்ல. அவள் இப்பொழுது பிரன்ஹாமாக இருக்கிறாள், பார்த்தீர்களா?
158. ஆகவே அவ்வாறே தான், நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஒரு மணவாட்டியாக, மணவாட்டியின் அங்கத்தினர்களாக ஆகிவிடுகின்றீர்கள்.