219. கூட்டாளியே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், அதில் நீங்கள் தவறு செய்கிறீர்கள். எக்காளங்களின் போது நீங்கள் ஒன்று கூடுங்கள் என்று நான் சொல்லவேயில்லை. இஸ்ரவேலர் எக்காளங்களின் போது ஒன்று கூடுவார்கள் என்று தான் சொன்னேன், புறஜாதி மணவாட்டியல்ல. இல்லை, இல்லை, எக்காளங்கள், எழு எக்காளங்களின் முழக்கம் இஸ்ரவேலரை உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் ஒன்று கூட்டுவதற்கே (எத்தனை பேருக்கு அது தெரியும்?). ஆம், புறஜாதி மணவாட்டி அல்ல... இல்லை, இல்லை! உ, ஊ, இல்லை. எனவே அது புறஜாதி மணவாட்டியல்ல. நாம் எக்காளங்களின் போது ஒன்று கூடுவதில்லை, மணவாட்டி ஒன்று கூடுவதில்லை. எக்காளங்கள் பெந்தெகொஸ்தே பண்டிகைக்குப் பிறகு வருகிறது. பாருங்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது... அது... இந்த கேள்வி அதை குறித்ததல்ல.