220. நல்லது. இயேசு, “தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான் என்றார் (ஆங்கிலத்தில் "Prophet's reward", அதாவது “தீர்க்கதரிசி அளிக்கும் பலன்" என்றுள்ளது - தமிழாக்கியோன்). தீர்க்கதரிசி அளிக்கும் பலன், தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே. நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். அது சரியா? தீர்க்கதரிசியின் பலன் என்னவென்று அவர்கள் அறிய விரும்பினால், அது தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே, பாருங்கள்? அது ஒரு பலன். அவர் உங்கள் நண்பர்.
221. சூனேமியாளைப் போல, அது எப்பொழுதாவது உபயோகப்படும் பாருங்கள்? அது அவளுக்கு உபயோகமாயிருந்தது. பாருங்கள்? தேவனுடைய ஊழியக்காரரை கவனியுங்கள்.
ஓ, என்னே! இப்பொழுது, நாம்... நான் முடிக்க வேண்டும், நண்பனே, அவ்விதம் செய்ய எனக்கு பிரியமில்லை, ஆனால் இங்கு பாருங்கள், நூற்றுக்கணக்கான கேள்விகள் (சபையோர், மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க, சகோ. பிரன்ஹாமை கேட்டுக் கொள்கின்றனர் - ஆசி). இல்லை! ஆனால், பாருங்கள். அவ்விதம் கூறினதற்காக உங்களை நான் நேசிக்கிறேன், ஆனால் இன்றிரவு நூற்றுக் கணக்கான மைல்கள் காரோட்டி செல்ல வேண்டிய இந்த ஏழை மக்களை எண்ணிப் பார்க்கிறேன். என்ன, அநேக கேள்விகள் இங்குள்ளன.