222. நல்லது, சகோதரனே அல்லது சகோதரியே, எனக்கே இதை புரிந்து கொள்வது கடினமாயுள்ளது. நான் கூறக் கூடிய ஒன்றே ஒன்று இது: அதாவது கலியாண விருந்து ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு வருகிறது.
223. இப்பொழுது, பாருங்கள், இங்கு எங்கோ உள்ள. ஒருவருக்கு அதன் பேரில் ஒரு கேள்வி. உள்ளது என்று எனக்குத் தெரியும். அவர், “சகோ. பிரன்ஹாமே, அந்த தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். இன்னும் ஏழு வாரங்கள் இருக்கும்” என்கிறார். இல்லை, மேசியா வந்து தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும், அந்த எழுபதாம் வாரத்தின் மத்தியில் - அது ஏழு வருடங்கள் - அவர் ஜீவனுள்ளோர் மத்தியிலிருந்து பலியாக. சங்கரிக்கப்பட வேண்டும். எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? சரி, அப்படியானால் எத்தனை ஆண்டுகள் இயேசு, அந்த மேசியா, பிரசங்கித்தார்? மூன்றரை ஆண்டுகள். அப்படியானால் இன்றும் மூன்றரை ஆண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளது.
224. வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில், இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். புறஜாதி மணவாட்டி போய்விட்ட பிறகு, இஸ்ரவேலருக்கு மூன்றரை ஆண்டுகள் வாக்களிக்கப்பட்டுள்து. எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? பாருங்கள்? சரி, சரி.