225. உங்களுக்குத் தெரியுமா, அது ஒரு பிரச்சினை. பாருங்கள்? காரியம் என்னவெனில், நீங்கள் பிழைப்புக்கு ஒருக்கால் இதை செய்தாக வேண்டும். ஆனால் இது எனக்கு என்ன செய்து விடும் தெரியுமா? அது என்னை நரம்பு தளர்ச்சிக்குள்ளாக்கும். அதனால் நான்... நான்... உங்களால் ஒருக்கால் அதை பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் அந்த சிறு கூட்டம் 'ரிக்கி' களும் 'ரிக்கெட்டாக்களும் அந்த விதமாக நடந்து கொள்ளும் போது, அது என்னை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கும். பாருங்கள்?
226. நான் உங்களிடம் கூறுகிறேன்; நான் - நான்... அது நானாக இருந்தால், நான் என்ன செய்வேனென்று எனக்குத் தெரியும். நான், “அதை நிறுத்துங்கள், இல்லையென்றால் வெளியே போங்கள்" என்பேன். பாருங்கள்? நான் சரியான விதமான இடம் ஒன்றை நடத்துவேன், இல்லையென்றால் அதை நடத்தவே மாட்டேன். ஆனால் நீங்கள், உங்கள் பிழைப்புக்கு அதை செய்ய வேண்டுமென்றால், உங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை, சகோதரனே அல்லது சகோதரியே. இவைகளை கூறுவது கடினமென்று நான் அறிவேன்; ஆனால் அது - அது வெறுமனே... அது சரியல்ல (பாருங்கள்?), ஏனெனில் அது ஒருவிதமாக காணப்பட்டது...
227. இன்று காலை யாரோ ஒருவர் நமது ஸ்திரீகள் தங்கள் உடைகளை குட்டையாக அணிகிறார்கள் என்று கூறினது போல, வயதான நமது ஸ்திரீகள். அது வாலிப பெண்களுக்கு ஒரு மோசமான உதாரணமாயுள்ளது. அவர் கூறினது சரியென்று நான் எண்ணுகிறேன். பாருங்கள்?'
228. அதே விதமாகத்தான் இதையும் எண்ணுகிறேன். புகை பிடித்தலும் மற்றவைகளும் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் உங்களைக் காணும்போது, உங்கள் சாட்சியை அவர்கள் அறியும் போது, இந்த பிள்ளைகள் சுற்றிலும் வந்து கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, அவ்விதம் நடந்து கொண்டு, அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்யாமலிருந்தால், அது உங்கள் சாட்சிக்கு கேடுண்டாக்குகிறது. கர்த்தர் உங்களை எப்படி நடத்துகிறாரோ அப்படி செய்யுங்கள். தேவன் உங்களை சரியான வழியில் நடத்தும்படியாக ஜெபிக்கிறேன்.