பாருங்கள்? நான்... இந்த கேள்வி ஒருக்கால் இதுவாக இருக்கலாம். நான் துரிதப்பட முயல்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது. இவைகளை வைத்து விட வேண்டும். ஏனெனில் ஒரு மணி நேரம் கழிக்க வேண்டிய சில இடம் கேள்வியில் வருகிறது, அதை விரிவாகக்கூற வேண்டும். நான் நிறுத்திக் கொள்கிறேன்.
229. பாருங்கள்? ஜனங்கள் இதை கூற விரும்புகின்றனர், அதாவது சபையானது உபத்திரவ காலத்தை சந்திக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? அது சந்திக்காது. அது சந்திக்க முடியாது (பாருங்கள்?), ஏனெனில் அது ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது.
230. இப்பொழுது, சபையானது, லோத்தைப் போல் பெயர் "விசுவாசிகள், அவன் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அக்கியினின்று இரட்சிக்கப்பட்டான். நோவா உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அதற்கு மேல் தூக்கப்பட்டு, காமுடன் வெளி வந்து, அவனும் பூமியை மறுபடியும் மாசுபடுத்தினான். பாருங்கள்? லோத்து வெளியே வந்தான், அவனுடைய சொந்த குமாரத்திகள் அவனுடன் படுத்தனர் , அவனுடைய குமாரத்திகளின் மூலம் அவனுக்கு பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்? ஆனால் ஆபிரகாமோ ராஜரீக சந்ததியை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை, பிறப்பித்தான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுதலில் மகிமைக்கு சென்றான். அவன் நடக்கச் சென்று வீட்டுக்கு சென்று விட்டான். அவன் உபத்திரவ காலத்தின் வழியாக செல்ல வில்லை. பார்த்தீர்களா?
231.பாருங்கள்? வேதம் முன்னடையாளத்தின் மூலம் ஒருபோதும்... முன்னடையாளங்கள் ஒருபோதும் தவறுவதில்லை. பாருங்கள்?, மணவாட்டி உபத்திரவ காலத்தின் வழியாக செல்வாள் என்று முன்னுரைக்கவில்லை... சபையானது உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும்.
232. இப்பொழுது, ஜனங்கள், "ஆதி காலத்து பரிசுத்தவான்களைக் குறித்தென்ன? என்று கேட்கின்றனர். அது யுகங்கள் மாறுதலாகும். அது துன்புறுத்தலின் கீழ், சபைகாலங்களின் செய்தியைக் கேட்க நீங்கள் இங்கு இருந்திருந்தால், அவர்கள் எவ்விதம் இருளின் காலங்களின் வழியாக செல்ல வேண்டியிருந்ததென்றும், அவர்கள் துன்புறுத்தலை சகிக்க வேண்டியிருந்ததென்றும் அது காண்பிக்கிறது. ஏனெனில் சபை காலங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் இருளடைந்து, முடிவில் அவர்கள் அவருடைய நாமத்தை மறுதலிக்கும் நிலையையடைந்து, வேறொரு நாமத்தை எடுத்துக் கொண்டு வாழ்ந்து, ஆனால் மரித்தவர்களாயிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது - சர்தை சபையின் காலத்தில். அதன் பிறகு அது பிலதெல்பியா காலத்துக்குள் வந்து, முடிவில் மணவாட்டியை வெளியே அழைக்கும் நேரத்தை அடைகிறது. மணவாட்டி எல்லா ஆக்கினைக்கும் தப்புகிறாள். பூமியின் மேல் வரவிருக்கும் ஆக்கினைக்கும் கோபாக்கினைக்கும் தப்பித்துக் கொள்ள அவள் பாத்திரராயிருக்கிறாள் - அதன் வழியாக செல்வதற்கு அல்ல, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள. பாருங்கள். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? ஒவ்வொருவரும்?
233. சபை, வெதுவெதுப்பான சபை, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு புறம்பேயுள்ள எதுவுமே உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்லும். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருக்க மாட்டார்கள். "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை" (வெளி.19:5) முன் குறிக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, தேவனால் சொந்தமாக தெரிந்து கொளப்பட்ட மணவாட்டி மட்டுமே. "அது யார், சகோ. பிரன்ஹாமே?" எனக்குத் தெரியாது. அது யாரென்று என்னால் கூற இயலாது. ஆனால் அது இருக்கப் போகிறதென்று எனக்குத் தெரியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்துள்ளார். பாருங்கள்? அவர்கள் தான் உபத்திரவ காலத்துக்கு தப்பி மேலே எடுத்துக் கொள்ளப்படுவார்கள், மற்றவர்களோ உபத்திரவ காலத்தின் வழியாக இங்கு கீழே கடந்து செல்வார்கள். எல்லாமே ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு கொல்லப்படும். அதன் பிறகு நீதிமான்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது வந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள்.
234. இந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது. அப்பொழுது மரித்தோர், நல்லோர் தீயோர் இருவரும், உயிரொடெழுவார்கள். புத்தகங்கள் திறக்கப்படுகின்றன, ஜீவபுஸ்தகமும் திறக்கப்படுகிறது; அப்பொழுது பரிசுத்தவான்கள் - மனைவியும் கணவனும் - உட்கார்ந்து கொண்டு நியாயந்தீர்ப்பார்கள். அப்பொழுது "அவர் இருப்புக் கோலால் சகல ஜாதிகளையும் நியாயந்தீர்ப்பார்" என்னும் வசனம் நிறைவேறுகிறது. எல்லா தேசங்களும் அங்கு அவருக்கு முன்பாக நிற்கும், அவர் இருப்புக்கோலால் அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரித்து, வெள்ளாடுகளை நோக்கி "அகன்று போங்கள்" என்றும், செம்மறியாடுகளிடம், “வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே" என்பார்.
235. பூமியின் பரப்பு முழுவதிலும் பரிசுத்தவான்களின் 'காம்ப் கூட்டம்' ஒன்று நடைபெறும். சாத்தான் தன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பரிசுத்தவான்களோடு யுத்தம்' பண்ணச் செல்கிறான் அவன் தொடக்கத்தில் மகிமையில் செய்த அதே விதமாக. அப்பொழுது தேவன் வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷிப்பார். முழு பூமியும் அகற்றப்படுகிறது. அது எரிந்து அழிக்கப் படுகிறது. அப்பொழுது சமுத்திரம் இனி இல்லாமல் போகும், தண்ணீர் இனி இல்லாமல் போகும், ஒன்றுமே பூமியின் மேல் விடப்பட்டிருக்காது. எரிமலைகள் வெடித்து சிதறித் தெளித்து, எல்லாமே.
236. "பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான் பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது" (வெளி.21:1-2). அது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இந்த மணவாட்டியில்... "இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது" (வெளி. 21:3). தேவன் அவர்களிடத்திலே கூர்நுனிக்கோபுர வடிவிலுள்ள ஆயிரத்தைந்நூறு சதுர மைல் பரப்புள்ள அந்த நகரத்திலே வாசமாயிருப்பார். நகரத்தின் உச்சியில் வெளிச்சம் இருக்கும். ஆமென்.
ஓ. சீயோன் மலையின் மேலுள்ள அந்நகரம் அந்நியனாயிருந்தும், அதை இன்னும் நேசிக்கிறேன்' ' நான் மலையின் மேலுள்ள அந்நகரத்தை அடையும்போது காலா காலங்களில் உம்மை சந்திப்பேன்.
237. சீயோன் மலையின் உச்சியில் ஆட்டுக்குட்டியானவர் வீற்றிருப்பார். நகரத்துக்கு வெளிச்சம் தேவையில்லை, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு. ஆட்டுக் குட்டியானவருக்கு மேல் பிதா, அந்த 'லோகாஸ்' இருப்பார். தேவன், அந்த மகத்தான வெளிச்சம், நித்திய வெளிச்சம், சிங்காசனத்துக்கு மேலே பிரகாசிப்பார். இயேசு அவருடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாட்டார், தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பிதா குமாரனின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருப்பார், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பார்கள். “அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசா. 65:24). அது உண்மை.
238. இயேசு ஒரு பரிபூரண, பரிபூரண காலத்தை, பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுக்கு ஒப்புவிப்பார் - அவர் மீட்டுக் கொண்டதை பிதாவினிடம் ஒப்புவிப்பார். அது சரியா? ஆவியாயிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்புவிப்பார், மனிதனிடம் அல்ல, ஆவியாயிருக்கிற பிதாவினிடம். நன்மையானவைகளின் எல்லா சுபாவமும் ஒன்று திரண்டுள்ளது தான் தேவன். நன்மையானவைகளில்... நன்மை தாறுமாறாக்கப்படுதலே பொல்லாங்கு; அது சாத்தானின் ராஜ்யம். நன்மையான எல்லாமே தேவனுக்குச் சொந்தமானது. பொல்லாங்கு அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமானது.
239. அதன் பிறகு தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்குள் திடமான பொருளானார். அது தான் அவருடைய குமாரன். இந்த குமாரன், மற்ற குமாரர்களைக் கொண்டு வரும் பொருட்டு தம்முடைய ஜீவனை ஈந்தார் - தேவன் காணக்கூடியவராய் அவர்கள் எல்லோரிலும் கிரியை செய்யும் பொருட்டு, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" (யோவான் 14:20).
240. ஓ, சகோரதரனே, அது ஒரு உண்மையான நாளாயிருக்கும். நீங்கள் செய்தியைக் கேட்பதற்காக பர்மிங்ஹாமிலிருந்து காரோட்டிக் கொண்டு வரவேண்டிய அவசியமிராது; அப்பொழுது செய்தி நம்முடனே கூட இருக்கும். இல்லையா? ஓ, அது மிகவும் அருமையான, அற்புதமான தருணமாயிருக்கும். நாம் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்; அந்த நாள் வர தேவன் துரிதப்படுத்துவாராக.
241. அங்கு அமர்ந்திருக்கும் அந்த மகத்தான நகரம் (இப்பொழுது. பாருங்கள்?), அது... நீங்கள் நினைக்கலாம் "ஆயிரத்தைந்நூறு மைல் உயரமா?" என்று. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது செங்குத்தாக இப்படி ஆயிரத்தைந்நூறு மைல் இருக்காது. பாருங்கள்? எல்லா பாகங்களும் சமமாயுள்ள மற்றொரு பூகோள் அளவு நமக்குள்ளது; அது தான் கூர்நுனிக் கோபுரம். பாருங்கள்?
242. அந்த நகரம் ஒருக்கால் ஏறக்குறைய அறுபது டிகிரியில் துவங்கும். அவ்விதம் அது தொடங்குமானால், அதன் ஆயிரத் தைந்நூறு மைல்கள், அது எவ்வளவு உயரம் என்றும், அங்கு அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ஆனால் மலையின் மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவே தெரியாது. அறுபது டிகிரி சரிவில் ஆயிரத்து ஐந்நூறு மைல் உயரம். நீங்கள் இப்படி இருப்பீர்கள். பாருங்கள்? நகரம் அனைத்தும் இந்த மலையின் மேல் தான் இருக்கும். அது எவ்வளவு உயரமோ அவ்வளவு நீளமும் கூட; அது எவ்வளவு நீளமோ அவ்வளவு அகலமும் கூட - உயரம், ஆழம், உயரம் எல்லாமே சமம்; எல்லா சுவர்களும் சமம். கூர்நுனிக் கோபுரத்துக்கு நான்கு சுவர்கள் உள்ளன. இந்த நான்கு சுவர்களும்...
243. இப்பொழுது. நகரத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் 216 அடி உயரம், 144 முழங்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு கல் - அந்த நகரத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே. ஓ, என்னே! நாம் ஏன் இந்த உஷணமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் இந்த காரியங்களைச் செய்கிறோம்? நாம் ஏன் இவ்விதம் காரோட்டி வருகிறோம்? நான் ஏன் கஷ்டப்படுகிறோம்? அது வழியில் ஒவ்வொரு அங்குலமும் தகுதியுள்ளது.
ஓ, நான் வழியின் முடிவை அடையும் போது பாதையில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லாதது போல் தோன்றும். அது உண்மை. ஓ, அது எவ்வளவு இனிமையான நேரமாயிருக்கும்!
244. அங்கு இயேசு சிங்காசனத்தில் வீற்றிருப்பார். 'சிங்காசனத்துக்கு கீழே ஜீவ நதி ஓடி, இந்த நான்கு சுவர்களின் வழியாக பாய்ந்து சிறு ஓடைகளாகப் பிரிந்து, பிறகு நதியாக உருவாகி, நகரத்தின் வழியாக ஓடும். அது இப்படி தெருக்களின் வழியாக பாய்ந்தோடும். நதியின் இருபக்கங்களிலும் ஜீவ விருட்சங்கள் நின்று கொண்டிருக்கும், அவை முப்பது நாட்களுக்கு ஒரு முறை தங்கள் கனியை மாற்றி வேறொரு கனியைக் கொடுக்கும், ஒ, என்ன ஒரு நகரம்!
245. வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டு அந்த நகரத்தை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் அந்த நகரம் வருவதற்காக காத்திருந்தான். ஏன்? அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்து, ஆவியின் ஒரு பாகமாயிருந்தான். அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனிடம், “ஒரு நகரம் உண்டு” என்று உரைத்தது, அவன் அது வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன், "நான் ஒரு அந்நியன், ஒரு சஞ்சாரி. தேவன் கட்டி உண்டாக்கின நகரத்துக்காக நான் காத்திருக்கிறேன்" என்றான். அந்த நகரம் எங்கோ உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். ஓ, என்னே! அவன் அது எந்த இடத்தில் வரும் என்று காத்திருந்தானோ, அந்த பாலஸ்தீனாவில், அங்கு தான் அது எழும்பும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது சீயோன் மலையின் மேல் உள்ளது. அங்குதான் அந்த நகரம் இருக்கும்.
246. அது எங்கு பரம்புகிறது என்று பாருங்கள் - சமுத்திரத்துக்குள், ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரம் வரைக்கும். கர்த்தருடைய பர்வதத்தின் மேல் ஆயிரத்தைந்நூறு மைல் நகரம் அமர்ந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். ஓ, அது அற்புதமாயிருக்கும்!
247. அங்கு சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோலைத் தின்னும். கரடி சாந்தமாயிருக்கும், ஓனாய் அடங்கியிருக்கும். அது எப்படிப்பட்ட நேரமாயிருக்கும்! எதுவுமே தீங்கு செய்து அழிக்காது; எல்லாமே சமாதானத்திலும் அன்பிலும் இருக்கும். அங்கு வயோதிபம் இருக்காது; அங்கு வியாதியோ மரணமோ இராது.
248. ஜனங்களே, இது சாண்டாக்ளாஸ் கதை அல்ல, ஏதோ ஒரு கட்டுக்கதை அல்ல, இது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. வார்த்தை ஒருபோதும் தவறினதில்லை. அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து எண்ணிப்பார்க்கும் போது... இது வேதாகம நாட்களில் அல்ல, இந்நாளில், தேவன் நியமித்துள்ள இந்நாளில் நிறைவேறும். அவருடைய வார்த்தையில் ஒரு சிறு அணுவும் கூட ஒருபோதும் தவறினதில்லை. ஓ, அந்த நகரத்தை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். அதை நான் நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கிறீர்கள் அல்லவா?
249. இல்லை! இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, கடிகாரம் ஒன்பது மணி இருபது நிமிடங்கள் ஆகி விட்டது என்று காண்பிக்கிறது. என்னுடைய சில நண்பர்கள் கென்டக்கியிலிருந்து வந்துள்ளனர். சில நண்பர்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்துள்ளனர் என்று எனக்குத் தெரியும். இன்றிரவு முழுவதும் நீங்கள் தங்க எண்ணினால், உங்கள் அறைக்கான கட்டணத்தை நான் செலுத்தி விடுகிறேன். உங்கள் இரவு உணவு உங்களுக்காக காத்திருக்கிறதென்றும், நீங்கள் தங்க விரும்பினால் விடுதி கட்டணத்தை நான் செலுத்தி விடுவேன் என்றும் ஏற்கனவே நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. பின்னால் உள்ள பில்லியை சந்திக்க வேண்டும். நான் நிச்சயம் அதை செய்வேன். உங்களுக்கு உதவி செய்ய 'நான் எதையும் செய்வேன். உங்களை நான் நேசிக்கிறேன்.
250. இந்த கேள்விகளுக்கு முரணாக பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நீங்கள் நம்பாவிட்டால், அதனால் பரவாயில்லை. நீங்கள் எப்படியானாலும் என்னை நேசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், ஏனெனில் உங்களை. நான் நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். எனக்குத் தெரிந்த வரையில் இந்த கேள்விகளுக்கு நான் சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நண்பர்களே, சில கேள்விகளுக்கு நான் தவறாக பதிலுரைக்கக் கூடும். ஆனால் வேண்டுமென்றே நான் தவறாக பதில் கூறவில்லை. எனக்கு ஆறு அல்லது எட்டு கேள்விகளே இருந்திருக்குமானால் அவைகளில் நீண்ட நேரம் நிலைத்திருந்து அவைகளை விவரித்திருப்பேன். ஆனால் அவைகள் அனைத்தையும் இப்பொழுது வேகமாக பார்ப்பதற்கு பதிலாக... விவாகமும் விவாகரத்தும் என்னும் பேரில் என்னிடம் சிலகேள்விகள் உள்ளன. அவைகளில் சிலவற்றிற்கு பதிலுரைக்கலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் இந்த கேள்விகள் குவியலிலிருந்து அவைகளை என்னால் பொறுக்கி எடுக்க முடிய வில்லை. என்னிடம் மிகவும் முக்கியமான சில கேள்விகள் உள்ளன, மிகவும் முக்கியமான கேள்விகள். என்னால் கூடுமானால், அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.
251. இப்பொழுது, நீங்கள் அருகில் வசிக்க நேர்ந்தால் பில்லியை புதன் கிழமையன்று தொலைபேசியில் கூப்பிடுங்கள். நான் திரும்பி வந்து விடுவேனா என்று அதற்குள் எனக்குத் தெரிந்து விடும். இந்த வாரம் நான் ஜெபத்தில் தரித்திருப்பேன். ஆனால் எனக்கு நிறைய தனியார் பேட்டிகள் உள்ளன, ஓ, இவ்வளவு பெரிய குவியல். அரிசோனாவிலும் ஏறக்குறைய இவ்வளவு உள்ளன. இந்நாட்களில் ஒன்றில், என்னால் முடியும் போது, அவைகளை நான் கவனிக்க வேண்டும். அது அதிகமாக வியாதிப்பட்டுள்ள ஜனங்கள். அவர்களில் சிலருக்கு பிரச்சினைகள் உள்ளன, அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை - பிரச்சினைகள் உள்ள கணவன் மார்களும் மனைவிமார்களும்.
252. இங்குள்ள சில கேள்விகள் தனியார் பேட்டிகளுக்கு திருப்பப்பட வேண்டும், ஏனெனில் ஜனங்கள் தங்கள் திருமண விவகாரங்களைக் குறித்து கூறியுள்ளவைகளை என்னால் வெளிப்படையாய் படிக்க முடியவில்லை - அப்படிப்பட்ட காரியங்கள். நான் பில்லியை அனுப்பி, அவர்கள் யாரென்று கண்டறிந்து, அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, இந்த விவகாரங்களைக் குறித்து நான் நேர்முகமாக பேசுவதற்காக அவர்களை பேட்டியில் சேர்த்திருக்கிறேன் என்று அறிவித்தேன். சில கேள்விகள் மிகவும் பிரச்சினைக்குரியவை, இவை பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள்.
253. உங்களுக்கு உதவி செய்ய முயலவே நான் இங்கிருக்கிறேன், ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்த என் பிள்ளைகள். உங்கள் ஒவ்வொரு வரையும் நான் உரிமை கோருகிறேன். இன்றிரவு உங்களை நான் உரிமை கோருகிறேன், எல்லா நேரத்திலும் உங்களை நான் உரிமை கோருகிறேன். உங்களை நான் எப்பொழுதும் என் சகோதரனும் என் சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், குரு. வானவர்களை பிதா (father) என்று அழைக்கின்றனரே. அவ்விதம் அல்ல. நான், பவுல் கூறினது போன்று, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன் (espouse). அதாவது உங்களை கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.
254. "அதை நான் எவ்விதம் செய்வேன். சகோ. பிரன்ஹாமே?" வார்த்தையில் நிலைத்திருங்கள்: சுத்தமாகவும் தூய்மையாகவும் வாழுங்கள்; உலகத்தின் காரியங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதிருங்கள். உலகத்தின் மேல் அன்பு உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், “ஓ, இயேசுவே, அதை என்னிடமிருந்து விலக்கி விடுவீராக. நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை" என்று கூறுங்கள்.
ஏதோ இதை வெறுமனே கூறுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நீங்கள் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்காக ஒவ்வொரு நாளும் வாழுங்கள். எந்த பொல்லாப்பையும் செய்யாதிருங்கள்.
255. அநேக சமயங்களில் நான் கால்வீனிய விசுவாசத்தைக் குறித்து பேசுகிறேன். அதனால், நீங்கள் விரும்பின. எதையும் செய் வதற்கு அது உங்களை அவிழ்த்து விட்டுள்ளது என்று எண்ணி விடாதீர்கள். அன்றொரு நாள் ஒருவன்... நான் அவனிடம், "நீ சபைக்கு செல்லவில்லையா?" என்று கேட்டேன்.
அவன். "நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன்" என்றான்.
அந்த மனிதனின் மனைவி என்னிடம் வந்தாள், அவள் துணிகளை சலவை செய்யுமிடத்திலிருந்து ஞாயிறன்று வந்து கொண்டிருந்தாள். நான், "நீ ஏன் சபைக்குச் செல்லவில்லை?" என்று கேட்டேன்.
அவள். "நான் துணிகளை சலவை செய்து கொண்டிருந்தேன்" என்றாள்.
நான், "நீ அவ்விதம் செய்திருக்கக்கூடாது" என்றேன்.
அவள், “நான் சட்டங்களை கைக்கொள்பவள் (legalist) அல்ல: என்றாள்.
நான், "நீ கிறிஸ்தவள் என்று நான் எண்ணினேன். வேறொரு வருடைய வழியில் நீ இடறலைப் போடுகிறாய் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டேன். பாருங்கள்?
அவள் “நல்லது, ஆ. இதை நான் விசுவாசிக்கிறேன். இவைகளை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் சட்டங்களை கைக்கொள்பவள் அல்ல" என்றாள்.
256. நல்லது. பாருங்கள் என் சகோதரனே, சகோதரியே, இங்கு பாருங்கள். “மாம்சம் புசிப்பது, என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்குமானால், இந்த உலகம் உள்ள வரைக்கும் நான் மாம்சம் புசியேன்" என்று பவுல் கூறியுள்ளான். நான் நினைக்கிறேன், இது. மிகவும் சிறந்ததாயிருக்கும்...
257. இப்பொழுது நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் வேட்டையாடுகிறீர்கள். நீங்கள் ஞாயிறன்று ஒருபோதும் வேட்டை யாடினதில்லையா?" எனலாம். உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நான் இதைக் குறித்து என்னை புகழ்ந்து கொள்வதில்லை, ஆனால் நான்... நான் ஓய்வு நாளை ஆசரிக்கும் ஒருவன் அல்ல, பரிசுத்த ஆவியே நமது இளைப்பாறுதல் என்று விசுவாசிப்பவன் நான். அதை நான் விசுவாசிக்கிறேன், ஆனால் உயிர்த்தெழுதலை ஒரு ஞாபகார்த்தமாக நாம் மதிக்க வேண்டும் என்பது என் கருத்து. அது ஒரு ஞாபகார்த்தம்... நீங்கள் ஏதாவதொரு நாளை கௌரவிக்க விரும்பினால், உயிர்த்தெழுதல் நாளை கௌரவியுங்கள்.
258. ஒரு குறிப்பிட்ட நாளை ஆசரிக்க வேண்டும் என்னும் பிரமாணம் எதுவும் கிடையாது. ஏனெனில் நாம் அவருக்குள் பிரவேசிக்கும் போது, சமாதானத்தின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறோம். ஓய்வு நாள் என்றால் என்ன என்னும் கேள்வி என்னிடம் உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் அந்த கேள்விக்கு வெகு விரைவில் பதில் கூறுவேன். தேவனுக்கு சித்தமானால் அதை நான் விவரிப்பேன்
இப்பொழுது கவனியுங்கள், இதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள். நான் சிறு பையனாக இருந்த போது, இந்த சாலையில் எய்ச்ஸ்க் குடும்பத்தினர் வசித்துக் கொண்டிருக்கும் இடத்தில் நான் இருந்த போது, எனக்கு ஏறக்குறைய பதினான்கு வயது இருக்கும் நான் பிழைப்புக்காக சிறு மிருகங்களை கண்ணி வைத்து பிடித்து வந்தேன் (trapper). எங்கள் வீட்டுக்கு தேவையான ஆகாரத்தை நான் வாங்குவதற்கு உதவி செய்த ஒரே வழி, ஸ்கங்க்கள் (skunks), மஸ்க்ராட்டுகள் (muskrats), ஒப்பஸம்கள் (oppossums) போன்றவைகளை பிடித்தலின் மூலமாகவே.
எனக்கு மிருகங்களைப் பிடிப்பதில் மிகவும் பிரியம். அதை நான் செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஒரே ஒரு உடுப்பு மாத்திரம் இருந்தது. எனக்கு உடுக்க அவ்வளவுதான் இருந்தது. அம்மா அதை கழற்றி துவைத்து, மறுபடியும் அணிய வைப்பார்கள். அப்படித்தான் நான் சிறு பையனாயிருந்த போது பள்ளிக்குச் சென்றேன். ஒரு இரவு நான் அங்கு நின்று கொண்டிருந்த போது, "வாத்தன் என்னுமிடத்தில் சற்று மேலே நான் கண்ணியை வைத்திருக்கிறேன்" என்று கூறினேன். இந்த கண்ணிகளை வைக்க நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சுமார் 2 மணிக்கு கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்துக்கு நேரத்தோடே செல்வதற்காக திரும்பி வருவது வழக்கம். நான் ஒரு முயலைப் பிடித்தால் எனக்கு பதினைந்து சென்டுகள் கிடைக்கும். அந்த பணத்தை கொண்டு ஒரு பெட்டி வெடி மருந்துகள் வாங்குவேன். அது மூன்று அல்லது நான்கு முயல்களைக் கொல்லும். நாங்கள் குழம்புக்காகவும் இரவு உணவுக்காகவும் வேண்டிய முயலை வைத்துக் கொண்டு, மற்றதை விற்று விடுவேன். அதில் கிடைக்கும் பணம் ரொட்டி அல்லது சிறிது ஆகாரம் வாங்கவோ அல்லது குழம்பு செய்வதற்காக கொஞ்சம் மாவு வாங்கவோ போதுமானதாயிருக்கும். நீங்கள் அவ்வளவு வறுமையான வாழ்க்கை வாழ நேரிட்டதோ என்னமோ, எனக்குத் தெரியாது.
259. நான் ஆற்றில் ட்ரவுட் (trout) மீன்களைப் பிடிப்பதற்காக கண்ணி வரிசைகளை போட்டு, அவைகளைப் பிடித்து ஒரு பவுண்டு மீனை பத்து சென்டுகளுக்கு விற்பது வழக்கம். கண்ணி வரிசைகளை அமைக்க என்னிடம் படகு இருக்கவில்லை. நான் ஒரு மரக்கட்டையுடன் நீந்திச்செல்வேன். நான் ஆற்றில் இறங்கும் போது அது மிகவும் குளிராக இருக்கும். கண்ணிகள் உள்ள பக்கெட்டை நான் மரக்கட்டையின் மேல் வைத்து, உடுப்பில்லாத என் உடல் ஆற்றில் இருக்க, இப்படி நீந்தி நீந்திச் சென்று, கண்ணியை போடுவேன். இந்தப் பக்கத்தில் உள்ள கயிற்றில் நான் என் மீனைக் கட்டுவேன். நான் நீந்திக் கொண்டிருக்கும் போது 'காட்ஃபிஷ்' மீன்கள் என் காலை உராய்ந்து கொண்டு போகும். அந்த விதமாக நான் கண்ணியைப் போடுவது வழக்கம்.
260. ஆனால் பாருங்கள், எத்தனையோ இரவுகளில் நான் 11 மணிக்கு அந்த ஆற்றுக்குச் சென்று அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு கண்ணியையும் குலுக்கிப் பார்த்திருக்கிறேன். ஆறு நாட்களில் நான் போதிய மீன்களைப் பிடிக்காமல் போனால், அது ஏழாம் நாளில் கிடைப்பதை நான் விரும்பினதில்லை. நான் மழையில் அங்கு நின்றதுண்டு.
261. ஒரு இரவில் நான் நின்று கொண்டு நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கிறேன்... நான் ஒரு பாவியாய் இருந்தேன், ஆனால் நான் நின்று கொண்டு இப்படி வாசலின் நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்தேன். ஓ, மழை அதிகமாக பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது சுமார் 11 மணி இருக்கும். நான், "இன்றிரவு எனக்கு நேரமாகி விடும். நான் போய் அந்த கண்ணிகளில் ஒவ்வொன்றையும் வெளியே எடுத்து விடுவேன். நான் ஓய்வு நாளன்று மீனைப் பிடிக்கமாட்டேன். அன்று நான் கண்ணியை போட மாட்டேன்" என்றேன். தேவன் அதை கெளரவித்தார்.
262. நான் என் வாழ்நாள் முழுவதும் வேட்டைக்காரனாயிருக்க விரும்பினதை எண்ணிப் பார்க்கிறேன்... ".30-30 துப்பாக்கியை சொந்தமாகப் பெற எனக்குப் போதிய பணம் கிடைத்தால், அப்பொழுது நான் சில வெடிமருந்துகளை வாங்கிக் கொண்டு, மலைகளுக்குச் சென்று உலகத்தையே மறந்து விடுவேன்" என்று எண்ணினேன். “சில சமயங்களில் என் .22 துப்பாக்கியை எடுத்துச் சென்று நன்றாக சுடப் பழகினால், வேட்டைக்காரன் எவனாகிலும் அவனுடன் கூடச் செல்ல என்னைக் கேட்டுக் கொள்ளக் கூடும். நான் குறி தவறாமல் சுடுபவனாயிருந்தால், அவனுடைய பாதுகாப்புக்காக என்னை கூடக் கொண்டு செல்வான்; நான் வேட்டைக்குச் செல்ல வாய்ப்புண்டாகும்" என்று எண்ணியதுண்டு. இப்பொழுது நான் பார்க்கும் போது, பணத்தால் வாங்கக் கூடிய மிகச் சிறந்த துப்பாக்கிகள் என் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஜனங்கள் வேட்டைக்குச் செல்வதற்காக என் துப்பாக்கிகளை அவர்களுக்கு கடனாகக் கொடுக்கிறேன்.
264. நான் மலைகளுக்குச் சென்று பிரசங்கிக்க அவர் என்னை அனுமதிக்கிறார்; உலகிலேயே மிகச் சிறந்த வழிகாட்டிகள் என்னை இலவசமாக வேட்டைக்கு கொண்டு செல்கின்றனர். "திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது."
265. நான்... இன்று காலையிலும் கூட இங்குள்ள மான் வேட்டையாடும் ஒரு முதியவர் அவருடைய 35 ரெமிங்டன் துப்பாக்கியை கொண்டு வந்து - அந்த துப்பாக்கி உண்மையில் எனக்குத் தேவையும் கூட இல்லை - தமது கரங்களை என் தோள் மேல் போட்டு, வேட்டையாடுவதற்கு அவருக்கு வயது அதிகமாகி விட்டதென்று கூறி "என் துப்பாக்கியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்" என்றார். நான் சிறுவனாயிருந்த போது, அப்படிப்பட்ட ஒரு துப்பாக்கியை சொந்தமாக வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் சுவற்றில் மிகச் சிறந்த துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருப்பதையும், வேட்டைக்காக பல இடங்களுக்குச் செல்வதையும் எண்ணிப்பார்க்கிறேன்.
266. நான் சிறுவனாயிருந்த போது நடந்தது என் நினைவுக்கு வருகிறது. பையன்கள் 'ஐஸ்கிரீம் கோன்கள்' வாங்குவார்கள். சில சமயங்களில் சில பையன்களுக்கு கூடுதல் காசு. இருந்தால், அவர்கள் எனக்கு ஒரு 'கோன்' வாங்கித்தருவார்கள். அவர்களுக்கு திருப்பி வாங்கித்தர என்னிடம் காசு இருந்ததில்லை. நான் நினைத்தேன், "நான் மட்டும்..."
267. சில சமயங்களில் அவர்கள் எனக்கு “மட்லார்க் ஹாம்பர்கர்" என்று நாம் அழைப்பதை வாங்கித் தருவது வழக்கம். உங்களுக்கு அது ஞாபகமுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பழங்காலத்தவரான உங்களில் சிலருக்கு. அது ஐந்து சென்டு காசுக்கு கிடைக்கும், அதனுடன் கூட நிறைய பொறித்த வெங்காயம் கொடுப்பார்கள். ஓ, அப்படிப்பட்டவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சிறுவனாயிருந்த போது எங்களுக்கு அது கிடைக்கவில்லை. வெறும் சோள ரொட்டியும் (Cornbread) சர்க்கரை குழம்பும் (molasses). அதை சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.
268. யாராகிலும் ஒருவர் எனக்கு ஒரு ஹாம்பர்கர் வாங்கிக் கொடுத்தால், அதைப் பிடித்திருந்த என் விரல்களையும் கூட நான் நக்குவது வழக்கம். அது அவ்வளவுருசியாக இருக்கும். "அந்த மனிதனுக்கு நான் திருப்பி ஒரு ஹம்பர்கர் வாங்கிக் கொடுக்க முடிந்தால்" என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்பொழுதோ சபை முழுவதுக்கும் அவர்களுடைய இரவு உணவை வாங்கித்தர என்னால் முடிகிறது.
269. இவையனைத்தையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். இவை எங்கிருந்து வந்தன? தேவனுடைய கிருபை, நான் செய்தது ஒன்றுமில்லை.
270. நான் இங்குள்ள தெருவில் நடந்து சென்று யாராகிலும் ஒருவருடன் பேசுவதை எண்ணிப் பார்க்கிறேன். என் தகப்பனார், குடிப்பது வழக்கம், அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் விஸ்கி தயாரிப்பார். யாருமே என்னுடன் சாவகாசம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நான் தெருவில் நடந்து சென்று மனிதர்களுடன் பேச முயற்சிப்பேன்; அந்த மனிதர்களை. நான் இன்றைக்கும் சந்திக்கிறேன். நான் யாரிடமாவது பேச முயன்றால், பேசுவதற்கு அவர்களுக்கு வேறு யாருமில்லை என்றால் அவர்கள் நின்று கொண்டு, “ஆம், உ, ஊ" என்று மட்டும் சொல்லுவார்கள். பாருங்கள்? ஏனெனில் நான் பிரன்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
271. நான் மிகவும் வருத்தப்பட்டு நடந்து சென்று விடுவேன். “அதைக் குறித்து நான் குற்றவாளியல்லவே. என் தகப்பனார் செய்து கொண்டிருப்பதை நான் செய்யவில்லையே. என் வாழ்நாளில் நான் குடித்ததே கிடையாது. அப்படியிருக்க நான் ஏன் இதை சகித்துக் கொள்ள வேண்டும்?” என்று எண்ணியதுண்டு. அண்மையில் நான் என் மனைவியிடம், “ஜனங்களை சந்திக்காமலிருக்க, நான் நகர்புறத்தில் தங்க வேண்டியுள்ளது" என்று கூறினேன். தேவன் எனக்கு மிகவும் நல்லவராக இருந்து வருகிறார்.
272. ஒரு முறை தாவீது நாத்தான் தீர்க்கதரிசியிடம் கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். நாத்தான்... தாவீது அவனிடம், "நான் கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணுகையில் என் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி திரைகளின் கீழ் இருக்கிறது சரியாயிருக்குமோ" என்று கேட்டான் (1 நாளா. 17:1)
அதற்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான், “உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார்" என்றான். 'தீர்க்கதரிசி தவறு செய்தான், ஆனால் வேண்டுமென்று இல்லை.
அன்றிரவு கர்த்தர் தீர்க்கதரிசியிடம் வந்து, “நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: ஆடுகளின் பின்னே நடந்து, ஒரு சில ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன் - (அவர் அவனுக்கு மிகப் பெரிய நாமத்தை கொடுத்ததாக கூறவில்லை, அவர் பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை கொடுத்ததாக மட்டும் கூறினார்). தாவீதே, இவையெல்லாம் உனக்கு நான் செய்தேன். நீ போன இடமெல்லாம் உன் சத்துருக்களையெல்லாம் நான் நிர்மூலமாக்கினேன். நான் உன்னோடே இருந்தேன். நான் உனக்கு எந்த விதத்திலும் தவறவில்லை, நான் ஒருபோதும் தவறவும் மாட்டேன். ஆனால் நீ எனக்கு ஒரு வீட்டைக்கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்" என்றார் (1 நாளா. 17:4-10).
273. அதைக் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன், தேவன் எனக்கு உதவி செய்து, பெரிய மனிதர்களை நான் அறியவும், உலகம் முழுவதும் சென்று வரவும் தக்கதான ஒரு நிலைக்கு என்னை கொண்டு வந்துள்ளார். உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் தங்களுக்காக ஜெபம் பண்ணும்படி என்னை அழைக்கின்றனர். வியாதிப்பட்டோர் அவர்களுடன் சில நிமிடங்கள் நான் செலவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் என்னைத் தெருவில் ஏறெடுத்தும் பாராமல் தலையைத்திருப்பிக் கொண்டு சென்றனர். இப்பொழுது என் மூலம் நகருக்கு வரும் ஜனங்களினால், அவர்களுக்கு உணவளித்து அவர்கள் விடுதிகளில் அவர்கள் தங்குவதன் மூலம், வியாபாரிகள் செழிக்கின்றனர்.
274. ஜனங்கள்... ஜனங்கள் என்னை முன்பு நேசிப்பதில்லை, என்னால் அவர்களுக்கு ஒரு உபயோகமும் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நான், தேவனுடைய உதவியைக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று 'நம்புகிறேன். ஓ. "திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது".