16. இல்லை, என் அருமை நண்பனே, நீர் தவறல்ல, அது சரியே. இப்பொழுது, நீங்கள் அவ்விதம் நினைக்கத்தக்கதாக நான் ஒலிநாடாவில் ஏதாகிலும் கூறியிருந்தால்...
இப்பொழுது, நான் அவ்விதம் கூறவில்லை. இவையெல்லாம் எனக்கு இப்பொழுது புதிதாக உள்ளன. இந்த கேள்விகள் என்னவென்று நான் பார்க்கவில்லை. பாருங்கள்? இந்த கேள்வித் தொகுப்புகளை நான் போன ஞாயிறன்று பெற்றுக் கொண்டேன். இவைகளை இந்த காகித உறையில் போட்டு அங்கு வைத்து விட்டேன்.
17. இப்பொழுது, இதில்... இல்லை, மணவாட்டி எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் அநேகர் பூமியின் தூளில் இருப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும் இருப்பார்கள்; அவர்கள் வடக்கில் பனியினால் உறைந்திருப்பார்கள், வெப்பமான காடுகளின் மண்ணில் இருப்பார்கள் உலகம் பூராவிலும் இருப்பார்கள். ஆனால் தேவ எக்காளம் முழங்கும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருந்து, நித்திரையினின்று விழித்து, அவர்கள் எங்கிருந்த போதிலும் பூமியின் தூளிலிருந்து வெளியே வருவார்கள். இப்பொழுது, இதில், உயிர்த்தெழுதல் உலகம் முழுவதும் நடக்கும். பாருங்கள்? எல்லா விடங்களிலிருந்தும், பூமியின் உருண்டையில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், அவர் வரும் போது அவரோடு கூட வருவார்கள் (பாருங்கள்), நீங்கள் எங்கிருந்த போதிலும்.
18. ஆதி காலத்து இரத்த சாட்சிகளின் நாட்களில் இருந்த அரங்கத்தை எண்ணிப் பாருங்கள். அந்த கிறிஸ்தவர்கள் சிங்கங்களின் கெபியில் எறியப்பட்டனர். அந்த சிங்கங்கள் அந்த கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுடைய உடல்களைப் புசித்தன. பாருங்கள்? அவர்கள் சிதறப்பட்டிருந்தனர், அவர்களுடையஉடல்கள் பூமியின் மீது சிங்கங்களின் கழிவுப் பொருட்களில் இருந்தன. அது எங்கிருந்த போதிலும், உங்களால்... பாருங்கள், நீங்கள் ஒரு பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், அது காணக்கூடாத பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவன் அந்த பொருளை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். பாருங்கள்?
19. இப்பொழுது, நீங்கள் ஒரு இரத்த அணுவை (cell) எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இரத்த அணுவை நீங்கள் பிளந்தால், அது இரத்த அணுவுக்குள் ஒரு இரத்த அணுவாக, பிறகு அணுவாக, மூலக்கூறாக பிளந்து, முடிவில் காணக்கூடாததாக ஆகிவிடும். அது நீங்கள் தொடக்கூடிய ஒரு இயற்கை பொருளிலிருந்து, வாயுக்களாகவும்; வாயுக்களிலிருந்து அமிலங்களாகவும் அமிலங்களிலிருந்து வாயுக்களாகவும் ஆகி, கடைசியாக ஒரு சிறு காரியத்தில் முடிவடைகிறது, அதுதான் ஆவி. இந்த வாயுக்களில் குடி கொண்டிருந்த இந்த ஆவி... அது அதே வாயுக்களாக இருக்காது, ஆனால் நீங்கள் எந்த விதமான தோற்றத்தை இப்பொழுது உடையவர்களாக இருக்கிறீர்களோ, அது அப்படியே மறுபடியும் இருக்கும். பாருங்கள்? ஆவி அதை கட்டுப்படுத்தியிருந்தது.
20. இப்பொழுது, வேறு சொற்களில் கூறுவோமானால், நீங்கள் வாலிபனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ ஆகும் போது, தேவன் உங்களைப் படமெடுக்கிறார். இப்பொழுது, நீங்கள் எவ்வளவு வயோதிபனாகி சுருக்கம் விழுந்த போதிலும்; எவ்வளவாக உருக்குலைந்தாலும், அது மீண்டும் பழைய நிலைக்கு வரும். அந்த சரீரம் அழிக்கப்பட்டு, உருக்குலைந்து, சுட்டெரிக்கப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகி, அவ்விதம் என்னவான போதிலும், அது வாயுக்களால், பூமியிலுள்ள பதினாறு மூலப்பொருட்களால் உண்டாக்கப்பட்டது. அது கால்சியம், பொட்டாஷ், பெட்ரோலியம், விண்வெளி ஒளி போன்ற அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த சரீரம் உண்டாக்கப்பட்டது. இப்பொழுது, என்னவானாலும், பூமி அனைத்துமே அவைகளால் நிறைந்துள்ளது.
21. ஆனால் இப்பொழுது, இந்த படம் தான் முக்கியமான காரியம். உயிர்த்தெழுதலின் போது, அந்த வாயுக்களும், அமிலங்களும் அவைகளுக்குரிய இடத்தில் மீண்டும் வந்து அந்த படத்தை மறுபடியும் உண்டாக்குகிறது. இந்த படமானது உங்களுக்கு பதினாறு.பதினெட்டு அல்லது இருபது வயதாயிருந்த போது, நீங்கள் காண்பதற்கு சிறந்தவர்களாயிருந்த போது எடுக்கப்படவில்லை. அது எப்பொழுது எடுக்கப்பட்டது? உலகத்தோற்றத்திற்கு முன்பே அது தேவனுடைய மகத்தான தஸ்தாவேஜுகளில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அது செய்த ஒரே காரியம், நீங்கள் தெரிந்து கொள்வதற்கென அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. பாருங்கள்? அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஊழியக்காரராகின்றீர்கள். அவர் அதை முன்னறிதல், அவரை மீட்பராகச் செய்கின்றது. அதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம்.
22. அப்பொழுது அந்த படம் முற்றிலுமாக... இது 'நெகடிவ்' இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கையின் 'நெகடிவ் பாகம். 'நெகடிவ்' ஒன்று இருக்குமானால், அதற்கான 'பாஸிடிவ்', 'நெகடிவ் ஒன்று உண்டாவதற்கு முன்பே இருக்க வேண்டும். இது உண்மையானது அல்ல. இது வரப் போகும் உண்மையான காரியத்துக்கு ஒரு முன்நிழலாக மாத்திரம் உள்ளது. நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?
23. எனவே, அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் அந்த தோற்றத்தை, தேவனுடைய மகத்தான மண்டபத்தில் உள்ள அந்த படத்தை அழிக்க முடியாது. அது அதை அழிக்க முடியாது, அது பரலோகத்தில் உள்ளது. அந்த சரீரத்தை நீங்கள் சுட்டெரிக்கலாம், சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது மீண்டும் தோன்றும். தேவன் அதை நிச்சயமாக உரைத்திருக்கிறார், அது மீண்டும் தோன்றும். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும்,
24. இப்பொழுது, நான்... நான் நினைக்கிறேன் நீங்கள் ஒலிநாடாவைப் போட்டுக் கேட்பீர்களானால்... (இந்தக் கேள்வியை யார் எழுதினார் என்று தெரியவில்லை; அதில் பெயரை கையொப்பமிடவில்லை. ஒரு சிறு காகிதத் துண்டு 'நோட் புக்கிலிருந்து கிழிக்கப்பட்டு ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளது. அது 'நோட்புக்கிலிருந்து கிழிக்கப்பட்டது போல் தோன்றுகிறது). ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த கேள்வியில், நீங்கள் கவனிப்பீர்களானால், நான் ஒலிநாடாவில் இதை தான் கூறியுள்ளேன் (இதைநீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் இது ஒருக்கால் நான் ஒலிநாடாவில் உபயோகித்த அதே சொற்களாக இருக்காது). நான் என்ன கூறினேன் என்றால், “உதாரணமாக, இன்று காலை நாம் இங்குள்ளோம். நாம் காண வாஞ்சிக்கும் நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதன் பரப்பு ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து ஃபிளாரிடா வரைக்கும், கிழக்கு சீபோர்ட் (Eastern Seaboard) டிலிருந்து எண்ணூறு மைல் மிஸிஸிபி நதிக்கு மேற்கேயும் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதை யோசித்துப் பாருங்கள். இன்று காலையில் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மக்கள், அவ்வளவு தூரத்திலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரத்திலிருந்து வந்துள்ளனர். இப்பொழுது. அந்த ஆலயம் பூமியில் எங்கிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது தற்பொழுது பாலஸ்தீனா உள்ள இடத்தில் இருக்கும் என்னும் கருத்து எனக்குண்டு. அது ஒருக்கால் அங்கு மலையின் உச்சியில் இருக்கும். அப்பொழுது சமுத்திரம் இருக்காது. பாருங்கள்,
25. இந்த உலகின் சுற்றளவு 25,000 மைல்கள், எனவே ஆயிரத்து ஐந்நூறு மைல் ஒன்றும் அதிகமல்ல. ஆனால் இந்த மகத்தான நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமுள்ளதாய் மலையின் மேல் இருக்கும்.
அவ்விதம் நான் விசுவாசிக்கும் காரணம், எருசலேமிலுள்ள சீயோன் மலையையும் அந்த நகரங்களையும் குறித்த தீர்க்கதரிசனங்களின் நிமித்தமாகவே. அங்குதான் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம் தேவன் கட்டி உண்டாக்கின அந்த நகரத்துக்காக காத்திருந்தான். அந்த தேசத்தில் அவன் அந்த நகரத்தை எதிர் நோக்கியிருந்தான். அந்த தேசம் எங்குள்ளதோ அங்கு தான் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
26. அந்த தேசத்தை நீங்கள் வரைபடத்தில் கண்டுபிடிப்பது கடினம். அது ஒரு சிறு புள்ளியைப் போல் உள்ளது. ருஷியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பாருங்கள். அங்குள்ள அந்த இடங்கள் அனைத்தும்... தேவன் ஏன் அந்த ஒரு இடத்தின் மேல் அவ்வளவு வைராக்கியமுள்ளவராய் இருந்தார்? அது தான் கேள்வி. அதை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் அப்படித்தான் எனக்குத் தென்படுகிறது. அது எங்கிருந்தாலும், அதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். எனவே அதற்காக நாம் கர்த்தரைத் துதிப்போம்.
27. கூடாரத்தை சுற்றிலும் அது ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் இருக்கும் என்று நான் கூறினதாக நீங்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தால், அது தவறான அபிப்பிராயம் (பாருங்கள்?), ஏனெனில் அது இருக்காது. இந்த கூடாரம்... இது அழிந்து போக வேண்டிய ஒரு சிறு இடம். உலகமானது சுட்டெரிக்கப்படும், அப்பொழுது இவையனைத்தும் ஒழிந்து போகும். இந்த இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்தும் எரிமலைக் குழம்பினால் வெந்து உருகிப் போகும். பாருங்கள்? எல்லா பாவமும், எல்லா வியாதிகளும், எல்லா கிருமிகளும், மற்றெல்லாம் அழிக்கப்படும். "நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின..." (வெளி 21:1).
28. சிந்தித்துப் பாருங்கள்! தேவன் ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த உலகத்தை கட்டிக் கொண்டு வந்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, இதை உருவாக்கினார். அவர் எவ்விதம் அதை செய்தார்? "அவர் தோன்றப்படாதவைகளினால் அதை உண்டாக்கினார்" (எபி. 11:3) என்று வேதம் உரைக்கிறது; அதாவது, அவர் பூமியை இந்த விதமாக உண்டாக்கினார். இப்பொழுது கவனியுங்கள்: இது அழகாயுள்ளது. சிருஷ்டி கர்த்தர் பூமியை ஒரு நோக்கத்துக்காக உண்டாக்கினார், சாத்தான் அதை அசுசிப்படுத்தினான், இங்கு விடப்பட்டுள்ளதை மீட்பதற்காக அவர் கீழே இறங்கி வந்தார். அவர் வேறெங்கோ சென்று. இப்பொழுதும் சிருஷ்டிப்பின் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
29. பூமியை உண்டாக்க அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தது. ஆனால் பூமிக்கு வரவிருக்கும் அந்த நகரத்தை சிருஷ்டிக்க அவர் இரண்டே நாட்கள் எடுத்துக் கொள்வார். அவர்... “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன் (பளிங்கான பொன்னால் நான் ஒரு நகரத்தைக் கட்டப் போகிறேன், வீதிகளில் பொன் தளம் போடுவேன்)" (யோவான் 14:2). என்ன ஒரு அழகான இடம்!
அவர் எங்கு அதை பெறுவார்? மற்ற பூமிகளில் அல்லது சந்திரன்களில், அல்லது நட்சத்திரங்களில் பொருட்கள் உண்டா? அவருக்கு அவை தேவையில்லை, அவர் சிருஷ்டி கர்த்தர். அவர் நகரத்தைக் கட்ட சென்றிருக்கிறார். ஆமென்! அது எனக்கு போதுமானது, உங்களுக்கும் அல்லவா? அது நல்லது. அவர் இதை கட்டி, இதை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தால், அவர் இந்த புதிய ஒன்றைக் கட்டும்போது அது எப்படிப்பட்டதாய் இருக்கும்? ஓ என்னே, என்ன அற்புதமான காரியம்! அந்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.