30. நல்லது, அங்கு ஒன்றும்... இன்று காலையில் ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு நேர்முகப் பேட்டி இருந்த விதமாக இந்த நபருக்கும் இருந்திருந்தால், அது என்னவென்பதை, அது என்னவாயிருப்பினும், அது வெளியே இழுத்துக் கொண்டு வந்திருக்கும். பாருங்கள்? அது என்னவென்பதை தேவன் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது, நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை; அது வெறுமனே கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரி என்றுரைக்கிறது...
31. இப்பொழுது, இப்பொழுது, நீ ஏதாகிலும் ஒரு தவறைச் செய்து, அது உன்னைத் தொல்லைப்படுத்துகிறதென்றால், நீ வேதத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்து கொள். ஆனால் நீ ஒன்றுமே செய்யாதிருந்து, எதுவுமே உன்னைக் குற்றப்படுத்தாதிருந்தால், ஒருக்கால் அது உன் நரம்பு சம்பந்தமானதாக இருக்கக் கூடும். பார்? அநேக காரியங்கள் நடந்திருக்கக் கூடும்; ஒருக்கால் உன் முன் கால வாழ்க்கையில் ஏதாகிலும் தொல்லை நேர்ந்திருக்கக்கூடும். ஒருக்கால் இங்குள்ள ஒரு ஸ்திரீக்கு அது ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரமாயிருக்கக் கூடும். அப்பொழுது அவளுக்கு எல்லாமே தவறாயிருக்கும். அவளுக்கு ஒன்றும் தவறாயிருக்கவில்லை, இருப்பினும் எல்லாமே அவளுக்கு தவறாயிருக்கும். அவள் நடிக்கவில்லை, அவள் உண்மையில் அவ்விதம் உணருகிறாள். அது உண்மையானதைப் போலவே இருக்கும். நரம்பு கோளாறு உள்ள எவரும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுடன் இணங்காமலிருக்க வேண்டாம்.
32. கணவன்மார்களே, உங்கள் மனைவிமார்கள் வாழ்க்கையின் அந்த நேரத்தை அடையும்போது, அவள் எப்பொழுதாகிலும் உங்கள் இருதயத்துக்கு இனியவளாக இருந்திருப்பாளானால், அவள் சரியாயிருக்க விட்டு விடுங்கள், ஏனெனில் அவளுக்கு நீங்கள் தேவை அவளுக்கு உண்மையில் உங்கள் உதவி தேவையாயுள்ளது. அவளுக்கு உதவி செய்ய யாராகிலும் அவளுக்குத் தேவைபடுகிறது. அவளைப் புரிந்து கொள்ளுங்கள். அவளுடன் பேசுங்கள். அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளைப் போல அவளை உங்கள் கரங்களில் தழுவிக் கொள்ளுங்கள், அவள் அவ்விதமாகத்தான் உங்களுக்கு இருக்க வேண்டும். அவளைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவள் தன் முழு அமைப்பும் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இருக்கிறாள். நீங்கள் அந்நேரத்தில் அவளிடம் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.
33. அங்குதான் திரு. ராக்ஃபெல்லர் மிகப் பெரிய தவறைச் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்டார், அவர் ஒருக்கால் நமது அடுத்த ஜனாதிபதியாக ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவருடைய மனைவிக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரம் வந்தபோது, அந்த கட்டத்தை அவள் அடைந்த போது, அவர் அவளை விட்டுப் பிரிந்து தன் பெண் செயலாளரை மணந்து கொண்டார். என்ன நடந்தது பார்த்தீர்களா? உண்மையில் நல்லவிதமாக நிதானிக்கும் அமெரிக்கர்கள் இன்னும் உள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது.
இப்பொழுது, எனக்கு திரு. கோல்ட் வாட்டரை, இல்லை, திரு. ராக் ஃபெல்லரைப் பிடிக்கும் (சகோ. பிரன்ஹாம் தன் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி). அவர் ஒரு... எனக்கு திரு. கோல்ட் வாட்டரையும் பிடிக்கும்; எனக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நான் - நான் விரும்பவில்லை. அங்கு உட்கார்ந்திருக்கும் என்னுடைய சில ரிப்பப்ளிக்கன் சகோதரர்கள் நான் கூறும் இதைக் கேட்பார்கள். நான்.
34. கவனியுங்கள், நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன். பாருங்கள்? இது அரசியலுக்கு இடமல்ல. பாருங்கள்? முழு காரியமும் எப்படியும் அந்த வழியே சென்று விட்டது, ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது நித்தியத்தைக் குறித்ததாகும். டிமாக்ரட் ஆனாலும் ரிப்பப்ளிக்கன் ஆனாலும்... ஒ, அது ஒரே குழப்படியாயுள்ளது; அது ஒருக்காலும் மீள முடியாது. அது முடிந்து போய் விட்ட. ஒன்று, எனவே அதைக் குறித்து வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், இந்த ராஜ்யத்துக்காக வாழ்வதே. "நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை: வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்" (எபி.13:14). ஆமென்! அது உண்மை . ஆம், ஐயா!
35. எனவே அரசியல், வேலிக்கு ஒரு பக்கம் உள்ளது, நான் மறு பக்கத்தில் இருக்கிறேன். "நான் ஒரு முறை வோட்டு போட்டேன்; அது கிறிஸ்துவுக்காக; நான் நிச்சயம் ஜெயிப்பேன்" என்று கூறினேன். அது உண்மை . பாருங்கள்? உங்களுக்கு ஒரு வோட்டு வந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? தேவன் உங்களுக்கு வோட்டு போட்டார், பிசாசு உங்களுக்கு எதிராக வோட்டு போட்டான். இப்பொழுது, நீங்ள் எந்தவிதமாக வோட்டு போட்டீர்களோ, அந்த வழியாகவே வெளிவருவீர்கள்.
36. எனவே இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில் இந்த நபர்... அது நரம்பு சம்பந்தமானது மட்டுமே என்றுதான் நான் நினைக்கப் போகிறேன். உன்னை ஒன்றும் குற்றப்படுத்தாமல் இருக்குமானால், நீ தொடர்ந்து சென்று, "சாத்தானே, என்னை விட்டுப் போ" என்று சொல். நீ தொடர்ந்து முன் செல். நீ தைரியமாக நின்று, தேவனுக்காக வாழ்வாயாக.