38 இது ஒரு குழப்பமான கேள்வி போன்று தொனிக்கக் கூடும், ஆனால் இது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. பாருங்கள்? இங்குள்ள என் குடும்பத்திலும் உங்களை என் குடும்பமாக குறிப்பிடுகிறேன் நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பத்திலும் கிரியை செய்து வருகின்ற இதைக் குறித்து விளக்க இந்த கேள்வி எனக்கு சிறிது தருணம் அளித்துள்ளது.
39. இப்பொழுது, என் சபையோரில் பெரும்பாலார் பெந்தெகொஸ்தேயிலிருந்து வந்த ஜனங்களாயுள்ளனர். ஏனெனில் ஸ்தாபனங்களின் வரிசையில் பெந்தெகொஸ்தே தான் நாம் கொண்டுள்ள கடைசி செய்தி. என்னைப் பொறுத்தவரையில், மற்ற ஸ்தாபன சபைகளைக் காட்டிலும் நான் இவர்களுடன் தான் அதிகமாக நிச்சயம் இணங்குகிறேன். நான் பெந்தெகொஸ்தேயைப் பற்றிக் கொண்டிருப்பதன் காரணம் என்னவெனில், அதுவே பின்னால் வந்த செய்தி. நான் கிறிஸ்துவினிடம் கொண்டு வரும் மக்களிடம், ஏதாகிலும் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் செல்லும்படி அங்கு வழி நடத்துகிறேன். இருப்பினும் நான் எல்லா வகையிலும், எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் ஸ்தாபனமாயிருப்பதால் அவர்கள் வேதத்தின்படி தவறு செய்கின்றனர் என்றும், ஒளியை அவர்களுக்கு முன்பாக வைத்த போது அந்த ஒளியில்நடக்க அவர்களுக்குப்பிரியமில்லை என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். இருப்பினும், உலகிலுள்ள எந்த ஒரு சபையையும் தெரிந்து கொள்ள இன்று என்னிடம் கூறப்பட்டால், ஸ்தாபன சபைகளைப் பொறுத்தவரையில் நான் பெந்தெகொஸ்தே சபையையே தெரிந்து கொள்வேன். ஆனால் தனிப்பட்ட நபர்கள் ஆண்களும் பெண்களும் என்று வரும் போது, உத்தமமான கிறிஸ்தவர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் உள்ளனர். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லுத்தரன்கள் போன்றவர். ஆனால் நான் ஜனங்கள் இருக்கின்ற இந்த முறைமைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட நபரைக் குறித்தல்ல, ஆனால் இந்த ஜனங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் முறைமைகளான இந்த ஸ்தாபனங்களைக் குறித்து. இதை நீங்கள் இப்பொழுது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (பாருங்கள்?). நான் நினைக்கிறேன் ஜனங்கள்... அவர்கள் ரோமன் கத்தோலிக்கர், யேகோவா சாட்சி, வைதீக யூதர், யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களை இரட்சிப்பதற்கென கிறிஸ்து மரித்த தனிப்பட்ட நபர்கள் அவர்கள்.
40. இப்பொழுது. நான்... அவர்கள் இருக்கின்ற முறைமைகளுடன் இணங்குகையில்... மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், போன்ற ஸ்தாபனங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாப்டிஸ்டு ஸ்தாபனத்திலும் உண்டு என்று நான் நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள், உண்மையான விசுவாசிகள். ரோமன் கத்தோலிக்க சபையிலும், கர்த்தரை உண்மையாக நேசிக்கும் உத்தமமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். அவர்கள் தவறு செய்ய வேண்டும் என்பதற்காக அந்த சபையைச் சேர்ந்து கொள்வதில்லை. ஆனால் அங்குள்ள அந்த முறைமையோ அவர்களுடைய சிந்தையை தவறான வழியில் நடத்துகிறது. நான் ஸ்தாபனம் உண்டாக்கும் ஒரு நேரம் எப்பொழுதாகிலும் வருமானால், உங்களை நான் வஞ்சித்து ஒரு முறைமைக்குள் உங்களைக் கொண்டு வந்து விட்டவனாயிருப்பேன். அது எனக்கு தூரமாயிருப்பதாக. உங்களை வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவினிடம் வழிநடத்த தேவன் என்னை சரியான மன நிலையில் வைப்பாராக. அந்த வார்த்தையில், நிலைத்திருங்கள். பாருங்கள்?
41. ஆனால் இப்பொழுது, இங்குள்ள இந்த நபர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தும் அடையாளங்கள் தொடராமலிருக்க சாத்தியம் உண்டா என்னும் கேள்வியைக் கேட்டிருக்கிறார். இப்பொழுது அது... நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால், அதாவது நீங்கள் முதலில் ஒரு சாதாரண மானிடனாகப் பிறந்து... இப்பொழுது நான் இதற்கு சிறுவர்களுக்கு உரைப்பது போல் விடையளிக்கிறேன். நீங்கள் சாதாரண ஒரு மானிடனாகப் பிறந்தால், சாதாரண ஒரு மானிடன் செய்யும் கிரியைகளைச் செய்வீர்கள். அது சரியா?
42. நீங்கள் மானிடனாகப் பிறக்கும் போது, மானிட இயல்பு உங்களைத் தொடருகிறது. நீங்கள் மரத்தின் மேல் வசித்து பறவையைப் போல பறந்து செல்ல முயற்சி செய்ய மாட்டீர்கள். அது மானிட இயல்பு அல்ல, அது மனிதனின் சாதாரண செயல் அல்ல. ஒரு மனிதனின் வழக்கமான செயல், அவன் வேலை செய்து... மணம் புரிந்து குடும்பம் அமைத்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிவதே. அது வழக்கமான மானிட இயல்பு, ஏனெனில் நீங்கள் அந்த விதமாக பிறந்திருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருந்தால், தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவின் தன்மைகளைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள். பாருங்கள்?
43. ஒவ்வொரு நாளும் இங்கு உட்கார்ந்து கொண்டு போதகத்தைக் கேட்கும் ஜனங்கள் கொண்ட இந்த சபையோரை நாம் இன்று காலையில் எடுத்துக் கொள்வோமானால், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள், நீங்கள் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டவர்கள், உங்களுக்கு பசி வெவ்வேறு விதமாக இருக்கும், நீங்கள் வித்தியாசமாக உண்கிறீர்கள்; ஆனால் நீங்கள் அனைவரும் உணவே உண்கிறீர்கள். ஆனால் இப்பொழுது... ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் காண்பதற்கு மற்றவரைப் போல இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள். கிறிஸ்தவர்களும் அவ்வாறேயுள்ளனர். “இப்பொழுது, எல்லாரும்...' என்று நீங்கள் கூற முடியாது. எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? எல்லாரும்..? (1 கொரி 12:29-30). பாருங்கள்?
44. இவைகளை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்தவனின் பழக்கங்களைப் பெற்றுக்கொள்கிறான்; அவர்கள் கிறிஸ்தவரைப் போல் வாழ்கின்றனர் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்" என்று இயேசு உரைத்தார். கவனியுங்கள்: “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்... சாவுக்கேதுவானவைகளைக் குடிப்பார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" இவைகள் உண்மையில் கிறிஸ்தவர்களைத் தொடருகின்றன.
45. இப்பொழுது, இந்த நபர் மிகவும் நல்ல ஒரு காரியத்தை இங்கு கூறியிருக்கிறார்: “...நாம் வருங்காலம் வரைக்கும், அல்லது பரிசுத்த ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா?" அது எனக்குப் பிரியம். பாருங்கள்? உங்களுக்கு அதன் கருத்து புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் நியமிக்கும் போது! தேவன் காரியங்களை நியமிக்கிறார்.
அங்கு, பெந்தெகொஸ்தே ஜனங்கள் மட்டும் முயற்சி செய்வார்களானால் (இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்கள்), எல்லோரும் அந்நிய பாஷைகள் பேச வேண்டும் என்னும் உங்கள் கருத்தை வலியுறுத்துவதன் பேரில் நான் ஏன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரியென்று எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் அது... எனக்கு 'செர்ரி பை பிடிக்கும், நான் ஒரு மானிடன். ஆனால் நான் உங்களிடம், "நீங்கள் 'செர்ரி பை சாப்பிடாவிட்டால் மானிடர் அல்ல" என்று கூற வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? 'செர்ரி பை' சாப்பிடுவது என்பது ஒரு மானிடனின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அதன் பேரில் நீங்கள் என்னிடம் இணங்காமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை . இப்பொழுது, ஒருவன் இதை புசிக்கிறான், மற்றவன் வேறொன்றை செய்கிறான்.
46. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இந்த உத்தியோகங்களை நியமிக்கிறார். ஆனால் நீங்கள் அதற்கு உள்ளே உங்களை உந்திக் கொள்ள முயற்சித்தால்... நீங்கள் 'செர்ரி பை' உண்ண வேண்டும் என்று நான் உங்களிடம் கூறி, ஆனால் 'செர்ரி பை' உண்பது உங்களுக்கு வாந்தி உண்டாக்கினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் வாந்தி எடுத்து, மறுபடியும் செர்ரி பை' உண்டு, மறுபடியும் வாந்தி எடுப்பீர்களா? பாருங்கள்? அது உங்களுக்கு கெடுதியை விளைவிக்கும். அது போலத்தான் ஆவிக்கு முரணான ஏதாவதொன்றை நீங்கள் செய்ய உங்களை நிர்ப்பந்தம் பண்ணிக் கொள்ளும் போதும்.உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை உங்களுக்கென நியமித்திருக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்?
47. நீங்கள் ஆவியினால் நிறையப்படும் போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும், அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, எல்லாமே முன்னைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த
ஆவி.
48. இப்பொழுது, இந்த வரங்கள் பரிசுத்த ஆவியில் உள்ளன. இப்பொழுது, இன்று காலையில் இங்குள்ள இந்த சபையோர், இது நல்ல, ஜனங்களால் நிறைந்துள்ள நெருக்கமான சபை.... (அறைகள் ஜனங்களால் நிறைந்து நிரம்பி வழிகின்றன). ஆனால் இந்த... இது ஒரு... (இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம் என்று அறிவிக்காமலேயே இந்த ஜனங்கள் வந்துள்ளனர்). கவனியுங்கள், இங்குள்ள ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியுடன் பரிபூரணமாக இசைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பரிசுத்த ஆவியுடன் இசைவாக இணைந்திருப்பீர்களானால், இந்த அடையாளங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் மத்தியில் பெருகிக் கொண்டேயிருக்கும். அது சதாசென்று கொண்டேயிருக்கும். ஆனால் குழப்பம் இருக்கும் போது, நாம் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் கருத்து வேற்றுமை இருக்குமானால், பரிசுத்த ஆவியால் அசைவாட முடியாது. பாருங்கள்? அது ஜனங்களின் மூலமாய் இயங்க முடியாது. பாருங்கள்?
49. நான் உங்களிடம், "நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசினீர்களா? என்று கேட்டால், "ஆம்"
"நல்லது, நீ அதை பெற்றுக் கொண்டிருக்கிறாய்". "நீ அந்நிய பாஷையில் பேசினாயா?" இல்லை.
50. "அப்படியானால் நீ அதை பெற்றுக் கொள்ளவில்லை". இப்பொழுது நான் என்னை ஒரு நியாயாதிபதியாக்கிக் கொள்கிறேன். தேவனே இந்த காரியங்களுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார்.
51. இப்பொழுது கவனியுங்கள். இயேசு, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்" என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ. அது ஒவ்வொரு முறையும் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது.
52. இன்று காலையில் நேர்முகப் பேட்டிக்காக உள்ளே வந்த அந்த பதினைந்து இருபது பேர்கள் முற்றிலும் அந்நியர்கள். அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையும் தவறாகப் போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் அங்கே தோண்டியெடுத்து. அவைகளை அறிந்து கொண்டு வெளியே கொண்டு வந்து, அவர்களிடம் கூறினார். பாருங்கள், பாருங்கள்? அங்கு ஒரு பிழையும் இருக்கவில்லை. இது என்ன, அது என்னவென்று அவர்களிடம் கூறி, இதைக் குறித்து அதைக் குறித்து என்ன செய்ய வேண்டுமென்றும் உரைத்தார் அவர்கள் செய்தது என்னவென்றும், அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றும். பாருங்கள்? அது வெறும்... அது அதை ஒழுங்கில் கொண்டு வந்தது. இப்பொழுது, அவர்கள் அதன்படி செயல்பட வேண்டும்.
53. அன்றொரு நாள் இரவு நான் ஒரு தம்பதிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு வீட்டுக்கு நான் சென்றிருந்தேன், இல்லை, நாங்கள் மேசையைக் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில் இறங்கினார். அப்பொழுது நான் அங்கிருந்த ஒருவரிடம், "நான் ஒரு குறிப்பிட்ட மனிதனைக் காண்கிறேன், அவர் சில காரியங்களைக் குறித்து மனதில் குழப்பமுற்றிருக்கிறார். அது இங்கேயே உள்ளது. நீர் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்' என்றுசொல்லிவிட்டு, நான் சுற்றி வளைத்து, அந்த மனிதனின் மனதில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் அவரிடம் பதில் சொன்னேன். அவரைத் தவிர வேறு யாருக்குமே நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று தெரியவில்லை. பாருங்கள்? ஆனால் அவர் கிரகித்துக் கொண்டார். அது என்னவென்று அவர் அறிந்து கொண்டார். பார்த்தீர்களா? அது அவருக்கு என்னவாயிருந்தது? அவருடைய மனதில் என்ன இருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்று அவருக்குக் காண்பித்து, அவருக்கு உறுதிப்படுத்தினது. பார்த்தீர்களா? அதை நான் அங்கிருந்து மற்றவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் கூறுவதை இப்பொழுது அந்த மனிதன் இங்கு கேட்டுக் கொண் டிருக்கிறார். அது உண்மை. அது எப்படியென்பதை பார்த்தீர்களா? அது ஒரு உறுதிப்பாடு.
54. இப்பொழுது. முழு சபையும் இப்படி இசைவாய் செயல்பட்டால், அப்பொழுது நமது மத்தியில் நாம் பிசாசுகளைத் துரத்துவோம், சர்ப்பங்களை எடுப்போம், சாவுக்கேதுவானவைகளைக் குடிப்போம், எல்லாவிதமான காரியங்களும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை தனிப்பட்ட நபர்களின் மேல் நீங்கள் கட்டாயப்படுத்த முயன்றால், அப்பொழுது நீங்கள் உங்களை அது மறுபடியும் பெந்தெகொஸ்தேயாகி விடுகின்றது. அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது பாபிலோன் குழப்பம். உங்களால் அதை நியாயந்தீர்க்க முடியாது. பாருங்கள்? நமது இருதயங்கள் களிப்பினால், மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, பறவைகள் பாடுகின்றன, எல்லாமே அருமையாக இருக்கும், என்னே, தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்கும். நாம் இயேசுவில் மிகவும் அன்புகூர்ந்து, இரவு முழுவதும் ஜெபிக்க விரும்புவோம்.
55. இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன் பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால் ஒரே ஒரு வேத அத்தாட்சி ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தப்படுமாஎன்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்த விதமான ஓரிடத்தில் உங்களை கட்டிவிடுதல். ஆனால் அவ்விதம் நீங்கள் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள் புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்?
56. அன்றொரு நாள் ஒருவர் எழுதின கேள்வியைப் போல. அவர் இங்கிருந்தார், அவர் ஜூனியர் ஜாக்சனைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறினார். யாரோ ஒருவர் ஜூனியர் ஜாக்சனின் சபைக்குச் சென்றாராம். அவர்கள் அவரிடம், “நீர் செத்த பீன்ஸுக்கு செல்கிறீர்" என்றனராம், அப்படி ஏதோ ஒன்று. சகோ. ஜாக்சன்... ஏனெனில் சகோ. ஜாக்சன் சபையில், அவர்கள் சபையில் அந்நிய பாஷைகளில் பேச அனுமதிக்கின்றனர். எங்கெல்லாம் அவர்கள் ஆவியை உணர்ந்து அந்நிய பாஷைகளில் பேச விரும்புகிறார்களோ, அவர்கள் முன் சென்று அதை செய்கின்றனர். நல்லது, அது சகோ. ஜாக்சனின் சபை. அதனால் பரவாயில்லை. அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. சகோ. ஜாக்சன் என் சிறந்த நண்பர்களில் ஒருவர்; அவர் உண்மையான தேவபக்தியுள்ள மனிதன். அவர் தேவனுடைய ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார், நாங்கள் சகோதரர். இப்பொழுது, அவர் என் 'செர்ரி பையை புசிக்க வேண்டியதில்லை (பாருங்கள்?), ஆனால் நாங்கள் இருவருமே பையை தின்கிறோம். நாங்கள் இருவரும். இச்செய்தியை முற்றிலுமாக விசுவாசிக்கிறோம். அது சபையின் ஒழுங்கு. நான், "என் சபை ஒன்றாக வர முயல வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றேன். நான் சொன்னேன்... இங்கு நாம் அந்நிய பாஷையில் பேசுவது போன்றவை, நான் சொன்னேன்... ஒருவர் என்னிடம் "சகோ. பிரன்ஹாமே, இதெல்லாம் உண்மையானது தானா?" என்று கேட்டார்.
57. "நான் நியாயாதிபதி அல்ல" என்று பதிலளித்தேன், நான் அவரிடம், "நான் உங்களிடம் ஒன்று சொல்லுகிறேன், இதை நாம் ஓரிடத்துக்கு கொண்டு வருவோம். சிறிது காலம் நாம் இவ்விதமே தொடர்ந்து, இதை ஓரிடத்துக்குக் கொண்டு வந்து அதற்கு வார்த்தையை அளிப்போம். அதன் பிறகு அதை கவனித்து வருவோம். அது பரிசுத்த ஆவியாக இருந்தால், அது வார்த்தையுடன் ஒத்துப் போகும்; இல்லையென்றால், அது ஒத்துப் போகாது" என்றேன். பாருங்கள்? அந்த ஒரு விதத்தில் மட்டுமே அதுஎன்னவென்று கூற முடியும்; அப்பொழுது அது தன்னை தானே நியாயந்தீர்த்துக் கொள்ளும். பார்த்தீர்களா? நல்லது, அது பரிசுத்த ஆவியாக இல்லாமல் போனால், அது பறந்து சென்று விடும், அது போய்விடும். பாருங்கள்? ஆனால் அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால், அது சாந்தமாக வரிசையை சரியாகப் பின் தொடரும், ஏனெனில் அதுதான் அது; அது பரிசுத்த ஆவி தன் சொந்த ஒழுங்கில் செல்வதாகும்.
58. இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவது போன்ற விஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷை பேச வேண்டுமென்று விரும்புகிறேன். நான் நிச்சயம் விரும்புகிறேன். அநேக சமயங்களில், நல்ல கிறிஸ்தவர்கள்...
59. பாருங்கள், அது அந்த திட்டத்தில் இருந்தது என்று உங்களிடம் கூறுகிறேன்... நான் ஒருவரைக் கண்டேன் திட்டம் 'அல்ல, என்னை மன்னிக்கவும், இன்று காலை நடந்த பேட்டியில், நபர் ஒருவர் (அவர்கள் இப்பொழுதும் இந்த கட்டிடத்தில் இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்), அவர்கள். அந்நிய பாஷைகள் பேசும் விஷயத்தில்... அந்த நபர் உத்தமமானவர், உண்மையானவர், அவர்கள் சரியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி அந்நிய பாஷை பேசுவதல்ல என்று நான் கூறினதை அவர்கள் கேட்டனர் அதுவல்ல அத்தாட்சி அந்த நபரிடம் நான், அந்நிய பாஷை பேசவோ அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கவோ தேவனிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினேன், ஏனெனில் அது அவர்களுடைய சுபாவம்.
60. முதலாவதாக, நான் அந்த நபரிடம் சென்று அவர் பிறந்த இடத்தையும், அவர் எந்த அடையாளத்தின் கீழ் பிறந்தார் என்றும் அறிந்து கொண்டேன். அவருடைய பிறப்பு என்னவென்று கூற முடிந்தது. அவர்களுடைய இயற்கையான சுபாவம் எதுவோ, அது அவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் அமைக்கிறது. அவர்கள் மறுபடியும் பிறந்தவுடனே, அவர்கள் இங்கு வேறொரு சுபாவத்தை அடைகின்றனர். அதன் பிறகு நீங்கள் அந்த சுபாவத்துக்குள் ஊடுருவிப் பார்ப்பீர்களானால், அதாவது உள்ளில், உள்ளேயிருக்கும் மனச்சாட்சியில்... வெளிப்புற மனச்சாட்சி உங்களை ஒரு வழியில் நடத்துகிறது; அது உங்கள் இயற்கை பிறப்பு. அப்பொழுது அவர்கள் ஏதோ ஒன்றை உண்டாக்கி, அது அவர்களுக்கு எதைஅளிக்கிறது? அது அவர்களை இரு வெவ்வேறு நிலையில் வைக்கிறது அப்பொழுது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை அவர்கள், "கர்த்தர் என்னை இதை செய்யச் சொல்லுகிறார்" என்பார்கள்.
61. ஆனால் உள்ளேயிருப்பதோ, "ஓ, அது வேத வாக்கியங்களுடன் வரிசைப்படுகிறது என்று எனக்குத் தெரியும் என்கிறது அவர்கள் அதை செய்யத் தொடங்குவார்கள், முதலாவதாக என்ன தெரியுமா, வெளிப்புறத்திலுள்ள சாத்தான் அதில் எல்லா விதமான குறைகளையும் அவர்களுக்குக் காண்பிப்பான். அப்பொழுது அவர்கள் "நல்லது, நான் நினைக்கிறேன், நான்..." என்பார்கள். பாருங்கள் பாருங்கள்? அவர்கள் சாத்தானுக்கு செவி கொடுக்கின்றனர் பாருங்கள்? நீங்கள் உள்ளேயிருக்கிற அந்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உள்ளேயிருப்பது தான் வேதம்பிரகாரமானது. சாத்தானை எங்கேயும் நிற்க விடாதீர்கள். அங்கு நின்று கொண்டு உங்களை தவிடுபொடியாக்கிக் கொண்டிருப்பதே அவனுடைய வேலை. அவனுக்குச் செவிகொடுக்காதீர்கள்.
62. அந்த நபரிடம் நான் கூறினேன். அவர், "நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட நிச்சயத்தை மட்டும் உடையவனாயிருந்தால்!" என்று கூறினார். பாருங்கள்? மிகவும் நன்றாக உடுத்தியவர், பரிசுத்த ஆவியுடன் உத்தமமாயுள்ளவர். "பிதாவே, நான் ஏதாவது ஒன்றின் மேல் நிற்க இதை எனக்களியும்" என்று கூறுவது அந்த நபருக்கு நலமாயிருக்கும்.
63. இப்பொழுது, நான் அவ்விதம் போதித்தால், அந்த நபருக்கு இருப்பதை பெறாமலே, ஜனங்கள் கையை நீட்டி அதை பிடித்துக் கொண்டிருப்பார்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகள் பேசுவது உண்மைதான், ஆனால் அது அந்நிய பாஷையில் பேசுவதற்கு நீங்கள் அதை முதலில் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, நீங்கள் கையை நீட்டி அந்நிய பாஷையில் பேசும் வரத்தை மட்டும் பிடித்துக் கொண்டால்...
64. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது உண்மையான வரமாயிருக்கலாம்; அது உங்களுக்குள் பரிசுத்த ஆவி அந்நிய பாஷையில் பேசுவதாயிருக்கலாம். இருப்பினும் நீங்கள் இழக்கப்பட்டு நரகத்துக்கு போகக் கூடும் வேதம் அவ்வாறு உரைக்கிறது. அதற்கான வேதவசனம் உங்களுக்கு வேண்டுமாஉங்கள் கைகளையுயர்த்துங்கள். "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் (அது சரியா? அர்த்தம் உரைக்கக் கூடியதும் அர்த்தம் உரைக்கக் கூடாததுமாகிய இரண்டுமே, உண்மையான பரிசுத்த ஆவி), நான் ஒன்றுமில்லை". பாருங்கள், மற்றது அதனுடன் இணைந்திருந்தாலொழிய. இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் (பாருங்கள்?), எனவே இது இல்லாமல் அதை நாம் வேண்டாம். இதை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அது அதை தொடரும்.
65. இப்பொழுது, மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது. சூரியன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பிரகாசிக்கிறது. பயிரை முதிர்வடையச் செய்ய மழை பெய்கிறது; ஆனால் அதே மழை களையையும் முதிர்வடையச் செய்கிறது. பரிசுத்த ஆவி ஒரு கூட்டம் ஜனங்களின் மேல் விழுந்து, அந்நிய பாஷை பேசி, அது உண்மையாயிருக்கக் கூடும், அது ஜனங்களின் மத்தியில் படர்ந்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் படி செய்து, அது உண்மையாயிருக்கக் கூடும். அது முற்றிலும் உண்மை.
66. நீங்கள் ஒரு மந்திரவாதியிடம் அல்லது பிசாசு கருவியாக உபயோகித்து அவன் மூலம் பேசும் ஒருவனிடம் (medium) செல்வீர்களானால், அவர்கள் முற்றிலும் உண்மையான ஒன்றைக் கூற முடியும். எந்தோரின் மந்திரவாதியைப் பாருங்கள். சவுல்... அது முற்றிலும் உண்மையாயிருக்கக் கூடும்; இருப்பினும் அது வல்ல அது. அவர்கள் மந்திரவாதிகள். அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகின்றனர். பிசாசுகள் அந்நிய பாஷைகள் பேசி, அந்நிய பாஷைகளில் எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் ஒன்றுமற்றவை. ஆனால் உண்மையான காரியம் அந்த வார்த்தை மட்டுமே. அந்த வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்!
67. எனவே, நீங்கள் வார்த்தை இல்லாமலே இவைகளைச் செய்யக்கூடும். ஆனால் நீங்கள் வார்த்தையைப் பெற்றுக் கொண்டு, அது இதை செய்யும்போது, அது அப்படியே நிறைவேறுவதைக் கவனியுங்கள், அதுவே சரியான காரியம். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் சரியாக வரிசையில் இருக்கிறீர்கள்.
68. ஆம், பரிசுத்த ஆவியானவர், அவருடைய தெய்வீக ஞானம் நியமித்துள்ளபடியே, இந்த ஜனங்களை உபயோகிக்கிறார். ஆனால் முதலாவது காரியம்...
69. இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சினையை அளிக்க விரும்புகிறேன். நான், "எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே கைகளை உயர்த்துவீர்கள். நான், "சரி, நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று பார்க்கப் போகிறேன்" என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனை பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும் பகலும் கதறி அழுகிறீர்கள்? நீங்கள் செய்வதில்லை... பாருங்கள்? அப்படிப்பட்டவர் நகரத்தில் யார் இருக்கின்றனர்? அப்படிப்பட்டவர் எத்தனை பேர் சபையில் இருக்கின்றனர்?' அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று வேதம் உரைக்கிறது.
70. அவர் அடையாளம் போடுகிற தூதர்களிடம் (எசேக்கியல் 9ம் அதிகாரம், அது சரி), "நீ நகரம் எங்கும் உருவப் போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு. மீதியானவர்களை சங்காரத் தூதன் சங்கரித்து கொன்று போடட்டும்" என்றார். அவர்கள் எத்தனை அங்கத்தினர்களாயிருந்தாலும், அவர்கள் என்ன செய்திருந்த போதிலும், அவர் “போடு..." என்றார். அப்பொழுது கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு புருஷன் (வெள்ளை பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயுள்ளது) புறப்பட்டுப் போய் நகரத்திற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற எல்லார் மேலும் அடையாளம் போட்டான். இப்பொழுது, நீங்கள் கூறலாம். அவர் மேலும் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். "முதியோரையும், வாலிபரையும் கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்" என்றார். குழந்தைகளையும் கூடவா? ஆம்!
71. யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள். அது சிறுகுழந்தையாயிருந்தாலும் சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும் அதைக் கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளயத்தை அசுசிப்படுத்துவான்" என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும் போது, அதை ஒழித்து விடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை
72. நீங்கள், "நல்லது, அவர்கள் நல்லவர்கள்" எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் அந்த வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனைப் போலம் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள்.
73. "நல்லது, சகோ. பிரன்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்... நல்லது, நான் இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியனானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்!
74. நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள். அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு: உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்... ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா... நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், "நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடு" என்றார். தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை.
75. இப்பொழுது. அவ்வளவு அக்கறை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும் மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், கட்டிடத்தில் மேலும் கீழுமாக ஓடுகிறவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே? நீங்கள் அதன் பேரில் புதிதாக தொடங்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா?
76. என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக்கூறி, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவது போல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். பாருங்கள்? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக ஆக வேண்டுமென்று விரும்புகிறேன். பவுல் கூறின வண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க விரும்புகிறேன். உங்கள் இருதயம் "ஆமென்" என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் அந்த வார்த்தையில் கிடையாது.
77. பாவம் உங்கள் பேரில்... நாம் தவறான காரியங்களைச் செய்கிறோம் என்பது உண்மையே. ஆனால் அது உங்களைக் குற்றப்படுத்தினவுடனே முதலாவதாக நீங்கள் செய்வது, "பிதாவே, என்னை மன்னியும்" என்று ஜெபிப்பதே.
78. இதை நான் கூறப் போகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு நபரை நான் உற்று நோக்கினேன். அன்றொரு நாள் அவர் ஒரு அருமையான வாலிபனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. இன்னும் ஒன்றைப் பெற நான் பிற்பகல் வரைக்கும் காத்திருக்கலாம் என்று எண்ணினேன். கென்டக்கி நாட்டில் நீங்கள் ஆறு அணில்களை மட்டுமே சுட்டு எடுத்துக் கொள்ளலாம்; அதுதான் அங்குள்ள வரம்பு. எனவே இந்த குறிப்பிட்ட நபர் என்னிடம், "எனக்கு ஒன்பது அணில்கள் கிடைத்தன" என்றான். கிறிஸ்தவ வாலிபன், நல்ல பையன்.
நான் அவனிடம், "நீ செய்தது தவறு" என்றேன்.
அவன், "நல்லது..." என்றான்.
79. நான், "இன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. ஒன்றை நான் பிற்பகல் வரைக்கும் விட்டு வைத்தேன். அந்த ஒரு அணிலை நான் சுட்டு வீழ்த்திவிட்டு, மரத்தின் மேல் பார்த்த போது, அங்கு ஐந்து அல்லது ஆறு அணில்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் எண்ண முடிந்தது அவைகளை நான் கண்ணால் பார்த்தேன். ஆனால் அவைகளை விட்டு விட்டு நான் நடந்து சென்று விட்டேன். அண்மையில் இங்கு நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது அணில்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் வரம்பு வரைக்கும் பெற்றுக் கொண்டு, மீதியானவைகளை விட்டு விட்டு, அங்கிருந்து நடந்து வந்து விட்டேன். இந்த நாட்டுக்கு நான் வந்து, பையன்களாகிய உங்களிடம் நான் பிரசிங்கிக்கும் போது, ஜனங்களாகிய நீங்கள் அது உண்மையென்று நம்புகிறீர்கள். நான் வாழும் வாழ்க்கை உங்களுக்கு உதாரணமாயிருக்க வேண்டும்" என்றேன். கிறிஸ்தவ மார்க்கம் என்பது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அது ஒரு உதாரணம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நான் அந்த பையனிடம், "சட்டம் என்ன கூறுகிறதென்றால்... இயேசு, 'இராயனுடையதை இராயனுக்கு செலுத்து' என்றார். நீ வேகம் சட்டத்தை மீறினால் என்ன செய்கிறாய்? நீ தவறு செய்கிறாய்; நீ பாவம் செய்கிறாய். இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்து" என்றேன்.
80, நீங்கள், "நல்லது, அந்த சட்டம் தவறு" எனலாம். அது தவறாயிருந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசுவின் கட்டளையை மீறுவது தவறாகும். நீங்கள் இராயனுடையதைஇராயனுக்கு செலுத்தாமல் போனால், நீங்கள் செய்யக் கூடாது என்று இயேசு உங்களிடம் சொன்னவைகளை நீங்கள் செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது பாவத்தின் கட்டளையை மீறினவர்களாயிருப்பீர்கள். அது சரியா?
81. நாம் எல்லோருமே குற்றவாளிகளாயிருக்கிறோம்; அதை நாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று காணும் போது, அதை நிறுத்தி விடுங்கள். ஜனங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் சபைக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அவர்கள் உங்களை எடை போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
82. எனவே, கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்; அதுதான் உண்மையான... கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒன்றே. பரிசுத்த ஆவி, கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்று பொருள். பரிசுத்த ஆவி என்பது அந்த அபிஷேகமே, நீங்கள் தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து தான் உங்களை அபிஷேகிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?
83. அப்பொழுது நீங்கள் சரியான காரியத்தைப் பெறுகிறீர்கள். அப்பொழுது அவர் உங்களை உபயோகிக்க விரும்பும் எந்த விதத்திலும் உபயோகிக்க முடியும். அவர் உங்களை உபயோகிக்க விரும்புகிறார். ஏனெனில் நீங்கள் அந்த சரீரத்தில் இருந்து கொண்டு அந்த வரங்களில் எந்த ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடிந்தவர்களாயிருக்கின்றீர்கள். பாருங்கள், சரீரத்தின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு இந்த வரங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டால், அது உங்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. நான் விசுவாசமுள்ளவனாயிருந்து, தேவனுடைய சகல இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை. பாருங்கள், இப்படிப்பட்ட காரியங்களின் மேல் சார்ந்திராதிருங்கள். பரிசுத்த ஆவி ஒரு நபர்; அது தேவன், உங்களுக்குள் இருக்கும் தேவன், ஒருநபர், தேவன், உங்கள் சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவர். நீங்கள் மாறுகின்றீர்கள். நீங்கள் புது சிருஷ்டியாகின்றீர்கள். ஏதாகிலும் ஒரு சிறு தவறு இருந்தாலும், அவர் உங்களிடம் அது தவறென்று கூறுவார், அப்பொழுது அதை விட்டு விலகுங்கள். அதைச் செய்யாதீர்கள். "பிதாவே, அதைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை, என்னை மன்னியும்" பாருங்கள்? அது தான் பரிசுத்த ஆவி.
84. நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசினாலும், எவ்வளவாக குதித்தாலும், எவ்வளவாக ஓடினாலும், எவ்வளவாக இதை, அதை; மற்றதை செய்தாலும் (பாருங்கள்?), நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் செய்யும் தவறான காரியங்களினிமித்தம் உங்களை கண்டித்துணர்த்தும் பரிசுத்த ஆவி அங்கு இல்லாமல் போனால், அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை.
85. இப்பொழுது, ஆகையால்தான் இங்குள்ள இந்த நபர் சரியாயிருக்கிறார். பரிசுத்த ஆவி அதை செய்யட்டும். ஆனால் இப்பொழுது (பாருங்கள்?), இப்பொழுது., இது நேரிட காரணமாயிருப்பது... இதை நான் அன்போடும், அன்பினால் தெளிக்கப்பட்டும், வார்த்தையில் அபிஷேகம் பண்ணப்பட்டும் கூறுகிறேன். பாருங்கள்? உண்மையான பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அதை சந்தேகிக்க மாட்டீர்கள். அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள தனிப்பட்ட விவகாரம். பாருங்கள்? ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். வேறெதாகிலும் இருந்தாலும் இல்லாமற் போனாலும், நீங்களே அந்த மாறுதல். பாருங்கள்? நீங்கள்தான் அந்த மாறுதலை உங்களில் உண்டாக்கிக் கொண்டீர்கள், அதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷை பேசினாலும், நீங்கள் குதித்தாலும், கூச்சலிட்டாலும், என்ன செய்தாலும், தேவன் உங்களில் வாசம் செய்கிறார் என்றும், நீங்கள் உங்கள் சொந்த சிந்தையில் நடக்கவில்லை என்றும், கிறிஸ்துவின் சிந்தையே அந்த வார்த்தையுடன் உங்களை நடத்துகிறதென்றும், அவ்விதம் தான் அது முற்றிலுமாக நடக்கிறதென்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
86. இப்பொழுது! ஆனால் நான்... ஜனங்கள், "நல்லது, சகோ. பிரன்ஹாமே, அப்படியானால் நாங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதில் உமக்கு நம்பிக்கையில்லையா?" என்று கேட்கலாம். பாருங்கள்? அப்படியானால் நான்! அப்பொழுது கூறினதை நீங்கள் அப்படியே திரித்து விட்டீர்கள், நீங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். ஜனங்களாகிய உங்களில் சிலர். பாருங்கள்? நான் இதை சொல்கிறேன், நீங்கள் அவ்விதம் புரிந்து கொள்கிறீர்கள், கூடாரத்தை சுற்றிலும் ஆயிரத்தைந்நூறு மைல் என்னும் விஷயத்தைப்போல. உங்களுக்குப் புரியவில்லை என்றால், என்னைக் கேளுங்கள். பாருங்கள்? உங்களுக்குப் புரியவில்லை என்றால், எனக்கு கடிதம் எழுதிக் கேளுங்கள். நான் இங்கு என்ன சொல்கிறேனோ, அதை அப்படியே சொல்லுங்கள். பாருங்கள்? நான்... நீங்கள்... பவுல் சொன்னது போல, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1 கொரி. 11:1). பாருங்கள்? நான் தவறென்று நீங்கள் கண்டால், என்னிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவுதான். ஏனெனில் நான் தவறு செய்கின்ற மனிதனாயிருப்பேன். பாருங்கள்?