87. இப்பொழுது, நான்... இந்த நபர் இதைக் கேட்டிருக்கிறார். அது யாராயிருப்பினும், அது யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்கள் சகோதரனே, பாருங்கள்? இயேசு உங்கள் இரட்சகர். நான் உங்கள் இரட்சகராக இருக்க முடியாது, ஏனெனில் அவர் உங்களை ஏற்கனவே இரட்சித்து விட்டார். இப்பொழுது. அங்கு நீங்கள் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். ஆயினும் நீங்கள் உண்மைக்கு மிகத் தொலைவில் இருக்கிறீர்கள் அதாவது, இந்த நபரிடம் இவ்விதம் கூறிய அந்த நபர். இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து போல் எனக்கு தோன்றுகிறது. மிகவும் அழகான கையெழுத்து. இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து என்று என்னால் கூற முடியும். சகோ. காப்ஸ், இது ஸ்திரீயின் கையெழுத்து என்று நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா? அழகான கையெழுத்து. அது யாரென்று எனக்குத் தெரியாது. பாருங்கள்.
88. இப்பொழுது, "சகோ. பிரன்ஹாமே, காண்பதற்கு இயேசு உங்களைப் போல் இருக்க வகையுண்டா, அல்லது நீங்கள் இயேசுவா? அப்படி ஏதோ ஒன்று ஒரு விதத்தில் அது முற்றிலும் உண்மையே. மற்றொரு விதத்தில் அது அந்திக்கிறிஸ்து. அது உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசம். என்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நபராகச் செய்வது அந்திக் கிறிஸ்து (பாருங்கள்?) ஏனெனில் காத்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் அந்த நபர் உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து கொண்டு, மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மறுபடியும் வருவார். ஆனால் அவருக்குள் இருந்த அவருடைய ஜீவன் என் மேலும், அவரைப் பெற்றுள்ள உங்கள் மேலும் தங்கியிருக்கும் விஷயத்தில், அது முற்றிலும் உண்மை; அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவாகி விடுகின்றீர்கள்.
89. குட்டி மேசியாக்களின் பேரில் நான் அளித்த செய்தி உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? நீங்கள்... மேசியா என்னும் சொல் "அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்னும் அர்த்தம் கொண்டது. இப்பொழுது, நீங்கள், உங்களுக்கு பரிசுத்த ஆவி இருக்குமானால், நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவராகி விடுகின்றீர்கள். பாருங்கள்? அங்கு எல்லாவிதமான அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் உள்ளனர்.
90. இப்பொழுது கவனியுங்கள், அது வேதப்பிரகாரமாக அபிஷேகம் பண்ணப்பட்டவராக இருந்தால். அவர்களில் அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்... பாருங்கள்? இது முழுவதுமே ஒரு பெரிய கதம்பமாக இருப்பதால்... எல்லாவிதமாகவும் கலந்துள்ள ஒன்றாக உள்ளது. சாத்தான் தன் சூழ்ச்சிகள் அனைத்தோடும் வந்து அதை முற்றிலும் பாவனை செய்து விடுகிறான். நீங்கள் முழுவதும் நிச்சயமாயிருக்க ஒரே ஒருவழி; வார்த்தையை வார்த்தையின் மூலம் ஒப்பிட்டுப் பாருங்கள், ஒவ்வொரு வார்த்தையாக ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த ஒரு வழியில்தான் உங்களால் முடியும்.
91. வில்லியம் பிரன்ஹாம் என்னும் நபராகிய நானோ, அல்லது வேறெந்த மனிதனோ ஸ்திரீயோ நமது இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருப்பதென்பது மிகப் பெரிய தவறாகும். ஆனால் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருடைய ஜீவன் உங்களுக்குள் வருவதென்பது...
92. அது மிகவும் அழகாக எலியாவிலும் எலிசாவிலும் முன்னடையாளமாக காட்டப்பட்டுள்ளது. எலியா மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அந்த வயதான தீர்க்கதரிசியாகிய எலியா வீடு சென்றான். அவன் மிகவும் களைப்புற்றிருந்தான். அவனை வீடு கொண்டு செல்ல நதிக்கு அக்கரையில் அக்கினிக் குதிரைகளால் பூட்டப்பட்ட ஒரு இரதம் இருந்தது. அப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா, எலியாவும் எலிசாவும் நதியைக் கடந்த போது (தீர்க்கதரிசிகளின் புத்திரர். அங்கிருந்து கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்); எலியா தன் சால்வையை எடுத்து நதியை அடித்தான். அவன் அவ்விதம் செய்தபோது அது பிரிந்தது; அவன் அதன் வழியாகக் கடந்து சென்றான். அவன் அந்த இளம் தீர்க்கதரிசியை நோக்கி, "என்னை எதற்காகப் பின்தொடருகிறாய்? உன்னுடைய வேண்டுதல் என்ன?" என்று கேட்டான்.
93. அதற்கு அவன், “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு என் மேல் வரவேண்டும்” என்றான். அந்த மகத்தான தீர்க்கதரிசியின் இரட்டிப்பான பங்கு அவன் மேல் வர வேண்டுமா?
எலியா, "நீ கடினமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய்; ஆனால் நான் போகையில் என்னைக் காண்பாயானால், அது உன் மேல் வரும் என்றான்.
94. இப்பொழுது, அந்நாளிலே, அந்த தீர்க்கதரிசி வார்த்தையாயிருந்தான், ஏனெனில் அவன் உலகத்துக்கு வார்த்தையை வெளிப்படுத்துபவனாக இருந்தான். பாருங்கள்? அதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வர வேண்டும் என்பதை அவன் அங்கு அறிந்திருந்தான். அதற்கு இதைக் காட்டிலும் ஒரு பெரிய காரியம் அவசியமாயிருந்தது. இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவர் எலியாகவாக இருந்தார். நான் பிதாவினிடத்திற்குப் போகிற படியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள். (யோவான் 14:12). இப்பொழுது, நீங்கள் அதை எவ்விதம் செய்யப் போகிறீர்கள்? அவரைக் கவனியுங்கள்! அவர் யார்? வார்த்தை! பாருங்கள்? அவரைக் கவனியுங்கள்!
95. இப்பொழுது, சிருஷ்டிப்பு போன்ற காரியத்துக்கு வரும் போது, அது உண்மை. இயேசு நேரடியாக எதையும் சிருஷ்டித்து உருவாக்கவில்லை. அவர் ஒரு பொருளை முதலில் எடுத்தார். அவர்தண்ணீரை முதலில் எடுத்து திராட்சரசம் உண்டாக்கினார். அவர் அப்பத்தை எடுத்து அதிக அப்பங்களை உண்டாக்கினார். அவர் மீன்களை எடுத்து அதிக மீன்களை உண்டாக்கினார். ஆனால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் செய்யப்படுமென்று அவர் வாக்களித்தார். பாருங்கள்? பார்த்தீர்களா? இப்பொழுது ஏன்? அவர் இங்கிருந்ததைக் காட்டிலும் மிகவும் பொல்லப்பான நாளில் இது நடைபெறும். பாருங்கள்? அது இன்னும் அவரே, ஆனால் அவர் உங்கள் சரீரமாகிய கூடாரத்தை உபயோகிக்கிறார். பாருங்கள்?
96. 'உங்களில் இருக்கும் இந்த நபர், அது உங்கள் பிறப்பு... நீங்கள் ஜான் டோ; நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தீர்கள்; ஒரு குறிப்பிட்ட காரியத்தின் கீழ் நீங்கள் பிறந்தீர்கள், அது உங்களுடன் சம்பந்தப்பட் டுள்ளது. நிச்சயமாக சம்பந்தப்பட்டுள்ளது.
97. எனக்குத் தெரியும் நான் முன்பு... அப்பா, “இந்த காலத்தில் நான் உருளைக் கிழங்குகளை நட முடியாது; ஏனெனில் சந்திரன் இப்பொழுது சரியாக இல்லை” என்று சொல்வது வழக்கம். "பில்லி, நீ உருளைக் கிழங்குகளை நடமுடியாது" என்பார்.
98. அதற்கு நான், "நான் உருளைக் கிழங்குகளை சந்திரனில் நடவில்லை, இங்குள்ள தரையில் தானே நடுகிறேன்" என்றேன்.
அவர், "சரி புத்திசாலியே, போய் செய்! நீ முட்டிக் கொண்டு உனக்கு தலையில் சில வீக்கங்கள் வந்தால் தான் பாடம் படிப்பாய்" என்றார். நான் உண்மையில் பாடம் படித்தேன்.
99. உங்களிடம் இதைக் கூறுகிறேன்: ஒரு பலகையை எடுத்து அமாவாசையின் போது வெளியிலுள்ள புல்லின் மேல் வைத்துப் பாருங்கள். அந்த புல் உடனே காய்ந்து போகும். பெளர்ணமியின் போது வைத்துப் பாருங்கள்? ஒரு வாரமாக அதை நீங்கள் வைத்திருந்தாலும் அது புல்லுக்கு ஒரு கெடுதியும் செய்யாது.
100. சந்திரன் மாறுகையில், கடலைக் கவனியுங்கள். சந்திரன் மறையும் போது, பேரலையும் அதை தொடர்ந்து மறைந்து விடுகிறது. சந்திரன் பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள்தொலைவில் உள்ளது. அது மட்டுமல்ல, கென்டக்கி நாட்டில், உப்புத் தண்ணீர் கிடைக்கும் வரைக்கும் ஒரு இரும்புக் கம்பியை நிலத்தின் கீழ் அடியுங்கள். அந்த குழாயை கவனித்துக் கொண்டே வாருங்கள். சந்திரனின் ஈர்ப்பு சக்தி உள்ள போது அது எவ்வளவு ஆழம் உள்ளது என்பதை கவனியுங்கள். சந்திரன் மறையும் போது அது பூமிக்கடியில் எவ்வளவு கீழே போய் விடுகிறது என்பதை பாருங்கள். நிச்சயமாக!
101. நீங்கள் பூமிக்கு மேலே வருகின்ற ஒன்றை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அமாவாசையின் போது, அதை நட்டால் அது முள்ளங்கி அல்லது 'டர்னிப் பை போல பூமிக்கு கீழே இறங்கி விடுவதை பாருங்கள். ஆனால் அதையே பெளர்ணமியின் போது நட்டால், அது நிலத்துக்கு மேலே படர்வதை கவனியுங்கள். நிச்சயமாக, அதற்கும் இதற்கும் சம்பந்தமுண்டு.
102. ஆரோன் ஏன் தன் மார்க்கவசத்தில் அந்த கோத்திரப் பிதாக்களின் பிறப்பு கற்களை வைத்திருந்தான். அந்த தாய்மார் கூறினதை கவனியுங்கள். பிரசவ வேதனையிலிருந்த அந்த எபிரேயத் தாய்மார்கள் பிள்ளைகள் பிறக்கும்போது கூறினது. அவர்களுக்கு பெயரைச் சூட்டினது; அவர்களுடைய பிறப்பை அறிவித்தது; அது அவர்களுடைய சொந்த தேசத்தில் அவர்களை வைத்தது; அவர்களை நித்தியத்துக்கு அமைத்தது.
103. இந்நாட்களில் ஒன்றில் நான் சிறிது காலம் இங்கு தங்க நேரிட்டால், அந்த பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நிச்சயமாக! பிறகு யாக்கோபைக் கவனியுங்கள். அவன் அங்கு மரணத் தருவாயில் இருந்த போது, அவன் கைகளை கோத்திரப் பிதாக்களின் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்த போது, அவர்கள் எங்கிருப்பார்கள் என்பதை சரியாக கூறினான். அது அவர்களுடைய பெயரின்படியும், அவர்களுடைய பிறப்பின்படியும் சரியாக அமைந்திருந்தது. நிச்சயமாக, அது உங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
104. இப்பொழுது, அது உங்கள் பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறு தான் மாம்சப் பிரகாரமான மனிதரும் ஸ்திரீகளுமாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது. அது வெளிப்புறமான புலன் அல்ல. வெளிப்புறத்தில் நீங்கள் பார்த்து, உணர்ந்து, முகர்ந்து. காதுகளினால் கேட்கிறீர்கள். ஆனால் உங்கள் உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான் உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள இங்கேயோ, அவனை நீங்கள் அனுமத்திலாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு உள்ளில் உங்களுக்கு விசுவாசம் உள்ளது. விசுவாசம் வெளிப்புற புலனின் மூலம் வருவதில்லை, அந்த வெளிப்புறப் புலன் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு தவறாகக் காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அப்பொழுதும் அறிந்திருப்பீர்கள்; அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பது. பாருங்கள்? அதை எதுவுமே தொல்லைப்படுத்த முடியாது. அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது. அது அதன் வழியாக கடந்து சென்று விடுகிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை என்பது பட்டயம், அது வெட்டுகிறது. அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறது. பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது. அந்த விசுவாசம் எப்படி இருக்க வேண்டுமென்றால்...
105. இப்பொழுது பாருங்கள், அந்த உட்புறப் புலனில்... இது உட்புறம்; இது வெளிப்புறம். சத்தியம் இங்கு உட்புறத்தில் வெளிப்படுகிறது: வெளியே அது அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தல். "நாம் எல்லோரும் சென்று அசெம்பிளீஸ் சபையை சேர்ந்து கொள்ளலாம்' என்பது நியாயமாகத் தோன்றவில்லையா? எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை பிடிக்கும், எனக்கு ஒருத்துவம் சபை பிடிக்கும், எனக்கு எல்லா சபைகளுமே பிடிக்கும். ஏன் நாம் எல்லோரும் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ளக் கூடாது. அது ஒருக்கால் நமக்கு நன்மை பயக்கும். அது அறிவை பயன்படுத்தி சிந்தித்தல், அது வெளிப்புறம். ஆனால் உள்ளிலோ, அதை கவனியுங்கள். நீங்கள் வேதத்துடன் ஒத்துப் போகாமலிருக்கும் சில காரியங்களை காணும் போது; அசெம்பிளீஸ் சபையைப் பாருங்கள். அவர்கள் செய்யும் அநேக காரியங்கள் வேதப் பிரகாரமானவை அல்ல என்பது என் கருத்து. அவை வேதப்பிரகாரமானவை அல்ல என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். ஆனால் அதில் அநேகருடைய சிந்தைகள் ஈடுபட்டுள்ளன. அசெம்பிளீஸ் சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் வார்த்தையை விசுவாசிக்கின்றனர், அவர்கள் அசெம்பிளீஸ் போதனைகளை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
106. பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், ஒருத்துவக் காரர்கள் மற்ற எல்லோருமே இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு ஒரு கூட்டம் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கின்றனர். மனிதனுக்கு அதிகமான கெளரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர். அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சின்ன ஆள் என்ன சொல்ல முடியும்? அவன் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவான். "நீர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ஆம், அது உண்மை! உ ஊ! ஆம், பேராயர் அவர்களே, போதகர் அவர்களே, அது முற்றிலும் உண்மை" என்பான். அவன் அவருடன் ஒத்துப் போகிறான்.
107. இங்கு, தெருவில் உள்ள ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். தெருவில் செல்கின்ற ஒரு சாதாரண குடிமகன் அவனைக் காணும் போது, "அவன் ஒன்றுக்கும் உதவாதவன்" என்பான். ஆனால் அந்த குடிகாரனை இங்கு நீங்கள் கொண்டு வந்து, அவனைக் காவல் துறையில் சேர்த்து அவக்கு ஒரு 'பாட்ஜ்ஜை குத்தி, அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால், நீங்கள், "காலை வணக்கம், ஜான். உம்மை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி" என்பீர்கள். பாருங்கள்? ஒருவருக்கொருவர் மரியாதை.
108. இயேசு, "நீங்கள் இந்தவிதமான மரியாதை கொண்டிருப்பீர்களானால், உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்?" என்றார், உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல் (அந்த வசனத்தை அப்படியே என்னால் கூற முடியவில்லை), ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த விரும்புகின்றனர். அப்படி செய்யக் கூடாது.
109. ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும் போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய ஆட்கள் ஏதாவது சொல்ல பயப்படுகின்றனர், ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார். அந்த மனிதனை அவமதிக்க வேண்டாம். அவர் நல்லவர் என்று நம்புங்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையே சரியென்றும் அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறு என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். "என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்" (ரோமர் 3:4). அதை கண்டீர்களா? அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம், அதை நாம் விசுவாசிக்க விரும்புகிறோம்
110. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நாம் வார்த்தை அல்ல, ஆயினும் நாம் வார்த்தை. உ ஊ! உங்களுக்கு புரிகிறதா? இயேசு தேவன் அல்ல, ஆயினும் அவர் தேவன். அவர் ஒரு மனிதன், ஆயினும் அவர் தேவன். அவர் அழுதார், ஆயினும் அவர் மரித்தோரை உயிரொடெழுப்பினார். மரித்த ஒருவனுக்காக அவர் அழுதார். ஆயினும் அவனை உயிரொடெழுப்ப அவரால் முடிந்தது. அவர் யேகோவாயீரே, யேகோவா ராஃபர், யேகோவா மனாசே; அவர் யேகோவா, எல்லாவற்றையும் முழுவதுமாக கொண்டிருந்தவர். அவர் யேகோவா, ஆயினும் அவர் ஒரு மனிதன். அவர் பூமிக்கு சொந்தக்காரர், அவர் பூமியை படைத்தவர், ஆயினும் அவருக்குத் தலை சாய்க்க இடமில்லை. அவர், "நான் உண்டாக்கின பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, ஆனால் எனக்கோ தலைசாய்க்க இடமில்லை, நான் உண்டாக்கின நரிகளுக்கு தரையில் குழிகள் உண்டு, ஆனால் எனக்கோ அடக்கம் பண்ணப்படக்கூட இடமில்லை" என்றார். (மத்.8:20). அது உண்மை. அவரை அடக்கம் பண்ண அவர் வேறொருவரின் கல்லறையை கடன் வாங்க வேண்டியிருந்தது.
111. அவர் ஸ்திரீயிலுள்ள கர்ப்பப்பையை உண்டாக்கினவர். ஆனால் பிறப்பதற்கு அவருக்கு கர்ப்பப்பை இருக்கவில்லை; அவர் ஒரு கர்ப்பப் பையை கடன் வாங்க வேண்டியிருந்தது. அவர் பூமியை சிருஷ்டித்தார், ஆனால் அவரை அடக்கம் பண்ண அவருக்கு இடம் எதுவுமில்லை. அவரை அடக்கம் பண்ணுவதற்காக அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு இருந்த தரையிலுள்ள குழியை கடன் வாங்க வேண்டியிருந்தது. பாருங்கள்? அவர்கள் ஓரிடத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது; இருப்பினும் அவர் தேவன், அவர் தேவன் என்பதை நிரூபித்தார்.
112. இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? நாம். நாம் குட்டி மேசியாக்கள், ஆனால் அந்த இயேசு அல்ல. அவர் நம்முடையபிதா; நாம் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகையால் தான் அவருடைய ஜீவன்... அது ஜனங்களை அவ்விதம் நம்பச் செய்கிறது. பாருங்கள், நீங்கள் உட்கார்ந்து கொண்டு சிந்திக்காவிட்டால், "நல்லது, இந்த ஆள் மேசியாதான், அவர் நிச்சயம் அவர்தான்" என்று ஜனங்கள் நம்பும்படி செய்கிறது.
"இங்குள்ள இவர் ஒருக்கால் இருக்கக்கூடும்". அவர்கள் இருவருமே. பாருங்கள்? "அவர்கள் இரண்டு பேர் எவ்விதம் இருக்க முடியும்?" பாருங்கள்? அங்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பாருங்கள்?
113. ஆனால் பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தபோது, அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் ஜனங்களின் மத்தியில் தம்மை பிரித்துக் கொள்ளுதல். ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே...