159. நல்லது, அது இன்னுமாக ... இந்த லத்தீன்-அந்த லத்தீன் வார்த்தைகள் வாடிகன் நகரத்தின் மேல் இல்லை; அது போப்பினுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கின்றது, அவர் உட்கார்ந்திருக்கின்ற அவருடைய சிங்காசனத்தின்மேல் அங்கே "VICARIVS FILII DEI." என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், காலை, நான் எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் எழுதி கொண்டு வருகிறேன். ரோம் எழுத்துக்களில் அதை நீங்கள் எழுத்து கூட்டலாம், VICARIVS FILI DEI, அந்த வார்த்தைக்கு ''தேவனுடைய குமாரனுக்கு பதிலாக; இவர் தேவனுடைய குமாரனுக்கு வாரிசு ஆவார்'' என்று அர்த்தம்.
160. “பேதுரு முதலாவது போப்பாண்டவர் என்றும் அவன் இயேசு கிறிஸ்துவுக்கு வாரிசு'' என்றும் கத்தோலிக்க சபை விசுவாசிக்கின்றது. அது தவறான ஒன்றாகும்! சரி. பிறகு “அவனைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு போப்பாண்டவரும் ஒரு வாரிசு; இப்பொழுது இருக்கின்ற போப்பும் கூட, இப்பொழுது இருக்கிற வரும் இயேசு கிறிஸ்துவின் வாரிசு ஆவார்” என்று உரிமை கொண்டாடுகின்றது. அங்கே இவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றது, “இயேசு கிறிஸ்துவின் வாரிசு, 'VICARIVS FILI DEI' '' என்று அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. ரோம் எழுத்துக்களை எடுத்து எழுதிப்பாருங்கள் (X என்றால் பத்து, V என்றால் ஐந்து, இன்னும் அதைப் போன்று), நீங்கள் "VICARIVS FILI DEI" என்று கூட்டி ஒரு கோட்டை வரைந்தால், உங்களுக்கு அறுநூற்றறுபத்தாறு என்று வரும். அதை எழுதி கண்டுபிடியுங்கள்.
161. இப்பொழுது, எங்கள் விசுவாச மார்க்கத்தின் உண்மைகள் என்னும் புத்தகம் என்னிடம் இருக்கின்றது. கத்தோலிக்க சபையில் அவ்வாறு அது அழைக்கப்படுகின்றது, என்னுடைய ஜனங்கள் ஐயர்லாந்து கத்தோலிக்கர் ஆவர். ஆகவே நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்?
162. அது முற்றிலுமாக உண்மையான ஒன்றாகும், அது சரி, அது அங்கே... வேதாகமம் "அவன் சபையில் அல்லது ஒரு- ஒரு இடத்தில், அல்லது ரோமாபுரியில் ஏழு மலைகளின் மேல் இருக்கின்ற ஒரு சபையில் உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவனுடைய வல்லமை உலக முழுவதும் செல்லும். அவன் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான்” என்று கூறுகின்றது.
163. அதற்கு பிறந்த சிறு சபைகள் அந்த சபையிலிருந்து வெளியே வந்தன, "அவள் ஒரு வேசி என்றும், அவளை பின்பற்றினவர்கள் வேசிகள்" என்றும் வேதம் கூறுகின்றது. அது சரி. உங்களுக்கு புரிகின்றதா. ஏனெனில் அவர்கள் அதே காரியத்தை ஸ்தாபித்து, அவர்களுடைய பிரமாணங்களையும் உபதேசங்களையும் கொண்டிருந்தனர். சற்று அவளைப் போன்று மிக வல்லமையுள்ளவளாக அல்ல, ஆனால் இன்னுமாக அவர்கள் சிறிய விதத்தில், வல்லமையைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மிருகம் என்றால் "வல்லமை'' என்று அர்த்தம். உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே அவர்கள் கத்தோலிக்கர் தான், பெரிய வல்லமையை பெற் றுள்ளனர். மெத்தோடிஸ்டுகள், பிறகு பிரஸ்பிடேரியன்கள், பிறகு லூத்தரன்கள், பிறகு பாப்டிஸ்டுகள், பிறகு இன்னுமாக. இவர்களுடையது சிறிய ஸ்தாபிக்கப்பட்ட வல்லமைகள், ''என்னுடைய சபை! என்னுடைய சபை! என்னுடைய சபை!'' என்று கூறிக்கொள்கின்றனர்.
164. ஆனால் உண்மையான விசுவாசியோ அதைக் குறித்து ஒன்றும் கூறமாட்டான். அது, "என்னுடைய கிறிஸ்து! என்னு டைய கிறிஸ்து! என்னுடைய கிறிஸ்து!'' என்றிருக்கும். அது தான் வித்தியாசம். எப்படி உங்களுக்குத் தெரியும்? அடையாளங் களுடனும் அற்புதங்களுடனும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகருகின்றார்.
165. இதோ ஒரு சிறிய விதமான ஒரு சிறிய ஒழுங்குப் புறம்பான ஒன்று. இதை வாசிப்பதை நான் வெறுக்கிறேன். ஆனால் யாரோ இதை இங்கே வைத்திருக்கின்றனர்: