114. நல்லது, இந்த கேள்வி கேட்டது. உங்கள் மனைவியானால், அதைக் கேட்க அவளுக்கு எல்லா உரிமையுமுண்டு, நீங்கள் உங்களை சரிபடுத்திக் கொள்வது நலம். பாருங்கள்? ஆனால் அவள் பொல்லாதவளாய் இருக்க இதைக் கூறுவாளானால், "இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், உன்னுடைய கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட்டு, நீ சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது உனக்கு நலமாயிருக்கும்." (லூக்.17:2). இப்பொழுது, அதுதான் உங்கள் கேள்வி.
115. ஒருக்கால் இந்த மனைவி அந்த விதமானவளாய் இல்லாமல் இருக்கக்கூடும். அவள் ஒருக்கால் வித்தியாசமானவளாய், நல்லவளாய் இருக்கக் கூடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க அவள் உங்களை பரிசோதிக்கக்கூடும்.
116. இப்பொழுது நீங்கள் அவளுடன் அன்பில் நிலைத்திருங்கள், அவள் இயேசுவை உங்களில் காணட்டும். அப்படிச் செய்யுங்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். சில... இக்காலையில் ஒரு நபரைக் குறித்து ஒரு சிறு விவரணத்தை அளிக்க விரும்புகிறேன்... ஒரு சமயம் இந்த ஸ்திரீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் மிகவும் இனியவள். அவர்கள்... அவள் சொன்னாள். நல்லது, அவளுடைய வாழ்க்கை கடுமையாயிருந்தது. அவளுடைய கணவன் ஒரு குடிகாரன். எனவே, அவள் தொடர்ந்து சகித்துக் கொண்டே வந்தாள். அவன், "தேனே, சபைக்குச் செல்ல விரும்பினால், போய் வா. நான் ப்ரவுன் டெர்பி மதுக்கடைக்கு சென்று வருகிறேன். நீ போய் விட்டு வா" என்பான். எனவே அவர்கள் இவ்விதம் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த மதுக்கடை முன்பு போனிஃப்பர் என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தவராகிய உங்களில் அநேகருக்கு மூலையில் இருந்த போனிப்பர் ஞாபகமிருக்கும். இப்பொழுது அது ப்ரவுன் டெர்பி என்று அழைக்கப்படுகிறது. அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
117. அந்த மதுக்கடையில் அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது, முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு இரவு சபையைக் குறித்தும் கிறிஸ்தவர்களைக் குறித்தும் ஒரு கேள்வி எழுந்தது. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த குடிகாரர்களில் ஒருவன், “இனிமேல் கிறிஸ்தவர்கள் என்று யாரும் கிடையாது. அப்படி யாருமே கிடையாது. இந்த கூட்டம் அனைத்தும் மாய்மாலக்காரரே: அவர்கள் இங்கு புகைபிடித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும், நாம் செய்கிறதையே செய்து கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அப்படி யாருமே கிடையாது” என்றானாம்.
118. இந்த குடிகாரன் உடனே எழுந்து நின்று, "ஒரு நிமிடம் பொறு. எனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஒருத்தி இருக்கிறாள்" என்றானாம்.
அவர்கள், "அது யார்" என்று கேட்க,
அவன் “அது என் மனைவி என்றானாம். பாருங்கள்? அவள் உப்புத் தன்மை கொண்டவளாயிருந்தாள். அவன் அதை எந்நேரமும். கிரகித்துக் கொண்டே வந்தான்.மற்ற குடிகாரன், “அவளுக்கு இறுக்கம் நேரிட்டால், நான் பந்தயம் கட்டுகிறேன், அவள் கிறிஸ்தவளாக இருக்க மாட்டாள்" என்றானாம்.. .
இவனோ, “இல்லை, அவள் அப்பொழுதும் கிறிஸ்தவளாயிருப்பாள்; அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன். நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன். நாம் வீட்டுக்குப் போவோம், அவள் கிறிஸ்தவளா இல்லையா என்பதைக் காண்பிக்கிறேன். நாம் வீட்டுக்குச் சென்று குடித்தவர்களைப் போல் நடிப்போம்” என்றானாம். அவன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினான். எல்லோருமே தள்ளாடிக் கொண்டு உள்ளே வந்தனர். அவன், "நீங்கள் ஏன் இப்படி சுற்றிலும் உட்காரக் கூடாது?" என்று விருந்தாளிகளைப் பார்த்துக் கேட்டு, அவர்களை மிகவும் அன்பாக வரவேற்றான். அவன், மனைவியிடம், "எங்களுக்கு இரவு உணவு சமைத்து தா. எங்களுக்கு பன்றி இறைச்சியும் (ham) முட்டைகளும் வேண்டும்” என்றான். வீட்டில் இவை உண்டு என்று அவன் அறிந்திருந்தான். எனவே அவள் பன்றி இறைச்சியும் முட்டைகளும் சமைத்துக் கொண்டு வந்தாள். அவன் மேசையின் அருகில் வந்து அவர்களைப் பார்த்து விட்டு, அவனுடைய தட்டை எடுத்து அதில் வைக்கப்பட்டிருந்த உணவை தரையில் ஓங்கியடித்து, “இந்த விதமாக முட்டைகளை சமைத்தால் எனக்குப் பிடிக்காது என்று உனக்குத் தெரியுமல்லவா? வாருங்கள், இங்கிருந்து போவோம்" என்று தன் சகாக்களைப் பார்த்துசொன்னான்.
119. அவர்கள் வெளியே சென்று அங்கு உட்கார்ந்து கொண்டனர். அவள் வெளியே வந்து, "அன்பே, நான் வருந்துகிறேன். அதை நான் சரியாக சமைக்கவில்லை. நான் வேறு முட்டைகளை சமைத்து கொண்டு விடுகிறேன்" என்றாள்.
120. அவன், "ஓ, முட்டாள்தனம், அந்த விதமாக முட்டைகளை சமைப்பது எனக்கு பிடிக்காது என்று உனக்குத் தெரியுமே" என்று இவ்விதமாக அவளைத் திட்டிக் கொண்டேயிருந்தான். அவர்கள் அங்கு வெளியே உட்கார்ந்து கொண்டு குடித்தவர்களைப் போல் நடித்துக் கொண்டிருந்தனர். அவள் தன்னையே கண்டனம் செய்து கொண்டு, மிருதுவான குரலில்,
இயேசு சிலுவையை தனியே சுமந்து உலகிலுள்ள அனைவரும் சும்மாயிருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவையுண்டு எனக்கும் ஒரு சிலுவையுண்டு
மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையை சுமப்பேன்.
என்று பாடிக் கொண்டிருந்தாளாம். ஒரு குடிகாரன் மற்றொரு குடிகாரனைப் பார்த்துக் கொண்டு, "அவள் உண்மையில் கிறிஸ்தவள், அவள் அதை பெற்றிருக்கிறாள்" என்றானாம். அந்த ஸ்திரீ அவளுடைய கணவனையும் அங்கிருந்த மற்ற அனைவரையும் கிறிஸ்துவினிடம் அன்றிரவு வழிநடத்தினாள். பார்த்தீர்களா? ஏன்? பாருங்கள்? உண்மையில் இனியவராயிருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அதைக் குறித்து அவருக்கு எல்லாம் தெரியும்.
121. எனவே, சகோதரியே, அல்லது சகோதரனே, அது சகோதரன் தான். ஏனெனில் இங்கு தன் மனைவியைக் குறித்து அவர் கேட்டிருக்கிறார். நீங்கள் உப்புத்தன்மை கொண்டவராயிருங்கள். தாகமடைவதற்கு அங்கு ஏதாகிலும் இருக்குமானால் அவள் தாகமடைவாள். இல்லையென்றால், இதை ஞாபகம் கொள்ளுங்கள், உங்களுக்குத் தவறான நபர் இருந்தால், ஆயிர வருட அரசாட்சியின் போது சரியான ஒன்று கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். எல்லா தவறுகளும் அங்கு சரியாக்கப்படும்.