122. இல்லை, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? அதை மறுபடியும் படித்து அதற்கு ஒவ்வொன்றாக பதிலளிக்க விரும்புகிறேன்.
"மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக் கூடாது. நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா?" இல்லை! நான் அவ்விதம் போதிப்பதில்லை. அதை நான் நம்புவது கிடையாது. இங்கு ஊழியக்காரர் அமர்ந்துள்ளனர், அவர்கள் நாடெங்கும் பரவியுள்ளனர், அவர்கள் அந்த மணவாட்டியின் பாகம் என்று நான் நம்புகிறேன். வார்த்தையை போதிக்கின்ற. அவர்களுக்கு விருப்பமான எந்த சபைக்கும் ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ செல்லலாம் என்பது என் கருத்து. அவர்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற, வேறெந்த சபைக்கும் உங்களால் போக முடியாமல் போனால், நீங்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற இடத்துக்கு செல்லும் வரைக்கும், பாதி வார்த்தையை அவர்கள் போதிக்கும் அந்த இடத்துக்குச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்த போதிலும், சபைக்குச் செல்லுங்கள். அதைச் செய்யுங்கள்.