123. "மேலும் வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையை அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறீரா?"
124. நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் சபைக்குப் போவதற்கு பதிலாக, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், வேலை செய்தல் போன்றவைகளை செய்தால், அது பாவம் என்பது என் கருத்து. நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறவர்களாய் இருப்பீர்கள். அப்படி ஒரு கட்டளை உள்ளதா? ஆம், ஐயா! பழைய ஏற்பாட்டில் ஒய்வு நாள் ஒரு முன்னடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது அனைத்தும்... நீங்கள் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்பதற்காக இயேசு வரவில்லை. பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாள் சனிக்கிழமை, அது வாரத்தின் முடிவு. ஞாயிற்றுக்கிழமை எட்டாம் நாள். அல்லது வாரத்தின் முதலாம் நாள், அந்த நாளில் தான் இயேசு உயிரோடெழுந்தார்.
125. நான் நினைக்கவில்லை அது சரியென்று... நீங்கள் தொலைவில் காட்டில் எங்காவது வேட்டை பயணத்தை மேற்கொண்டு சென்றிருந்தால், அதை சுற்றிலும் சபை எதுவுமில்லை என்றால், உங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை என்றால்; அப்பொழுது நீங்கள் மீன் பிடித்தால், அதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் நகரில், அல்லது சபை நடந்து கொண்டிருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருந்தால், நீங்கள் எப்படியாவது எங்காவது சபைக்கு சென்றே ஆக வேண்டும்...
126. வேலை செய்யும் விஷயத்தில், காளை குழியில் விழுந்து விட்டால், அல்லது ஏதாவதொன்றை ஞாயிற்றுக்கிழமையன்று செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் அதைச் செய்யுங்கள், உங்களால் தவிர்க்க முடியாமல் அதை செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால். ஆனால் ஒரு வேலையைச் செய்ய நீங்கள் ஞாயிறு வரை காத்திருப்பீர்களானால், அதை அவ்விதம் செய்வீர்களானால், நீங்கள் தவறு செய்கிறவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நாம் அவ்விதம் செய்யக் கூடாது, நாம் பரிசுத்த நாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்
127. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், எங்காவது, எந்த இடத்திலாவது சபைக்குச் செல்லுங்கள்... நான் குறிப்பிட்ட ஒரு ஸ்தாபன சபையின் பெயரைக் கூற முடியும், ஆனால் அவ்விதம் நான் செய்ய மாட்டேன், ஏனெனில் இந்த சபை, அவர்கள் போதிப்பதாக நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் என்னவெனில், அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக அறிக்கையிடுகின்றனர். நல்லது, நானும் அதை செய்கிறேன். அவர்களுடைய மற்ற. போதகம் அனைத்தும்... தண்ணீர் பாவத்தைப் போக்குகிறது என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் ஒருத்துவக்காரர் அல்ல. தண்ணீர் மறு ஜென்மம் அளிப்பதாக அவர்கள் விசுவாசிக்கின்றனர். நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஓ, அவர்கள், எங்காகிலும் தெய்வீக சுகமளித்தல் காணப்பட்டால், அது பிசாசினால் உண்டானது என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள் விசுவாசிப்பது அனைத்தும்... அவர்களிடம் உள்ள ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்த புத்தகத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்வதே. உங்கள் பெயர் அங்கு பதிவு செய்யப்படா விட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள் என்பது அவர்கள் கருத்து. இப்பொழுது, நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஆனால் உங்களுக்குப் போக வேறெந்த சபையும் இல்லாமல் போனால், (அவர்களைக் குறை கூற நான் அங்கு செல்லமாட்டேன்), ஆனால் நான் யார் பக்கத்திலாவது உட்கார்ந்திருக்கும்போது என் இருதயத்திலுள்ள கிறிஸ்து அங்குள்ள யாரிடத்திலாவது பாதிப்பை உண்டு பண்ணுவார் என்னும் அந்த நோக்கத்துடன் செல்வேன். அவர்கள் மத்தியில் செல்லுங்கள், ஆனால் அவர்கள் அவிசுவாசத்தில் பங்கு கொள்ளாதீர்கள்.