128. நீ பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால் உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், அருமை சகோதரியே, நீ இங்கு இருப்பாயானால். நான்... சகோ. நெவில், இது இங்குள்ள சபையின் அங்கத்தினரா? (சகோ. பிரன்ஹாம் சகோ. நெவிலிடம் உரையாடுகிறார் - ஆசி). எனக்கும் கூட அவர்களை ஞாபகமில்லை. நீ இங்கு இருப்பாயானால், சகோதரி பெள, இதை நான் உன்னிடம் கூறட்டும். "நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்று வேதம் உரைக்கிறது. அதை நீ பெற்றுக் கொள்ள விரும்பும் காரணத்தினாலேயே நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். பார்? இப்பொழுது, ஞாபகம் கொள், நீ அதை பெற்றுக் கொண்டாய் என்று அர்த்தமல்ல, ஆனால் அதற்காக பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (ஆங்கில வேதாகமத்தில் blessed அதாவது "ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). “அவர்கள் திருப்தியடைவார்கள்". அதில் நிலைத்திரு.
129. "என் குடும்பத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" உனக்கு நீ உபயோகிக்கிற அதே விசுவாசத்தை உன் குடும்பத்துக்கும் உபயோகிப்பாயாக. அவர்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயாக. அது.. அது இங்குள்ள உன் மாம்சசிந்தையில் வருவதற்கு இடங்கொடாதே. அது உள்ளில் உள்ள உன் உள்ளுணர்வில் இறங்கட்டும், அப்பொழுது அவர்கள் உன்னுடையவர்களாகி விடுவார்கள். அதை நீ அங்கு இறங்க விட்டிருந்தால், தேவன் அவர்களை உனக்கு கொடுத்து விட்டார்.
130. இங்குள்ள உன் இருதயத்தில் நீ எதையாகிலும் கொண்டிருந்து, நீ ஜெபம் பண்ணும்போது அதை கேட்பாயானால், நீ கேட்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிப்பாயாக. அதை நீ ஒருக்காலும் இனி சந்தேகிக்க முடியாது. நீ ஒரே நேரத்தில் அதை விசுவாசிக்கவும் சந்தேகிக்கவும் முடியாது. எத்தனை பேருக்கு அது தெரியும்? நீ கேட்டுக் கொண்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது அது உனக்குக் கொடுக்கப்படும் என்று அவர் உரைத்திருக்கிறார். எனவே, உன் குடும்பத்துக்காக நீ விசுவாசிப்பாயாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள்.