131. எனக்கு ஞாபகமில்லை, அது என்னவென்று எனக்கு ஞாபகமில்லை. அது என்னவாயிருந்தாலும், அது என்னவென்று பில்லி பாலுக்குத் தெரியப்படுத்தவும். நான் என்ன வாக்களித்திருந்தாலும், அதை நான் செய்வேன். எனக்கு ஞாபகமில்லை. உங்களுக்குத் தெரியும், சில நேரங்களில் ஒரே இரவில் முப்பது அல்லது நாற்பது தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன (பாருங்கள்?), நான் இங்கிருக்கும் போது இவ்வாறு ஒவ்வொரு இரவும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருப்பதால், அது என்னவென்று ஞாபகம் இருப்பதில்லை என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி?
132. ஓ. இந்த நபர் நகரத்துக்கு புறம்பே இருந்து வருகிறவள். தொலைவிலுள்ள டெக்ஸாஸிலிருந்து. நான்... நல்லது. சகோதரியே, நீ டெக்ஸாஸை சேர்ந்தவளாயிருந்து, இந்த ஒலிநாடாவை நீ பெற நேர்ந்தால் (இதை பதிவு செய்த ஒலிநாடா இருக்காது என்று எண்ணுகிறேன்), ஆனால் அது இருக்கமானால்... (சகோ. பிரன்ஹாம் ஆராதனைகளை ஒலிநாடாவில் பதிவு செய்வதைக் குறித்து விசாரிக்கிறார் - ஆசி). அவர்கள் ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? நீங்கள் பதிவு செய்கின்றீர்களா? சரி, நீங்கள்... இந்தஒலிநாடா... என்ன செய்ய வேண்டுமென்று நான் உன்னிடம் கூறுகிறேன். நீ... இந்த ஒலி நாடாவில் இதை நீ காணும்போது, “எங்கள் மகனையும் ஏழு எக்காளங்களையும் குறித்தென்ன?" என்பதை ஞாபகம் கொள். அதைக் குறித்து எனக்கு ஞாபகமில்லை, ஏழு எக்காளங்களைக் குறித்து பேசும் போது அவனை நான் காண்பேன் என்று வாக்களித்திருந்தாலொழிய. நான் அதன் பேரில் பிரசங்கித்தால், அவனைக் காண்பேன்; ஏனெனில் நான் ஏழு எக்காளங்களின் பேரில் பிரசங்கிக்கவில்லை, எக்காளப் பண்டிகை என்னும் பொருளின் பேரில் தான் பிரசங்கித்தேன். அதைக் குறித்து புரிந்து கொண்டாயா?
133. “என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி.” நான் உன்னிடம் சொல்லுகிறேன், திருமதி கார்னில்ஸன்... அந்த ஸ்திரீ இங்கு இருப்பாளானால், இன்று காலையில் பில்லி பாலைப் பார். இல்லையென்றால், நல்லது, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை (பார்?); அது ஒரு கேள்வி. அது என்னவென்று என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை (பார்?), ஏனெனில் நான் அவளுடைய மகனைக் குறித்தும், எக்காளங்களைக் குறித்தும், அவளுடைய கத்தோலிக்க சகோதரியைக் குறித்தும் ஏதோ ஒன்றை வாக்களித்திருக்கிறேன். அது என் நினைவில் இப்பொழுது இல்லை. பில்லியைப் பார்.
இது... இது ஒரு ஜெப வேண்டுகோள். அது அந்த நபரின் பெயரைக் கூறிவிட்டு, “தலைவலியும் மண்டை சளியும்” என்று குறிப்பிடுகிறது. அது வெறும்... அவர்களுக்காக ஜெபம் பண்ணும் படி கேட்கின்றனர் என்று எண்ணுகிறேன். சரி.