137. ஆம், ஆம்! அது ஒரு காலத்தில் அவர் இருக்கிறேன் என்று அழைக்கப்பட்டார். அவர் யேகோவா என்று அழைக்கப்பட்டார். அது அநேக முறை மாறினது. அது மாறின் கடைசி முறை, தேவன் மாம்சமாகி மனித நாமத்தைக் கொண்டிருந்த போது.
138. யேகோவா, இருக்கிறேன், இவையனைத்தும் ஒரு நாமத்துக்கான பட்டப் பெயர்கள். பாருங்கள்? நீங்கள் யேகோவாவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அது இயேசுகிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். நீங்கள் யேகோவா ராஃபா, யேகோவா மனாசே,யேகோவாயீரே போன்ற நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அதுஇயேசு கிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். இருக்கிறேன் என்பவர் இயேசு கிறிஸ்துவே.
139. ஞாபகம் கொள்ளுங்கள், அன்றொரு நாள் அவர் அங்கு நின்று கொண்டு, "நீங்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தீர்கள் என்று சொல்லுகிறீர்கள்..." என்றார்.
“எங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்தார்கள்."
"அவர்கள் மரித்தார்கள்" என்று கூறினார்.
140. அவர்கள், "நல்லது, நீ பைத்தியம் பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்து கொண்டோம். உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே" என்றனர்.
அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" என்றார். (யோவான் 8:58). பாருங்கள்? அவர் இருக்கிறேன் என்பவராக இருந்தார். தேவனுக்கு சொந்தமாயிருந்த எல்லா பட்டப்பெயர்களும் நாமங்களும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனித நாமமாக ஆனது. சரி.