141. இல்லை, இல்லை! முத்திரைகள் திறக்கப்பட்ட போது, காலம் முடிவுறவில்லை. அதை தவறாகப் புரிந்து கொண்டீர்கள். அப்பொழுது என்ன நடந்ததென்றால், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன, காலம் முடிவுறவில்லை. பாருங்கள்? இப்பொழுது உன்னிப்பாக கவனியுங்கள், நீங்கள் இதை ஒலிநாடாவிலிருந்து பெறுவீர்களானால், ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள்.
142. காலம் முடியவில்லை... இந்த கேள்வியைக் கேட்டவர் ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்து விட்டது என்னும் நம்பிக்கை கொண்ட கூட்டத்தாரில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனெனில் பாருங்கள்? சபையானது வீடு சென்று பூமிக்குத் திரும்ப வந்த பிறகுநமக்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் புதிய வானம் புதிய பூமியின் போது காலம் முடிவடைகின்றது.
143. இப்பொழுது, ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் புதிய வானமும் புதிய பூமியும் அல்ல. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகும் பாவம் இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சி, நோவா பேழைக்குள் பிரவேசித்து, தண்ணீருக்கு மேலே உயர்த்தப்பட்டு, மற்ற பக்கத்தில் காமையும் மற்றவர்களையும் கொண்டு வந்ததற்கு முன்னடையாளமுள்ளது. பாவமும் கூட பேழைக்கு வெளியே வந்தது. பாருங்கள்?
144. ஆனால் ஏனோக்கோ மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறான், மற்ற பக்கத்தில் கொண்டு வரப்பட்டவர்களுக்கு அல்ல. எனவே பாவம் ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்திலும் இருக்கும், ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது அல்ல. பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது சமாதானம் நிலவும். பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்தில் பாவம் ஒழிக்கப்படும், அதன்பிறகு காலம் என்பது மறைந்து விடும்.
145. இப்பொழுது, பரிசுத்த ஆவியால் அருளப்பட்ட ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், நமக்கு முன்பிருந்த காலங்களில் விடப்பட்டிருந்தவைகளை நமக்கு தெரியப்படுத்துவதற்காகவே.
146. இப்பொழுது, ஒரு பெரிய வேத பண்டிதர் அதன் பேரில் என்னை மடக்கப் பார்த்தார். அவர், "சகோ. பிரன்ஹாமே, என்றாகிலும் ஒரு நாள் தேவன் அந்த ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியத்தை உமக்கு வெளிப்படுத்துவார். அவை நாம் இதுவரைக்கும் அறிந்திராத ஒன்றாக இருக்கும், அது வேதத்திலும் கூட எழுதப்பட்டிராத ஒன்றாக இருக்கும்” என்றார். இல்லை, இல்லை! அது அப்படியிருக்காது. ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், அது நம்மை. அவ்விதம் நான் உங்களிடம் கூறினால், நான் கள்ளத் தீர்க்கதரிசியாயிருப்பேன், ஏனெனில் (பாருங்கள்?), இந்த வார்த்தை... அங்கு... எல்லாமே... இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு முழுவதும் இந்த வார்த்தையில் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? ஏழு முத்திரைகள் ஏழு சபைகளைக் குறித்ததாயிருக்குமானால், அது ஏற்கனவே முடிந்து விட்ட ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் லவோதிக்கேயாசபையின் காலத்தில் இருக்கிறோம். இந்த ஏழு முத்திரைகள் அவர்கள் முன் காலத்தில் கூறாமல் விட்டவைகளை வெளிப்படுத்துவதாயுள்ளன. அவர்கள் விட்டவைகளை அது திறந்து கொடுத்தது. லூத்தர் விட்டவைகளை, வெஸ்லி விட்டவைகளை, நமது காலம் வரைக்கும் இருந்து வந்த சீர்திருத்தக்காரர்கள், பெந்தெகொஸ்தேகாரர்கள் விட்டவைகளை.
147. அடுத்தபடியாக நடக்கவிருப்பது. சபை எடுத்துக் கொள்ளப்படுதலும், மோசேயும் எலியாவும் திரும்ப வருதலும், மணவாட்டியும் மணவாளனும் பூமியில் ஆயிரம் வருட காலம் அரசாட்சி செய்தலும், அதன் பிறகு நியாயத் தீர்ப்பும், பிறகு பாவம் முழுவதுமாக அழிக்கப்படுதலும். அப்பொழுது காலம் என்பது இருக்காது.
148. இப்பொழுது... முடிவடையவில்லை... முத்திரைகள் காலத்தை முடித்து விடவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு காலமும் காலங்களும். இல்லை! ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகும் காலம் என்பது இருக்கும்.