149. இல்லை! வேதத்தில் ஒரு சந்ததிக்கு நியமிக்கப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகளே. ஆனால் வேதமோ, "அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்" என்று உரைக்கிறது (வெளி.20:4). அது பூமியில் ஆயிரவருட காலமாக இருக்கும், ஏனெனில் பூமியில் நாம் கணக்கிடும் ஆயிரவருடம் தேவனுடைய கணக்கில் ஒரு நாள் மட்டுமே. பூமியில் ஆயிரவருடம் தேவனுக்கு ஒரே நாள், அவருடைய கணக்கின்படி. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்?
150. எனவே அது ஓய்வு நாள், அப்பொழுது சபை பாவத்துக்கு எதிராக பாடுபடாது. சாத்தான் சிறிது காலத்திற்கு, ஆயிரவருடங்களுக்கு கட்டப்பட்டிருப்பான், ஏனெனில் அவனுடைய பிரஜைகள் அனைவரும் அப்பொழுது நரகத்தில் இருப்பார்கள், அவனுடைய... பூமியிலுள்ள சபை மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கும், எனவே அவனுக்கு கிரியை செய்ய ஒன்றும்இருக்காது. எனவே, நான் ஏற்கனவே கூறினபடி, அது ஒரு சங்கிலியாக இருக்காது, ஒரு நீண்ட சங்கிலியாக. அது சூழ்நிலை என்னும் சங்கிலி. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் உதவியற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், அவனுடைய பிரஜைகள் உயிரோடெழ காத்துக் கொண்டிருப்பான்; அப்பொழுது அவர்கள் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளுமாக பிரிக்கப்படுகின்றனர்.