151. இல்லை! தேவனுடைய நாமம் சாலெமோன் தானா என்று அறிந்து கொள்வதற்காக அவள் சோதிக்கவில்லை. சாலொமோன் ஒரு ராஜா. அவள் அவனிடம் வந்து, "மெய்யாகவே தேவன் அவருடைய ராஜாவோடும் அவருடைய ஜனங்களோடும் இருக்கிறார்" என்றாள். பாருங்கள்? அவள் வந்து, சாலொமோனுக்கு இருந்த வரங்களை சோதித்தாள். அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்தவைகளை சாலொமோன் அவளுக்கு வெளிப்படுத்தினான். அது, அவன் பூமியில் தேவனுடைய ராஜாவாக இருந்தான் என்பதைக் காண்பித்தது.
152. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் நினைக்கிறேன் அவள் வாழ்ந்த சேபா நாட்டில் ஜனங்கள் வந்து அங்கு நடக்கிற மகத்தான காரியங்களை அறிவித்திருப்பார்கள்; அவர்களுடைய ராஜாவை அபிஷேகம் செய்துள்ள தேவன் ஒருவர் அங்கிருக்கிறார் என்றும், எவ்வாறு அந்த ராஜா தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சாலொமோனின் நாமம் தேவனுடைய நாமம் சாலொமோன் என்று அவள் கருதினதாக நான் நினைக்கவில்லை; ஏனெனில் அது அவளை அஞ்ஞானியாக்கிவிடும். பாருங்கள்? ஒருக்கால் அவள் அவ்விதம் செய்திருக்க கூடும். அவளுடைய இருதயத்தில் அவள் தேவன் தான் சாலொமோன் - சாலொமோன் தான் தேவன் என்று எண்ணியிருக்கக்கூடும், ஏனெனில் அவள் ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். ஆனால் சாலொமோன் தனக்கிருந்த சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தினால் அப்பொழுது அது ஞானம் என்றழைக்கப்பட்டது அவளுடைய இருதயத்தில் இருந்த இரகசியங்களை வெளிப்படுத்தின போது, தேவன் சாலொமோனுடன் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஏனெனில் அப்பொழுது... அவர்களுக்கு... அவள் கண்டு கொண்டாள். அவள் அந்த எண்ணத்துடன் வந்திருப்பாளானால்...
153. இங்கு இந்த கேள்வியைக் கேட்டவர், “உண்மையில் சாலொமோன் உண்மையில் கர்த்தருடைய நாமம் சாலொமோன் என்பது அவளுக்குத் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். பாருங்கள்? சாலொமோன் கர்த்தர் அல்ல, அவள் அதை ஜனங்களிடமிருந்து அறிந்து கொண்டாள், ஏனெனில் அவர்கள் யேகோவாவை தொழுது கொண்டனர், அங்கு அந்த மகத்தான உடன்படிக்கை பெட்டி இருந்தது, அதற்குள் அந்த மகத்தான கற்பலகைகள், அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் கர்த்தருடைய கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் சீனாய் மலையைக் குறித்தும், அவர்கள் சென்ற வெவ்வேறு இடங்களைக் குறித்தும், அவளிடம் கூறினார்கள். அப்பொழுது, அந்த கட்டளைகளை அளித்த தேவன் இந்த மனிதனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள், ஏனெனில் தேவனுக்கு மட்டும் உரிய சிந்தனைகளைப் பகுத்தறிதல் இவனிடம் இருந்தது. பாருங்கள்? எனவே தேவன் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கேள்வி கேட்டவர் இந்தவிதமாகத்தான் கேட்டிருக்கக் கூடும். ஆனால், “கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன் என்பதை அவள் அறிந்திருந்தாளா?" என்றுதான் அவர் கேட்டிருக்கிறார். ஒருக்கால் அவர் தன் மனதில் இருந்தவிதமாகவே அதை எழுதவில்லை போலும். பாருங்கள்? எனவே நான் என்ன நினைக்கிறேன் என்றால், "கர்த்தர் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாளா?" என்று கேட்க வேண்டுமென்று அவர் நினைத்திருப்பார். ஆம், அவள் நிச்சயம் அறிந்திருந்தாள். அதுதான் கேள்வி என்றால், நிச்சயமாக! அவள் தேவனை அறிந்திருந்தாள், அவள் அதை குறிப்பிட்டாள், அவள் வேறெந்த தேவனையும் வழிபட மறுத்து விட்டாள். நான் நினைக்கிறேன், அவள் சொன்னாள் அவள் எப்பொழுதும்... அவள் ஏனென்று அறிந்து கொண்டாள். அவளுக்குள் மூச்சு இருக்கவில்லை; கேட்க அவளுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்கவில்லை. சாலொமோன் எல்லாவற்றையும் அவளுக்கு வெளிப்படுத்தினான், தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள்.