154. ஆம், அவ்விதம் நீங்கள் செய்தது தவறாகும். விவாகம் என்பது தேவனுடைய வீட்டுக்கு உரிய ஒன்று. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே விவாகமாகி விட்டதால், நீங்கள் எப்பொழுது உண்மையில் விவாகம் செய்து கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வதாக ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொள்ளும் போதே. திருமணம் பதிவு செய்யும் நீதிபதி உங்களுக்கு விவாக சான்றிதழ் கொடுத்து, விவாகமாகாமல் நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, சட்டப் பூர்வமாக நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழும்படி செய்கிறார். ஆனால் நீங்கள் அந்த பெண்ணுக்கு வாக்களித்து, அவளும் உங்களுக்கு உண்மையாக வாழ்வதாகவும் உங்களை கணவனாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்களிக்கும் அந்த நேரத்திலேயே உங்களுக்கு விவாகமாகி விடுகிறது. உங்களுக்கு ஞாபகமுள்ளதால், அதை நான் போன வாரம் விளக்கிக் காண்பித்தேன். அது போன வாரம் என்றுதான் நினைக்கிறேன். பாருங்கள்?
155. வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் கூட, ஒரு மனிதன் விவாகம் செய்து கொள்ள ஒரு பெண்ணுக்கு நியமிக்கப்படும் போது (அதைக் குறித்த கட்டளைகள் உங்களுக்கு தெரியும். அதை மீறினால், அது விபச்சாரத்துக்கு சமானம்.நிச்சயமாக). அவன் வாக்களித்தால், அவ்வளவுதான்.
156. அன்றொரு நாள், "ஆன்னல்மண்ட்'டும் விவாகரத்தும் ஒன்றா?" என்னும் கேள்வி கேட்கப்பட்டது. பாருங்கள் நண்பனே, இவ்விதமான கேள்விகளை நீங்கள் என்னைக் கேட்கும் போது, அது எனக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லை. இரண்டு மூன்று முறை விவாகமான என் நண்பர்கள் பலர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் என் சொந்த மகன் பில்லி பாலையும் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் உணருகிறீர்களா? நான் பில்லி பாலை மட்டும் சும்மா விட்டு விடுவேனா? இல்லவே இல்லை. பில்லி பால் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அவன் என்னிடம் வந்து, "அப்பா, நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்" என்றான்.
157. நான் என் காரைக் கழுவிக் கொண்டிருந்தேன். நான், "உன் தலையை சுவற்றில் மோதிக்கொள்" என்று சொல்லிவிட்டு, என் காரைக் கழுவிக் கொண்டேயிருந்தேன்.
"நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்" என்றான்.
நான்.. “ஓ, போடா” என்று சொல்லிவிட்டு வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவன் தன் தாயிடம் சென்றான், அவள் அவனைப் பார்த்து கேலியாக சிரித்தாள். அவன் என்ன செய்தான் தெரியுமா? பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணுடன் அவன் ஓடிப் போய் விவாகம் செய்து கொண்டான். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல் செய்தோம் அந்த பெண்ணின் தகப்பனும் நானும். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல்' செய்தோம், இருப்பினும் அவன் விவாகம் செய்து கொண்டதாகவே கருதப்பட வேண்டும். அவன் என் பையன், அவன் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இப்பொழுது, அது முற்றிலும் உண்மை.
158. அவன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பெண்ணுடன் என்னிடம் வந்து, என் மருமகள். என் பேரன்... அவன், “அப்பா, எனக்கு விவாகம் செய்து வையுங்கள்" என்றான்.
159. நான் “முடியவே முடியாது" என்று சொல்லிவிட்டேன். அது என் சொந்த மகன். அவனை நான் தூக்கி சுமந்து, என்னால் முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் செய்து, அவனுக்கு நான் தாயும் தகப்பனுமாய் இருந்து வந்திருக்கையில், இது என் இருதயத்தை ஊடுருவிக் குத்தவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதை கூறுவது என்னைக் கொல்லவில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் அது உண்மை. நிச்சயமாக! என மகன் இங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். என் மருமகளும் என் சிறு பேரனும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அது தவறென்று நான் அவனிடம் கூறுகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூறியாக வேண்டும். அந்த வார்த்தைக்கு நான் கடமைபட்டவனாயிருக்கிறேன்.
160. நீங்கள் திருமணம் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட்டினால் விவாகம் செய்து வைக்கப்பட்டீர்களா? சபை உங்களை விவாகம் செய்து வைத்திருக்க வேண்டும் சபையிலுள்ள போதகர். அதுவேஒரு கிறிஸ்தவன் செய்யக் கூடிய நாணயமான காரியம். ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த வாக்குத்தத்தத்தை, அந்த பொருத்தனையை செய்து கொண்டு, இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டதால், அதனால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள், "நல்லது. நான்..." எனலாம்.
161. ஒருக்கால், "நான் வந்து, மீண்டும் விவாகம் செய்து கொள்ள வேண்டுமா?" என்னும் கேள்வி எழலாம். உங்களுக்குப் பிரியமானால் செய்யுங்கள். உங்கள் விசுவாசத்துக்கு இடையூறாக இருக்கும் எதையும் மனதில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஏதாகிலும் இருந்தால், நீங்கள் இங்கிருந்து முன்னேற முடியாது; நீங்கள் இங்கேயே நின்றுவிடுவீர்கள். அந்த கேள்விக்குறி வரும்போது, இந்த இடத்திலேயே நீங்கள் முடிந்து விடுவீர்கள். ஆனால் இப்பொழுது, என்னைப் பொறுத்தவரையில், அதனால் பரவாயில்லை.
163. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இது என்னை நோகப் பண்ணுகிறது. நான் கேட்டால் அவர்கள் கண்ணையும் பிடுங்கி எனக்குத் தரக்கூடிய மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆண்களும் பெண்களும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் (ஆம், ஐயா!), அவர்கள் இருமுறை விவாகமானவர்கள், சிலர் மூன்று முறையும் கூட. அவர்கள் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் நேசிக்கின்ற என் சொந்த மகன், என் சொந்த பேரன், மற்றும் என் மருமகள்... பில்லியைப் பாருங்கள், அவனை நான் எவ்வளவாக ஆதரித்தேன், அவன் எனக்கு என்ன செய்தான் பாருங்கள். உண்மையைச் சொன்னாலும் சொல்லாமல் போனாலும், உண்மை உண்மைதான்.
164. எனக்கு... இன்று நான் வெளியே சென்று, அசெம்பிளீஸ் ஆப் காட் சபை அல்லது வேறு சபையிலுள்ள ஜனங்களை அழைத்து, "நான் சொன்னதெல்லாம் தவறு, அந்த வார்த்தையுடன் நான் நிலைத்திருக்கப் போவதில்லை, நான் உங்களுடன் நிலைத்திருக்கப் போகிறேன்" என்று என்னால் கூற முடியும். அவ்விதம் நான் செய்தால், எனக்குள்ள இந்த தேவனுடைய வரத்தைக் கொண்டு நான் வெகு விரையில் மிகவும் பிரபலமான ஒருவனாகி விட முடியும். எனக்குள்ள செல்வாக்கு அனைத்தையும் இந்த ஸ்தாபனங்களில்ஒன்றுக்கு அளித்தால், அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும். அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்க வேண்டுமென்ற கவலை எனக்கில்லை. அவர்களை நான் நேசிக்கிறேன், அது உண்மை. ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவ்விதம் நான் செய்தால், நான் ஒரு மாயமாலக்காரனாக இருப்பேன்.
165. இங்கு நான் நின்று கொண்டு, ஒரு பெண்ணுக்கு வாக்களித்த என் சொந்த மகன் இங்கு உட்கார்ந்திருக்கையில், நான் உண்மையைக் கூறாமல் போனால். ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். நான் சொன்னேன். அவனுக்கு அந்த திருமண வைபவம் நடந்திராமல் போனாலும், அவன் அந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, அவளுடன் உறங்கி, அவன் என்ன செய்திருந்தாலும், அவன் அவளுக்கு வாக்களித்த போது அவளை மணந்து கொண்டான் அது பில்லி பாலாயிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும், அது முற்றிலும் உண்மை. அவன் வாக்களித்த போதே அவன் மணந்து கொண்டான். அது நானாயிருந்தாலும், அதுவேதான்.
166. நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். நான் என் மகனுடன் உண்மையுள்ளவனாயிராமல் போனால், உங்களுடன் உண்மையுள்ளவனாயிருக்க முடியாது. நான் உங்களிடம் கூறுவது என் உண்மையுள்ள கருத்து என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதிலிருந்து எதையும் உண்டாக்கி விடாதீர்கள், நான் சொன்னவிதமாகவே அதை சொல்லுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் நான் உங்களுக்கு உண்மையையே உரைக்கிறேன்.
167. இப்பொழுது, நான் உங்களிடம் இவ்விதமாக அடிக்கடி பேசுவதில்லை, ஏனெனில் நீங்கள் என் பிள்ளைகள், அவ்விதமே உங்களை நான் அழைக்கிறேன். நான் சுவிசேஷத்தின் மூலம் உங்களை கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். நாம் இங்கு ஒன்றாய் இருக்கும் போது, நம்முடைய சொந்த குழு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, உங்களை சிறிது கடிந்து கொள்கிறேன். ஆனால் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் வந்து ஏதாவதொன்றை கேட்பீர்களானால், எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சிறந்த முறையில் எடுத்துரைப்பேன். அது வார்த்தையில் இருக்குமானால், அது என்னைக் குற்றப்படுத்தினாலும்எனக்குக் கவலையில்லை, என்னிடமிருந்தும் அநேக காரியங்கள் அகற்றப்பட வேண்டியதாயுள்ளது. நிச்சயமாக!
168. நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டால், நான் உங்களுக்கு பதில் கூறுவேன். உங்களுக்கு நான் ஏதாவதொன்றைக் கூறினால், உங்களுக்கு நான் சத்தியத்தையே கூறுவேன். அவ்விதமாகவே வாழ நான் எப்பொழுதும் முயன்று வந்திருக்கிறேன். அவ்விதமாவே நான் வாழ்ந்து அவ்விதமாகவே நான் மரிக்க விரும்புகிறேன் எவரிடத்திலும் உண்மையுள்ளவனாயிருக்க.
169. அண்மையில் ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள்; அந்த ஸ்திரீ இப்பொழுது இங்கில்லை. டாம் சிம்ப்ஸன், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். டாம் நல்லவர்; அவருடைய குடும்பத்தினர் இங்கில்லை (அவர்கள் எல்லோரும் திரும்பி போய் விட்டனர் என்று நினைக்கிறேன், ஃபிரட் இன்னும் இங்கு இருந்தாலொழிய. நான்... பிரட் சாத்மன், அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவர் இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்) டாம் சிம்ப்ஸன், அவர் ஃபிரட்டுடன் கூட கனடாவிலிருந்து வந்தவர். அவர்கள்... (உங்களுக்கு நமது தர்மகர்த்தா ஃபிரட்டைத் தெரியும்).
170. உங்களில் பலருக்கு சகோ.டாம்மைத் தெரியும். டாம்" அருமையான ஒரு மனிதன்; அவர் சிறந்த உடை உடுப்பவர்; திருமதி சிம்பஸனும் கூட. அவள் மட்டும் நான் சொல்வதற்கு செவிகொடுத்தால், அவள் மீண்டும் நடப்பாள். அவள் ஊனமுற்றவளாய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டதை அவள் மட்டும் செய்வாளானால், அவள் நடப்பாள். அது உண்மையா என்பதை கவனித்து அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள்? இப்பொழுது அவள் அதை எதிர்பார்த்தால், அவள் என்ன செய்ய வேண்டுமென்று கூறப்பட்டதோ, அவள் அதை செய்ய வேண்டும்.
171. அவளுடைய பெண்களில் ஒருத்தி, அழகான சிறு பெண்கள்... நான்... அவர்கள் சிறுமிகளாயிருந்த போது, அவர்களை என் தொடையின் மேல் வைத்து அவர்களுடன் விளையாடுவது வழக்கம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டனர்; அவர்கள் ஏறக்குறைய ஸ்திரீகள், பத்து பன்னிரண்டு வயதுடையவர்கள். எனவே அவர்களில் ஒருத்தி என்னிடம் வந்து, "சகோ.
பிரன்ஹாமே, நான் ஒரு சொப்பனம் கண்டேன்" என்றாள். அவள் என்னிடம் அந்த சொப்பனத்தை உரைத்தாள். "அதன் அர்த்தம் என்ன?" என்று அவள் கேட்டாள்.
நான், "தேனே, எனக்குத் தெரியாது. நான் ஜெபிக்கிறேன், கர்த்தர் எனக்கு அதை அருளுவாரானால், நான் உன்னிடம் கூறுகிறேன்" என்றேன்.
172. அவள், "சரி" என்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் என்னிடம் வந்து, “அந்த சொப்பனம் கிடைத்து விட்டதா?" என்று கேட்டாள்.
நான், "இல்லை, தேனே, எனக்குக் கிடைக்கவில்லை; அவர் எனக்கு வெளிப்படுத்தி தரவில்லை என்றேன்.
173. ஓரிரண்டு வாரம் கழித்து அவள் திரும்பவும் வந்து, "சகோ.பிரன்ஹாமே, அந்த சொப்பனத்தைக் குறித்தென்ன?" என்று வினவினாள்.
நான், “எனக்குத் தெரியாது” என்று சொன்னேன். அவள் ஏமாற்றமடைந்தது போல் காணப்பட்டாள். நான்...
174. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டு, அதை நான் தேவனிடத்திலிருந்து பெறவில்லை என்றால், எனக்கும் கூட ஏமாற்றம் உண்டாகிறது. ஆனால் நான் மாய்மாலக்காரனாக அல்லது பொய்யனாக இருக்க மாட்டேன், உங்களிடம் நான் உண்மையே எடுத்துரைப்பேன். அவர் என்னிடம் கூறுவாரானால், அதை நான் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; அவர் கூறாமல் போனால், நானும் கூறமாட்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். அவ்விதமாக நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
175. அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று என் மனதில் அறிந்திருந்தேன். ஆனால் அது சரியென்று எனக்கு எப்படித் தெரியும்? அதை நான் மறுபடியும் காண வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் நான் சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்து, அது அவ்விதமாக இருக்கவில்லை என்று எப்பொழுதாவது எந்த ஒரு இடத்திலுள்ள யாருமே தன் விரலைச் சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது. ஆம், ஐயா! நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்த ஏதொன்றும் அதேவிதமாக நிறைவேறாமல் போனதில்லை. ஏனெனில் நான் அது அவர். அப்பொழுது அது என் பொறுப்பல்ல, அது அவருடைய பொறுப்பாகி விடுகிறது.
176. நான், "பார். ட்ரூடி, நாம் அரிசோனாவுக் குப்போகிறோம் என்று வைத்துக்கொள்வோம், நீ அங்கு அடைந்த பிறகு நான் உன்னிடம் வந்து, "கர்த்தர் உரைக்கிறதாவது; உன் தம்பி (சிறு ஜானி, அவனுடைய வயிறு எப்பொழுதும் திறந்திருக்கிறது என்று நான் கேலி செய்வது வழக்கம்)... நான் அவளிடம், “அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போனான் என்று வைத்துக் கொள்வோம். நான் உன்னிடம் என்ன நடக்கப்போகிறதென்று உனக்குத் தெரியும், அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போவான்' என்கிறேன். நீ என்னிடம் வந்து, “சகோ. பிரன்ஹாமே...' என்பாய். அல்லது அவனை சகோ. பிரன்ஹாமிடம் கொண்டு செல்லுங்கள்' என்பாய். அதன் பிறகு நீ என்னைத் தேடிக் கொண்டு வந்து, அப்பொழுது நான் வெள்ளை சூட் அணிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருப்பேன். நான் ஜானியின் மேல் கை வைப்பேன். அவன் உயிர் பெற்று ஓடிப்போவான்" என்று சொன்னேன். நான் அவளிடம், "அதே விதமாக நீ மேற்கு பிரதேசத்துக்கு செல்கிறாய், முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு நாள் உன் தாயார் கதறுவதையும், உன் தந்தை கதறுவதையும் நீ கேட்கிறாய். நீ பார்த்த போது, ஜானி வாகனம் ஏறி மரித்துப் போயிருப்பதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?' என்று கேட்டேன். பாருங்கள்? நீங்கள் என்னை நம்புகிறீர்கள். பாருங்கள்? உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் எதையும் ஊகித்து உங்களிடம் கூறப் போவதில்லை. உங்களிடம் நான் உண்மையைக் கூறுவேன், இல்லையென்றால் ஒன்றையும் கூற மாட்டேன். நான் அவளிடம், “அதன் பிறகு நீ என்னிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி' - அல்லது நீ உன் தாயிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி வண்டி ஏறி கொல்லப்பட்டான். அவன் மரித்துப் போனான், அவன் மரித்துப் போனான்' என்று கூறுகிறாய் என்று வைத்துக் கொள்வோம்.
177. டாக்டர் வருகிறார், அவனுடைய கண்களை திறந்து பார்க்கிறார், அவனுடைய இருதயத்தை, அவனுடைய மூச்சை பரிசோதிக்கிறார். அவர், "அவன் இறந்துவிட்டான், அவனை சவக் கிடங்குக்கு கொண்டு செல்லுங்கள்' என்கிறார், அப்பொழுது நீ , "ஒரு நிமிடம் பொறுங்கள்! ஒரு நிமிடம் பொறுங்கள்! அவனை என் கரங்களில் ஏந்திக் கொள்கிறேன்; நாம் நடப்போம்” என்கிறாய். ஆமென்
"ட்ரூடி, நீ எங்கே போகிறாய்?"
“எனக்குத் தெரியாது"
"உன் கரங்களில் என்ன?” இறந்து போன உன் தம்பியை நீ கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். நீ தெருவில் நடந்து சென்று கொண்டேயிருக்கிறாய். ஜனங்கள் "அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்கின்றனர். இல்லை, ஐயா! அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறாள். என்ன நடக்கப் போகிறது?
178. முதலாவதாக என்ன தெரியுமா? நீ உன் தகப்பனிடமும் தாயினிடமும், "பொறுங்கள், நாம் சகோ.பிரன்ஹாமைக் கண்டு பிடிப்போம். அவர் வெள்ளை சூட் அணிந்துள்ள ஒரு மனிதனுடன் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார். அதோ அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று பாருங்கள்” என்பாய். உன் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீ என்னிடம் நடந்து வந்து, "சகோ.பிரன்ஹாமே, நீங்கள் என்னிடம் என்ன கூறினீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?" என்பாய்.
"ஆம், ட்ரூடி, ஜானி எழுந்திரு" அவன்குதித்தெழுந்து தெருவில் ஓடிப் போவான்.
179. நான் என் மனதில் சரியென்று படும் சில காரியங்களை ஊகித்து உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லி விட்டு, அது தவறாயிருந்து, அது நடக்காமல் போனால், அது நிறைவேறாமல் போனால், அந்த பையனைக் குறித்து நீ பயம் கொண்டிருப்பாய். அவனைக் கொண்டு வர வேண்டுமா வேண்டாமா என்று உனக்குத் தெரியாது.
180. உங்களுக்கு உதவி செய்ய தேவன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அது உங்களை வெட்டினாலும், நோகப் பண்ணினாலும், என்ன செய்தாலும், அதை நான் கூறியே ஆக வேண்டும்.
181. இப்பொழுது விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில், நான் அதைக் குறித்து பேசுவதை நீங்கள் கேட்கும் வரைக்கும் அமைதியாயிருங்கள் என்று ஒரு சகோதரனைப் போல உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து கொண்டிருங்கள் (நான் இதன் பேரில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன்).
182. "நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டோம் (ஆம்) திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால்" அருமை சகோதரியே, அருமை சகோதரனே, ஒரு முறை விற்பனையாளன் (Salesman) ஒருவர் என்னிம் இதைக் கூறினார், அவர் கனெக்டிகட் என்னுமிடத்தில் அல்லது அங்கிருந்த ஏதோ ஓரிடத்தில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தாராம் (அவர் ஒரு கிறிஸ்தவர்). அது ஒரு பெரிய ஆலயம், அவர் ஜெபிப்பதற்காக உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்து, ஜெபம் பண்ணுவதற்காக அந்த ஆலயத்தில் முழங்கால்படியிட்ட போது... அவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார், வீட்டைக் குறித்த ஞாபகம் வேறு அவருக்கு வந்து விட்டது. அவர் ஒரு விற்பனையாளர். அவர் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து கொண்டே செல்பவர். அவர் ஏதோ ஒன்றை வாங்குவதற்காக அந்தப் பக்கம் சென்றிருந்த போது, இந்த ஆலயத்தைக் கண்டாராம். "நான் போவேன். நான் உள்ளே போய் ஜெபம் பண்ணுவேன்" என்று மனதில் நினைத்துக் கொண்டாராம். ஆலயத்தின் கதவுகள் திறந்திருந்தன, அவர் உள்ளே சென்றாராம். அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை, அவர் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரமாக அங்கு ஜெபித்துக்கொண்டிருந்த பிறகு, கதவுகள் படாரென்று அடைக்கப்படும் சத்தத்தை அவர் கேட்டாராம். அது ஒருவேளை ஆலயக் காப்போனாக இருக்குமென்று எண்ணினாராம். சிறிது நேரம் கழித்து யாரோ பேசுவதை அவர் கேட்டார். அவர் மெல்ல நழுவி, அது ஆலயக் காப்போனா என்று கண்டுகொள்ள, சுற்று முற்றும் பார்த்தாராம். அங்கு ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் பீடத்துக்கு முன்பாக நின்று கொண்டு ஒருவர் கையை ஒருவர்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மனிதன் அந்த ஸ்திரீயிடம், "அன்பே, உன்னை நான் சட்டப்படி விவாகமான என் மனைவியாக ஏற்றுக் கொள்ளுகிறேன்" என்றாராம். அவளும், “அன்பே, உம்மை நான் சட்டப்படி விவாகமான என் கணவனாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றாளாம்.
"இது என்ன விசித்திரமாயுள்ளதே, இந்த மனிதனும் ஸ்திரீயும் போதகர் இல்லாமலேயே விவாகம் செய்து கொள்கின்றனரே" என்று இந்த பெந்தெகொஸ்தேகாரன் நினைத்தாராம். பாருங்கள்? எனவே அவர் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழ்வார்கள் என்றும், மரணம் தவிர வேறொன்றும் அவர்களைப் பிரிக்காதென்றும் அவர்கள் பொருத்தனை செய்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாராம். அதன் பிறகு அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு, ஒருவரை யொருவர் முத்தமிட்டு, சிரித்துக் கொண்டே ஆலயத்தை விட்டு வெளி நடந்தனராம். அவர் அவர்கள் பின்னால் ஓடிச் சென்று “ஒரு நிமிடம், இது என்னவென்று அறிந்து கொள்ள எனக்கு ஆர்வம் தோன்றுகிறது. நீங்கள் இருவரும் விவாகமா செய்து கொண்டீர்கள்?" என்று கேட்டாராம்.
அவர்கள் “ஆம்” என்றனராம்.
"போதகர் இல்லாமலா?"
அதற்கு அந்த மனிதன், "இல்லை! எங்களுக்கு விவாகமாகி நாற்பது ஆண்டுகளாகி விட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பீடத்துக்கு முன்பாக நாங்கள் விவாகம் செய்து கொண்டோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விவாகத் தினத்தன்று நாங்கள் இங்கு வந்து எங்கள் விவாகப் பொருத்தனைகளை புதுப்பித்துக் கொள்கிறோம்" என்றாராம். பாருங்கள்.
183. ஆனால் விவாகம் செய்து கொள்ளுதலைப் பொறுத்த வரையில், நீங்கள் அவளுக்கு வாக்களிக்கும் போதே, அவள் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறாள்; நீங்களும் அவள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறீர்கள். தேவன் உங்கள் இருவருடைய வார்த்தையையுமே ஏற்றுக்கொள்கிறார் பாருங்கள்? எனவே நீங்கள் வெறுமனே வாக்கு கொடுக்காதீர்கள்... (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகின்றது - ஆசி).