184. நல்லது, ஒருக்கால் அவர்கள், "அவர்கள் தலைமயிரை முன்பாகத்தில் கத்தரிக்கும் போது, அது அப்பொழுதும் நீண்ட தலைமயிராக கணக்கிடப்படுமா?” என்னும் அர்த்தத்தில் கேட்டிருக்கக் கூடும். அது ஒருபோதும் இனி நீண்ட தலைமயிராக கணக்கிடப்படாது, ஏனெனில் அவர்கள் அதை கத்தரித்து விட்டார்கள். பாருங்கள்? ஆனாலும் ஒரு மனிதன் தன் நீண்ட கால் சட்டையை மூன்று முறை வெட்டி அப்பொழுதும் அது மிகவும் குட்டையானதாக இருந்தது போல. என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? (சகோ. பிரன்ஹாம் கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவரிடம் உரையாடுகிறார் - ஆசி). ஓ, அதைக் குறித்து தான் அவர்கள் கேட்டிருக்கிறார்களா? என் மகளை நான் கேலி செய்வதுண்டு. அவைகளை நான் “பூம்ஸ்" என்று அழைப்பதுண்டு, "பாங்ஸ்", அது என்ன பெயரானாலும், இப்படி முன்பாகத்தில் கத்தரித்து விடுதல், அது உங்களுக்குத் தெரியும்.
185. நல்லது, நான் நினைக்கிறேன், முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்துக் கெண்டிருக்கும் சிறு பெண்கள்... ஒருக்கால் உங்கள் தாயார் அதைக் குறித்து உங்களிடம் கூறக் கூடும் (பாருங்கள்), நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினால். நான் நினைக்கிறேன், இருபத்தைந்து வயது பெண் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, சிறு பெண்ணைப் போல் காணப்பட விரும்பினால், அவள் காரின் கண்ணாடி வழியாக ஏற்கனவே கடந்து வந்ததை பின் நோக்க முற்படுகிறாள். சகோதரியே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை பார், நீ ஏற்கனவே கடந்து வந்ததை அல்ல. பார்?
186. இப்பொழுது, தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும் விஷயத்தில் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இவ்வளவுதான் கத்தரித்துக் கொள்ள வேண்டும், இதற்கு மேல் அல்ல என்பதை ஆதரிக்கும் எந்த வேத வசனமும் எனக்கு இல்லை. அதற்கு என்னிடம் எந்த வேத வசனமும் கிடையாது. சகோதரியே, சகோதரனே, யார் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலும், என்னால் உங்களிடம் கூற இயலாது.
187. ஆனால் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான் விரும்புவது என்னவெனில்... என் மகள்கள் ரெபேக்காவும் சாராவும் கூட சிறு பிள்ளைகளாயிருந்த போது அவ்விதம் கத்தரித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, பின்பாகத்தில் தலைமயிரைப் பின்னியிடுவதை நான் கண்டிருக்கிறேன், முன்பாகத்தில் தலைமயிரை இவ்விதம் வாரி விட்டுக் கொள்வார்கள். இப்பொழுது, அவர்களின் சார்பாக நான் பேச வரவில்லை. பாருங்கள்? இல்லை, ஐயா! என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் தலைமயிரில் கத்தரிக்கோலை வைக்காமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் தலைமயிர் இவ்விதம் நீளமாக தொங்கிக்கொண்டிருந்து, தங்கள் கண்களின் மேல் விழாதபடி முன் பாகத்தில் மட்டும் ஒருக்கால் சிறு பெண்கள் கத்தரித்துக் கொண்டால், அது தவறா என்று என்னால் கூற இயலவில்லை. அது தவறில்லை என்று நான் நினைக்கிறேன், பாருங்கள்? ஆனால் நீங்கள்... சகோதரிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்தால், கர்த்தர் அதை எவ்விதம் உண்டாக்கியிருக்கிறாரோ அவ்விதமே அதை விட்டு விடுவதை நான் விரும்புவேன். பாருங்கள்?
188. பெண்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்று அறிவேன்; அது அவர்களுடைய இயல்பு. அவர்கள் அப்படித்தான் காணப்பட வேண்டும். பாருங்கள்? அது நல்லதுதான், ஆனால் உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள் (பாருங்கள்?) உலகத்தாரின் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். அது தவறு... அதை நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள விரும்பினால், அதை கத்தரிக்காதீர்கள். உங்கள் தலைமயிர் பின்னப்பட்டு நீளமாக தொங்கி கொண்டிருந்தால், அதை நீளமாகவே விட்டு விடுங்கள். நீங்கள் சிறுமிகளாக இருக்கும் பட்சத்தில்...
189. நியூயார்க்கில் இருக்கும் என் மாமனுக்கு ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மிகவும் அழகான தலைமயிர் இருந்தது. அது ஆழ்ந்த பழுப்பு நிற தலைமயிர். அவள் தலைமயிரை பின்னி விடுவது வழக்கம். என் தாயாருக்கு... அவர்களுக்கு பின்னின தலைமயிர் முழங்கால் வரை நீண்டிருக்கும். இந்த சிறுமிக்கும் அதே விதமான பின்னின தலைமயிர் இருந்தது; அவளுடைய பெயர் ஜாக்வலின். அவள் அதன் ஒரு பாகத்தை இப்படி நீளமாக வாரி விட்டு, இதை இப்படி கத்தரித்துக் கொண்டிருப்பாள். அது ஏறக்குறைய பதினைந்து, பதினெட்டு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அவள் ஏன்தலைமயிர் முழுவதையும், இப்படி பின்னால் வாரிக் கொள்ளவில்லை, அது இந்த நவீன 'பீட்டில்ஸ்' வைத்திருப்பது போன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் அழகாயிருந்திருக்குமே என்று நான் வியந்த துண்டு... ஓ, அது உண்மை; நானாயிருந்தால் அவ்விதம் செய்ய மாட்டேன். 'பீட்டில்ஸ்'களைப் போல் காணப்படும் எதுவும், உலகத்தாரைப் போல் தோற்றமளிக்கும், அதை விட்டு விடுங்கள். ஆம்!