190. ஆம்! இந்த கணவனுக்கு நீ மனைவியாயிருப்பாயானால். அவர் உன்னைக் குற்றப்படுத்தவில்லை, நீ அவரைக் குற்றப்படுத்தக் கூடாது (பார்?), ஏனெனில், புருஷன் மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகிறான். பார்? நான் நினைக்கிறேன், அவர் ஏதாகிலும் ஒரு ஸ்தாபன சபைக்குச் சென்று, நீ அவருடன் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினால். பார்? நீ வேண்டாமென்று... பார், அங்குள்ள எதுவும் உனக்கு கேடுண்டாக்காது, ஏனெனில் அவர்கள் போதிக்கிறதற்கு நீ எப்படியும் செவிகொடுக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களுடைய போதகத்தை நீ விசுவாசிப்பதில்லை என்று நீ இங்கு கூறியிருக்கிறாய். பார்? எனவே அது உனக்கு கெடுதி விளைவிக்காது, ஆனால் நீ உன் கணவருக்கு மரியாதை செலுத்துகிறாய். அவருக்கு உன்னை ஒப்புக் கொடுக்கிறாய், ஒருக்கால் அவ்விதம் செய்வதனால் நீ... அவர்கள் இந்த காரியங்களை அங்கு போதிப்பார்களானால்... உனக்கு அதைக் காட்டிலும் மேலான காரியங்கள் போதிக்கப்பட்டுள்ளது; நீ உப்புத்தன்மை கொண்டவளாய் இருப்பாய்; அவர் உன்னைக் கண்டு கர்த்தரிடத்தில் வருவார். நான் மற்ற கேள்விகளுக்கு செல்கிறேன். என்னே இது. இப்பொழுது மணி என்னவென்று பாருங்கள்?