192. இதை சற்று முன்புதான் விளக்கினேன். மாடு குழியில் விழுந்து விட்டால், அதை தூக்கி வெளியே எடுக்கலாம், ஆனால் அதை ஞாயிறன்று வெளியே எடுப்பதற்காக அதை குழியில் தள்ளி விடாதீர்கள்.
சகோ. பிரன்ஹாமே, நீங்கள் அடுத்த ஞாயிறு இங்கு பிரசங்கம் செய்வீர்களா?
193. அது ஒரு கேள்வி மட்டுமே. இல்லை, சகோதரியே, சகோதரனே, அது யாராயிருந்தாலும். இப்பொழுது. இவை இங்கு கிடந்திருந்தன. யாராவது அதை உறையில் போட்டிருப்பார்கள்.
சகோதரனே... இது உங்களுக்கு, சகோ. காப்ஸ், "நீங்கள் 'நாம் ஒருக்காலும் வயோதிபமாவதில்லை' என்னும் பாடலைப் பாடுவீர்களா? நான் இதை... இது எப்படியோ மற்றவைகளுடன் கலந்து விட்டது.