194. இப்பொழுது, அவர் அந்த வேத பாகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது, அது ஆபகூக் 2:1-4. சகோதரனே, சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டது யாராயிருந்தாலும் (பெயர் எதுவுமில்லை, அது நல்லது). இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், உங்கள் இருதயத்தில் என்ன உள்ளதென்று நான் அறிந்து கொள்வேன். (பாருங்கள்?), அதன்பிறகு நான் உங்களிடம் கூறுவேன். இல்லை. பாருங்கள்? உங்கள் பெயர் வேதத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை (பார்த்தீர்களா, பாருங்கள்?), ஆனால் நீங்கள் வேதத்தில் உள்ள வரைக்கும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தில் இருக்கின்றீர்கள்; நீங்கள் அவருக்குள் வேதத்தில் இருக்கிறீர்கள் (பார்த்தீர்களா?), நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தின் பரிபூரணத்தில் இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, உங்கள் முழு நிலையில் இருக்கிறீர்கள். எல்லோரும் இதை புரிந்து கொண்டீர்களா?
195. அதை வைத்திருக்கிறீர்களா, சகோ.நெவில்? என்ன? ஆம். ஆபகூக்... இதை நான் படிக்கவில்லை, இது இங்கே போடப்பட்டிருந்தது, இன்று காலையில் என்று நினைக்கிறேன். ஆபகூக் 2:1-4. அதுதான் இது. ஆபகூக் 2:1 முதல் 4 வசனங்கள்.
நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலை கொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும் போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும் படிக்குப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
196. நல்லது, நான் நினைக்கிறேன், இதைக் கேட்ட இந்த அருமையான நபர்... பார்த்தீர்களா? இது என்னை நேசிக்கின்ற யாரோ ஒருவர், இல்லையென்றால் அவர் இதை எழுதியிருக்க மாட்டார். பாருங்கள்? இப்பொழுது, நான் கூற முடியாது என்... வேதம் என் பெயராகிய வில்லியம் பிரன்ஹாம் என்பதை கூறவில்லை, அல்லது உங்கள் பெயரையும், நீங்கள் யாராயிருந்தாலும் நாம் எப்படியும் அவருக்குள் இருக்கிறோம். இவைகள்...
197. இப்பொழுது, வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள நன்றாகத் தெரிந்த சில பாகங்கள், குறிப்பிட்ட காரியங்களை உரைப்பதை நீங்கள் காணலாம். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், வேதத்தில் சரித்திரம் மீண்டும் நிகழ்கிறது. பாருங்கள்? வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். (உங்களில் பலர் எழுதிக் கொள்வதைக் காண்கிறேன்). இப்பொழுது, மத்தேயு 3ம் அதிகாரத்தில் “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது' என்று கூறப்பட்டுள்ளது. (மத்.2:15) உங்களுக்கு ஸ்கோ ஃபீல்ட் அல்லது வேறெந்த ஒத்தவாக்கிய வேதாகமம் இருக்குமானால், நீங்கள் ஒத்தவாக்கியங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது யாக்கோபை, இஸ்ரவேலை எகிப்திலிருந்து வரவழைத்த வேத வசனத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். பாருங்கள்? யாக்கோபு அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன்; இயேசுவும் கூட அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன். எனவே (பாருங்கள்?) தேவனுடைய வார்த்தை ஒரு போதும் முடிவு பெறுவதில்லை. பாருங்கள், நாம் வேதத்தில் நம்மை வெவ்வேறு விதமாக அடையாளம் கண்டு கொள்கிறோம்... கிறிஸ்தவ கதாபாத்திரங்களுடன் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுதலின் பேரில் நான் அரிசோனாவிலுள்ள, பீனிக்ஸில் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? ஆம், உங்கள் அநேகரிடம் அந்த செய்தியின் ஒலிநாடா உள்ளது. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் உங்களை வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ள இயலும். நீங்கள் கிறிஸ்தவரல்லாத போதிலும், உங்களை நீங்கள் வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பாருங்கள்? எனவே அது உங்களுக்கு உதவியாயிருக்குமென்று நினைக்கிறேன். என்னால் முடிந்த வரையில் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறேன்.