198. "கிருபை முடிந்துவிட்டதா? அப்படி ஒரு போதும் நினைக்காதீர்கள். பாருங்கள்? நீங்கள் எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருங்கள். பாருங்கள்?
199. "ஜெப வரிசைகளில் சிலர் கிருபை பெறுவதை நாங்கள் கவனிக்கிறோம்". நிச்சயமாக! கிருபை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன பாருங்கள்? நான் நினைக்கிறேன் நீங்கள் போகுமிடத்தில் இந்த எண்ணம்... பாருங்கள், இந்த வேத வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த எனக்கு நேரமில்லை (பாருங்கள்?). இவை ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த. அவர்கள்... ஜெப வரிசையில் நீங்கள் கிருபையைப் பெறுகின்றீர்கள், நிச்சயமாக
200. இயேசு இன்று பிற்பகல் வரப் போகிறார் என்று நான் அறிந்தால், இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைஅப்பொழுதும் செய்து கொண்டிருப்பேன் (பாருங்கள்?), அதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். கிருபை எப்பொழுதும் திறந்துள்ளது. பாருங்கள்?
201. இப்பொழுது, நான் நினைக்கிறேன், இந்த எண்ணம் எங்கு உங்களுக்கு கிடைத்ததென்றால், ஏழு சபை காலங்களுடனும், ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு முடிக்கப்பட்டதுடனும் இது சம்பந்தப்பட்டது. பாருங்கள்? ஏழு முத்திரைகள், என்ன நடக்கிறது என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினது. ஏழாம் சபை காலம், நாம் ஏழாம் சபை காலத்தின் முடிவில் இருக்கிறோம். நான் முடிவு என்று கூறும்போது, இந்த மணி நேரத்தில், இந்த நிமிடத்தில் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே வேதம் என்ன உரைத்ததென்றால்; பவுல், “காலம் சமீபமாயிருக்கிறது” என்று கூறினான். அது தேவனுடைய நேரத்தின்படி எவ்வளவு காலம் என்று நீங்கள் உணருகிறீர்களா? அது நேற்று. என் காலத்தின்படி அது இரண்டாயிரம் ஆண்டுகள். பாருங்கள்? காலம் சமீபமாயிருக்கிறது. பாருங்கள்? சமீபமாயிருக்கிறது என்று தேவன் அழைப்பது, நாம் சமீபமாயிருக்கிறது என்று அழைப்பது போன்ற ஒன்றல்ல. பாருங்கள்?
202. எனவே தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து... தேவன் இன்னும் கிருபையை திறந்துதான் வைத்திருக்கிறார். உங்களால் முடிந்தவரை, அதற்குள் வேகமாக பாய்ந்தோடுங்கள். நிறுத்துவதற்கு நேரம் வரும்போது, தேவன் அதை நிறுத்துவார். பாருங்கள்?