203. இரக்கம் வேண்டுகிறேன்! சகோதரனே, சகோதரியே, என்னைத் தவிர வேறு யாருமே பிரசங்கிக்கக் கூடாதென்று யார் உங்களுக்குச் சொன்னார்களோ! அப்படியானால் நான் தேவனுக்கு மிகவும் மோசமான பிரஜையாயிருப்பேன். இல்லை! தன் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பை உணரும் ஒவ்வொரு மனிதனும் ஊழியத்தில் பிரவேசித்து பிரசங்கம் பண்ணத் தொடங்க வேண்டும்; அவர்கள் நமக்குத் தேவை.
204. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவனுடைய மனிதர் உலகெங்கிலும் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். பாருங்கள்? நான் கடற்கரையில் உள்ள அநேக பெரிய கற்களின் மத்தியில் ஒரு சிறு கூழாங்கல் மட்டுமே. பாருங்கள்? எனவே நான்... பிரசங்கிப்பதற்கு என்னைக் காட்டிலும் அதிகம் தகுதி வாய்ந்த, மற்றவைகளை அதிகம் பெற்றுள்ள அநேகர் உள்ளனர்; நான் இங்கு கிடக்கின்ற மிகவும் சிறிய, எளிய ஒருவன். களஞ்சியம் முழுவதிலுமுள்ள கோதுமையில் நான் ஒரு சிறு கோதுமை மணியே. பாருங்கள்? எனவே அது ஒரு... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா?
205. தேவனால் அழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம்.