167. சரி. இதே காரியத்தைக் குறித்து கேட்கப்பட்ட அவைகளில் மூன்று என்னிடம் இங்க இருந்தது.
168. கால் கழுவுதலைக் குறித்து, நல்லது, அதைக் குறித்து நான் துவங்குகிறேன். சரி, நீங்கள் ஒருக்கால் வித்தியாசப்பட்ட கருத்தை உடையவராக இருக்கலாம், அதனால் பரவாயில்லை. சற்று சிலவற்றை நான் வாசிப்பேனாக. அல்லது நீங்கள் அதை வாசிக்க விரும்பினால்,
பரிசுத்த யோவான், 13 வது அதிகாரத்தை சற்று எடுங்கள். இங்கே உங்களை நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்து தாமே என்ன கூறியிருக்கிறார் என்பதை கவனியுங்கள், பிறகு நான் உங்களை ஏற்பாட்டிற்குள் (Testament) கொண்டு சென்று அது இன்னுமாக கை கொள்ளப்படுகின்றது என்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.
2வது வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். '
அவர்கள் போஜனம் முடிவடைந்து கொண்டிருக்கையில் சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டிகொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு (ஆங்கில வேதத்தில் உள்ளபடி -தமிழ்யாக்கியோன்)
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதையும் தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து,
(அவர் ஆவியிலிருந்து வெளியே வந்து, மாம்சத்திற்குள் சென்று ஆவிக்குள்ளாக மறுபடியும் திரும்ப வந்து விட்டார். பாருங்கள்?) ஆகவே போஜனத்தை விட்டெழுந்து வஸ்திரங்களை கழற்றி வைத்து ஒரு சிலையை எடுத்து அரையிலே கட்டிக் கொண்டு
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது அவன் அவரை நோக்கி ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
இயேசு அவனுக்கு ..... நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
(ஓ உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா! சரி) அதற்குச் சீமோன் பேதுரு ... என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூட .... என்றான்.
ஆகவே இயேசு அவனை நோக்கி முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும், மற்றபடி அவன் கத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
தம்மை காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்த படியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, திரும்ப உட்கார்ந்து அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவர் ரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால் . . .செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
169. இரண்டு தீமோத்தேயுவில் பவுல் சபைக்கு எழுதும் போது, "ஒரு விதவையானவள் பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவியிருந்தாலொழிய அவள் சபையில் விதவைகளின் கூட்டத்தில் கொண்டு வரப்படக்கூடாது.'' அது சரி. கால் கழுவுதல் வேதாகம நாட்கள் முழுவதுமாக அனுசரிக்கப்பட்டது. ஆகவே தேவனுடைய ஒத்தாசையினால் நான் என் சரியான மனதை வைத்திருப்பேனானால், தேவன் எனக்கு உதவி செய்வாரானால், நான் மரிக்கும் வரை அதைக் கைக்கொள்வேன். அது சரி, அது இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு முற்றிலுமான கட்டளையாகும்.
- இப்பொழுது, இங்கே ஒரு தாக்குமுனை கொண்ட கொட்டுகின்ற ஒரு கேள்வியாக இது இருக்கப் போகின்றது.