206. வேதாகமத்தைப் படித்து ஜெபிப்பதே. தேவனுடைய வசனத்தைப் படித்து ஜெபியுங்கள். நான் வேகமாக செல்லப் போகிறேன். என்னால் கூடுமான வரையில் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகிறேன்,
ஒரு கேள்வியை நான் அனுப்பியிருந்தேன், ஆனால் அதை தவறாகக் கேட்டு விட்டேன். நகரத்தை விட்டுச் செல்லும் முன்பு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்துவீர்களா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில், உம்மிடத்தில் தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெறுவது எப்படி?
207. இப்பொழுது, இந்த நபர் காலையில் பேட்டிக்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். நாங்கள் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தினோம். எங்களுக்கு சுகமளிக்கும் ஆராதனை ஒன்று இருந்தது.