208. (நாம் பார்ப்போம், அவர்கள் இங்கு ஒன்றை கோடிட்டுள்ளனர்.) தீர்க்கதரிசனம் உரைக்கும் போது நமது தலைமயிரை நாம் எடுத்துவிடலாமா... (நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றால்), நாம் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, தலைமயிரை எடுத்து விடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா?
209. நீங்கள் தலைமயிர் துண்டு (hair piece) ஒன்றை அணிந்திருப்பீர்களானால், அவ்விதம் செய்யலாம், ஆனால் வீட்டில் டோப்பாக்கள் அல்லது அது போன்ற ஒன்றை அணிந்து கொள்ளும் விஷயத்தில்... நான் அதில் சரியாக காட்சியளிக்கக் கூடுமானால், நானும் கூட ஒருக்கால் ஒன்றை அணிந்து கொள்வேன், ஆனால் பீட்டில் டோப்பாவை அல்ல, ஒரு தலைமயிர் துண்டை.
210. அது உண்மை. உங்களுக்குத் தலைமயிர் இல்லாமல் இருந்து, நீங்கள் ஒன்றைப் பெற விரும்புவீர்களானால், உங்களால் அதை செய்ய முடியுமானால், அதனால் தவறொன்றுமில்லை. ஆம், ஐயா! ஒரு ஸ்திரீக்கு தலைமயிர் போதுமான அளவுக்கு நீளமாக இல்லையென்றால், அவள் சவரி மயிர் போன்ற தலைமயிரை அதனுடன் இணைத்துக் கொள்ள விரும்பினால், அதைப் போட்டுக் கொள்ளுங்கள், சகோதரியே, என்று நான் கூறுவேன்.
211. ஒரு மனிதனுக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்து, ஏதாவதொரு விதத்தில் அதை தடுக்க விரும்பினால், அல்லது தன் மனைவிக்கு நன்றாக காணப்பட விரும்பினால், அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்ள விரும்பினால், அப்படியே செய்யுங்கள். அதனால் தவறொன்றும் இல்லை (இல்லை, ஐயா!) நீங்கள் பல் கட்டிக் கொள்வது அல்லது செயற்கை கை வைத்துக் கொள்வது போல. இயற்கை உங்களிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்து விட்டு, இவைஅதற்கு பதிலாக நமக்கு கிடைக்கிறதென்றால், அதை செய்யுங்கள். அது முற்றிலும் சரி.
ஆனால் அது இங்கு என்ன கூறுகிறதென்றால், "ஜெபிக்கும் போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, நாம் தலை மயிரை எடுத்துவிடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா?" இதன் அர்த்தம் என்ன?
212. சரி, அதை படியுங்கள் சகோ. நெவில்.. 4 முதல் 6 வசனங்கள். சரி, சரி.
ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். (அதாவது. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருக்குமானால். சரி).
ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும், தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்... (அது அவளுடைய கணவன்). அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே.
ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள். (அவள் தலைமயிரை 'பாப்' செய்து கொள்ள விரும்பினால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். பாருங்கள்? அவளுக்கு முடியாதென்றால்...) தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.
213. அங்கு, தலைமயிரை எடுத்து விடுவதையும் போட்டுக் கொள்வதையும் குறித்து எதுவும் சொல்லப்பட்டதாக என்னால் காண. முடியவில்லை. அவள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை முழுவதுமாக சிரைத்துப் போடக்கடவள் என்றுதான் அவர் கூறியிருக்கிறார். பாருங்கள்? ஏனெனில், அவள் தலைமயிரை வைத்துக் கொள்ள விரும்பாமல் போனால்; ஏனெனில் தலைமயிர்தான் அவள் முக்காடு. ஆனால் ஒரு மனிதன் தன் தலையை மூடிக் கொண்டால், ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் வைத்துக் கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றால், அங்கு அவன் ஸ்திரீயைப் போல் காணப்படுவான். பாருங்கள்? ஆகையால் அவன் அவ்விதம் வைத்துக் கொள்ளக் கூடாது. பாருங்கள்?
214. தலைமயிரை எடுத்து விடுவதும் போட்டுக் கொள்வதும் என்பதை என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றால்... ஒரு மனிதன் தன் தலையை முக்காடிட்டுக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைப்பதென்றால், அவன் அந்த முக்காட்டை எடுத்து விட வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடும். பாருங்கள் இல்லை. அதுவல்ல. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருந்தால் அவன் தலையை மூடிக் கொண்டதாக அர்த்தம். இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்டவரே, நீங்கள் இன்னும் சிறிது கீழே வாசிப்பீர்களானால், ஸ்திரீக்குத் தலை புருஷன் என்பதாக நீங்கள் கண்டு கொள்ளலாம். எத்தனை பேருக்கு அது தெரியும்? புருஷனின் தலை கிறிஸ்து; எனவே கிறிஸ்துவுக்காக ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவருக்குள் மனிதன், ஸ்திரீ, எல்லாருமே உள்ளனர். அவர் தகப்பன், தாய், சகோதரி எல்லாமுமாய் இருக்கிறார். ஆனால் ஒரு மனிதனுக்குள் ஆண்மை மட்டுமே உள்ளது. எனவே அவன் கிறிஸ்துவின் நிமித்தம் அதை கத்தரித்து விட வேண்டும். ஆனால் ஒரு ஸ்திரீக்குள் பெண்மை மட்டுமே உள்ளது. எனவே அவள் தன் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் அவளுடைய புருஷன் அவளுக்கு மேல் இருக்கிறான். அவன் அவளுடைய ஆண்டவன், ஆளுகை செய்பவன்; எனவே அவள் நீண்ட தலைமயிர் வைத்திருக்க வேண்டும்.
215. பிறகு, அவள் அதை கத்தரித்து விட வேண்டுமென்று சொன்னால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். ஆனால் அழகாக காணப்பட வேண்டிய ஒரு ஸ்திரீக்கு தன் தலைமயிரை சிரைத்துக் கொள்வது வெட்கமாகவோ அல்லது அவமானமாகவோ இருந்தால், அவள் தன் தலையை மூடிக் கொள்ளக் கடவள்; அவள் நீண்ட தலைமயிரை வைத்துக் கொள்ளக் கடவள். பாருங்கள். எனவே அது... எவருக்குமே... எல்லாருக்கும் விளக்கப்பட்டு விட்டதா? அது சரியாக தொனிக்கிறதா? அப்படியானால், அது உங்களுக்கு விளங்கி விட்டால் "ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் "ஆமென்" என்கின்றனர் - ஆசி), சரி.