216. நல்லது, உங்கள் பிள்ளைகள் செல்லும் வழியை அனுசரித்து அது இருக்கட்டும். பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் வாலிபமுள்ளவர்கள்; அவர்கள் அறியத்தகாததை திணிக்கின்ற ஏதாவது ஒரு கூட்டம் மக்களிடையே நீங்கள் அவர்களைக் கொண்டு செல்வீர்களென்றால், நான் அவ்விதம் செய்ய மாட்டேன். அவர்கள் ஒலிநாடாக்களின் வாயிலாக போதுமானதை அறிந்து கொள்வார்களானால்... நீங்கள் அவர்களை ஒரு கத்தோலிக்க சபைக்கோ அல்லது அத்தகைய வேறொரு சபைக்கோ கொண்டு செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; அந்தவிதமான ஆலோசனையை நான் உங்களுக்கு கூற மாட்டேன். பாருங்கள்? அவர்கள்...
217. ஆனால், அங்கு ஒரு நல்ல சபை உங்களுக்கிருந்து, அவர்கள் ஒருக்கால் உங்களுடன் இரண்டு மூன்று காரியங்களில் ஒத்துப் போகாமல் இருந்தாலும், அவர்கள் முழு சுவிசேஷ ஜனங்களாக இருந்து, உங்கள் பிள்ளைகள் அங்கு ஞாயிறு பள்ளிக்கு செல்ல விரும்பினால், அது முற்றிலும் சரி. ஆனால், பாருங்கள், நீங்கள் ஒரு இடத்தை அடைவீர்களானால்... உங்கள் பிள்ளைகள் அதை எவ்விதம் எடுத்துக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தது. பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர், அவர்களில் ஏற்படும் விளைவு என்னவென்பதை கவனித்து வாருங்கள்.