219. இந்த நபர் ஆரிகானைச் சேர்ந்தவர். இப்பொழுது, என் அருமை... இது யாரென்று எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது... ஓ, ஆமாம், எனக்குத் தெரியும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். உங்கள் மகன்... அந்த நபர் இங்கு இருப்பாரானால்... நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். இல்லையென்றால், நீங்கள் போன வாரம் இருந்திருப்பீர்கள். பாருங்கள்? அது போன வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுடன் வந்திருக்கும். உங்கள் மகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார், பாருங்கள், அது அவர் கட்டுப்படுத்துகிறார். அவர்தான் உங்களுடன் ஆரிகானில் வேட்டைக்கு செல்ல எனக்கு அழைப்பு விடுத்தார் என்று நினைக்கிறேன். அங்கு... அது சரியென்று எண்ணுகிறேன். எனக்கு இந்த நபரை கடிதம் மூலமாகத் தெரியும். எனவே... இல்லை! சீர்பொருந்துதலுக்காக (perfecting) அவர்கள் இந்த சபைக்கு வர விரும்புகின்றனர். பாருங்கள்? நாங்கள் இங்குள்ள இந்த சபையில் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்கிறோம், ஆனால் சீர்பொருந்துதல் நமக்கும் தேவனுக்குமிடையே உண்டாகின்ற ஒன்று. கிறிஸ்துவின் இரத்தமே நம்மை பரிசுத்த ஆவியில் சீர்பொருந்தப் பண்ணுகிறது. பரிபூரணப்படுத்துகிறது.
220, இப்பொழுது சபையில், “வரங்கள் இயங்குகின்றன" என்று அவர் கூறியுள்ளார். இங்கு நிறைய வரங்கள் இயங்குவதில்லை, ஆனால் சில வரங்கள் எங்களிடையே காணப்படுகின்றன. எங்களிடையே அந்நிய பாஷை பேசும் வரங்களும், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் உள்ளன (இரண்டு மூன்று வரங்கள்).
221. நான் நினைக்கிறேன் இங்குள்ள சகோ. ஹிக்கின்பாதம், அவர் இப்பொழுது எங்கிருந்தாலும், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம் உள்ளது. சகோ. ஜூனியர் ஜாக்சன் இன்று நம்முடன் 'இருக்கிறார், அவரும் அந்நிய பாஷை பேசுவார். பிறகு பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் இரண்டு மூன்று பேர் நமக்குள்ளனர். நமது போதகர் சகோ.நெவிலும் கூட அந்நிய பாஷை பேசுகிறார், சில நேரங்களில் தீர்க்கதரிசனமும் உரைக்கிறார். கர்த்தர் அவர் மேல்...
222. அன்றொரு நாள் அவர் ஒன்றை தீர்க்கதரிசனமாகக் கூறினார். நான் சென்றிருந்த ஒரு வீட்டில் அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர் ஒருவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும், குடிகாரன் ஒருவனின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் உடனே உண்டாகும் என்றும் அவர்களிடம் கூறினார், அப்படி ஏதோ ஒன்று. அந்த மனிதன் குடிபழக்கம் உள்ளவர்களை சீர்திருத்தம் பண்ணும் விடுதியிலிருந்து குடிகாரனாகவே வெளியே வந்து, அறுபத்தெட்டு நாட்களாக மதுவைத் தொடவேயில்லை, அதற்கான மருந்து ஒன்றும் சாப்பிடவேயில்லை. அது சகோ.நெவில் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகும்...
223. எனவே, எங்கள் மத்தியில் சில வரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, உங்கள் எவரோடும் எங்களுக்கு ஐக்கியங்கொள்ள மிக்க மகிழ்ச்சி. அதற்கான ஒரு வாய்ப்பு இருக்குமானால், உங்களுக்கு வேலை அருகில் எங்காகிலும் இருக்குமானால், அல்லது எங்களிடம் வந்து ஐக்கியம் கொள்ள விரும்பினால், எங்களால் எதை செய்ய முடிந்தாலும், அதைக் குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம். பாருங்கள்? ஆனால் பரிபூரணப்படுதல் கிறிஸ்துவுக்கே உரியது.