225. இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி. என்னால் இதற்கு கொடுக்கக் கூடிய நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பெற இது தகுதி வாய்ந்தது. ஆனால் நான்... பாருங்கள்? எனக்கு நேரமில்லை... நான் காலையில் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும், இன்னும் மூன்றில் இரண்டு பாகம் கேள்விகள் உள்ளன. அதிகமான கேள்விகள், அவை அனைத்தையும் பார்க்க முடியாது. பாருங்கள்? என்னால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவை எங்குள்ளது என்று காணாமலே, அவைகளை பொறுக்கி எடுக்கிறேன், இதில் மிகவும் நல்ல சில கேள்விகள் உள்ளன என்று அறிவேன், அவைகளுக்கு விடை தெரிய வேண்டும் உதாரணமாக சர்ப்பத்தின் வித்து போன்றவை விளக்கப்பட வேண்டும். ஆனால் நான் துரிதப்பட்டு, இவைகளை வேகமாகப் பார்க்கப் போகிறேன்.
226. "உபத்திரவ காலத்தில் மரித்த சபை (பாருங்கள்?) உயிர்தெழுதலில் இருக்குமா? இரண்டாம் உயிர்த்தெழுதலில்.
227. “அவர்களும் தேவபக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?" நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பார்கள்.
228. “அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா?" இல்லை! மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி. 20:5). இப்பொழுது, இது மிகவும் சுருக்கமான பதில், ஆனால் நான் உறுதி கொண்டிருக்கிறேன்...